ஹைக்கூ

ஹைக்கூ
==========================ருத்ரா.

நாலு ஊரை அடைத்துக்கொள்ளும்
ஆலமரத்தை
மேசையில் "போன்சாய்" ஆக்கினேன்.

________________________________

இலக்கணம் இல்லாமல்
சொற்களில்
பலூன் ஊதினேன்.

________________________________
அவள் காதலைச்சொல்ல
அந்த கண்ணாடி வளையல்கள்
போதும்.
________________________________

வானமும் நட்சத்திரங்களும்
என் பேனாவில்
எப்போதும் துப்பிக்கொண்டிருக்கும்.

_______________________________-

அவள் கொலுசு பரல்களில்
நாள் முழுதும் குடியிருந்தேன்
அவள் மனம் நுழைய.

________________________________


.

எழுதியவர் : ருத்ரா (19-Sep-17, 11:19 pm)
Tanglish : haikkoo
பார்வை : 98

மேலே