குரு வந்தனம்

குரு வந்தனம்

வந்தனம் குரு வந்தனம்
குரு பாதம் பணிந்திடுவோம்...
தினந்தினம் செயல் தொடங்கையில் குரு தியாகம் நினைத்திடுவோம்......
கற்றதும் பெற்றதும் குரு தயவால்தான் எனும் உண்மை உணர்ந்திடுவோம்....
பட்டமும் பதவியும் ஆசானால்தான் எனும் அடிப்படை புரிந்திடுவோம் ....
பாறையிலுள்ள சிற்பங்களெல்லாம் உளிகள் தானே உயிர்ப்பிக்கும்....
பாறையாய் வந்த நம்மையெல்லாம் உயிர்ப்பித்த உளி குருதானே...
அறிவை புகுத்தி அறியாமை செதுக்கி
நற்சிலையொன்று செய்தாயே
அது தன்னை மறந்து உன்னை நினைந்து
நன்றிகள் கூறி நிற்கிறதே.....
கற்றதையெல்லாம் கற்றுக்கொடுக்க நிந்தனை செய்து நிற்கவில்லை......
அறிந்ததையெல்லாம் அள்ளக்கொடுத்து
சிந்தனை சிலிர்க்க வைத்தாயே!!
அறியாமையினால் பிழைகள் செய்தால் அனுபவம் சொல்லி தடுத்தாயே!!
ஊக்கம் கொடுத்து உணர்வை தொடுத்து
பல பரிசுகள் பெறச்செய்தாயே!!!!
உன்னால் முடியும் உன்னால் முடியும் என்னும்
மந்திரம் சொல்லி வளர்த்தாயே!!!
எங்கள் வெற்றிகளெல்லாம்
வெளியே காண
மெழுகாய் உருகி நின்றாயே//
மறவோம் உனை மறவோம்
எங்கள் ஜீவன் மண்ணில் சாயும் வரை...
தொழுவோம் இறை தொழுவோம்
உன் அறப்பணி என்றும் தொடர்ந்திடவே!!


ஆக்கம்: இராஜா ஸ்ரீநிவாசன்

எழுதியவர் : ராஜா ஸ்ரீனிவாசன் (19-Sep-17, 11:12 pm)
Tanglish : guru vanthanam
பார்வை : 150

மேலே