டிஜிட்டல் காதல்
உன் கண்கள்
காட்சிப்பேழையெனில்,,,
அதில்,,
சிந்திய தேனில்
சிற்பம் காண்பேன்....
சில அந்திவான்களின் வானவில்
பார்ப்பேன்!!!!
நீ அனுப்பிய பரிசின் அர்த்தம்
அறிவாயோ????
அது ஆயிரமாயிரம் கதை சொல்லும்!
லட்சம் கோடி கதைகள் பேசும்...
அதில்,,
உன் வியர்வை வாசம் வீசும்........
நொடிக்கு 11.2 கி.மீ வேகத்தில்,,
பூமியை விட்டு விண்ணிற்குச்
செல்வேன்...
அங்கே,,
நம் காதல் விதையை நட்டு
மோக மரத்தை வளர்ப்பேன்.....
(ஜினியாவிற்குப் பிறகு...)
அதில்,,,
இச்சை நீரை ஊற்றுவேன்!!!
வளரும் பன்னீர்ப்பூக்களில்,,,
என் கண்ணீர் தெளிப்பேன்..
ஆனந்த களிப்பாய்...!!!
கன்னத்தில் முத்தமிட்டால்
கள்வெறி கொள்ளும்
தருணத்தை பரையடிப்பேன்...
வீழ்ந்தே மடிந்திடினும்
வசப்படும் ஜனனத்தை
ஆர்ப்பரிப்பேன்....
பகுதி நேர முத்தமும்,,
முழு நேர காதலும்,,
சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க!!