விவசாயியை காக்க

சட்டம்மிட்டு தன்னிலை உயர்த்திய
சகுனி ஒருவனாலே இப்படி ஆனபோதும்,
நெஞ்சில் துளி உறுத்தலின்றி ஒருவனால் நகைக்க முடியுமெனில்,
ஆதிக்கம் அகம் குலைந்து
செம்மையோ இல்லாமலே போகும்...
இளைஞன் நெஞ்சில் பயமென்பதே இல்லையேல்,
எட்டுத் திசையும் எதிர்ப்பு கூட்டங்கள்
ஆகுமெனின்,
உன்னால் என்னால் அல்லாது நம்மால் என்றுணர்கையில்
சரித்திரம் ஒன்று பிறக்கும்...
நாளைய தேசம் நம் கையில்...

எழுதியவர் : (20-Sep-17, 2:42 pm)
சேர்த்தது : அபு
பார்வை : 91

மேலே