மணவாளனாய் ஏற்றுக்கொள்

மற்றவர் கண்டும்
காணாத
திமிரே...

உன்னை கடந்து செல்லும்
போதெல்லாம்
கவனித்தும் சென்றேனடி....

பிறை சந்திரனை
நெற்றியில் சூடியவளே...
பிழை இல்லா
பிம்பமடி உன் நிலா
முகம்...

உன் பின்னளில்
பதிந்திட்ட
என் கண்களுக்கு
எப்போது விருந்தளிப்பாய்
கார்மேக கூந்தலை
மயில் தொகை போல்
விரித்து ...

எழில் கொஞ்சும்
கொடி இடையாளே
உன் மனதை
கொள்ளை அடிக்கவும்
உன்னை அனைத்துக்கொள்ளவும்
துடிக்கிறதே என் இதயம்...

மன்றாடிக் கேட்கிறேன்
மணவாளனாய் ஏற்றுக்கொள்...

என்றும்...பத்மாவதி.

எழுதியவர் : பாரதி (22-Sep-17, 10:36 am)
பார்வை : 204

மேலே