கலங்காது சென்று வா

தேடி வந்ததால்
நான்
தேவையற்றவளாகி
விட்டேன்...
கேட்காமல் கொடுத்ததால்
என் அன்பும்
அனாவசியமாயிற்று ...
நாடி வந்ததால்
நம் நட்பும்
நம்பிக்கை இல்லாது
போயிற்று...
கொஞ்சம் நில்
சொல்வதை
கேட்டு செல்...
இன்று போகிறேன்
உன்னை
விட்டு அல்ல
விலகி...
நீ...
மறுபடியும் வந்தால்
என்னை தேடாதே
விட்டு சென்ற இடத்தில்
தான் நான் இருப்பேன்
அன்றும்
உனக்காக காத்திருப்பேன்
கலங்காது சென்று...
வா....
என் தோழியே
என்றும்...பத்மாவதி