நினைவின் சரமாய் உன்நினைவுகள்




இருகைகளால் கோப்பையை பற்றி
கைகளுக்குள் மிதச்சுட்டில்
இதமாய் பதுக்கிய நொடிகளில்
கோப்பையின் விளிம்பில்
இதழ் குவிய நெருங்கி
மிடர் மிடராய் நாவை
நனைத்து கடக்கையில்
நினைவின் சரமாய்
பொழிகிறது உன்நினைவுகள்...💘
♦ பாரதி நீரு...✍

எழுதியவர் : பாரதி நீரு (23-Sep-17, 3:09 am)
பார்வை : 309

மேலே