என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 60

ஞாயிறு மாலை, முபாரக்கின் காரில் பிரவீன், காயத்ரி, விஜி மூவரும் வளவனூர் நோக்கி பயணிக்க, விஜிக்கு டேவிட்டின் கால் வந்தது.

"விஜி, ஐ ஆம் இந்த விழுப்புரம், ஷல் வீ மீட்?" என்றான் டேவிட்.

"இல்ல டேவிட், நான் பிரவீன் அண்ட் காயத்ரி கூட இருக்கேன், சோ வில் மீட் யு இன் அநதர் அகேஷன்" என்றாள் விஜி.

"அவங்களும் வரலாமே, நோ ப்ராப்ளேம், அவங்க உன்னோட பிரெண்ட்ஸ் தான" என்றான் டேவிட்.

மிகவும் அன்புத்தொல்லையாக இருந்ததால் "ஒரு நிமிஷம் லைன் ல இரு" என்று டேவிட்டும் பதில் சொல்லிவிட்டு பிரவீனிடமும் காயத்ரியிடமும் கேட்டாள் விஜி.

"ஏய், அவன் சரியான லூசு டி, மேட்ச் வேற வருது, பிரவீன் கூட ஏதாவது ப்ராப்லம் பண்ணுவான். வேணாம் னு சொல்லு" என்றாள் காயத்ரி.

"இல்ல விஜி, அது தப்பு, அவன் கூப்பிடறான், பாவம், டோன்ட் அவாய்ட் ஹிம், நாம வரோம் னு சொல்லு, எங்க வரணும் னு கேளு" என்றான் பிரவீன்.

"அப்புறம் உங்க இஷ்டம்" என்றாள் காயத்ரி எரிச்சலாக.

"எங்க டேவிட் வரணும், சொல்லு" என்றாள் விஜி.

"ரொம்ப ஹேப்பி விஜி, நீயே லொகேஷன் செலெக்ட் பண்ணு" என்றான் டேவிட்.

"சரி நீ உங்க காஸ்மா பாலிடன் க்ளப் ல வெய்ட் பண்ணு, நாங்க ஆல்ரெடி கூட்ரோட்டில இருக்கோம்" என்றாள் விஜி.

"ஓகே விஜி, ஓகே" என்றான் டேவிட்.

"பிரவீன், காஸ்மா பாலிடன் க்ளப்" என்றாள் விஜி.

கார் காஸ்மா பாலிடன் வாசலில் நின்றது. அங்கே ஏற்கனவே டேவிட் அவன் காரில் நின்றிருந்தான்.

விஜியை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி "ஹாய் விஜி, ஆப்டர் எ லாங் டைம், எப்படி இருக்க" என்றான் டேவிட்.

"ம்ம்ம், நல்லா இருக்கேன் டேவிட், நீ எப்படி இருக்க, உன்னோட இந்த பிரென்ச் பியர்ட் உனக்கு நல்லா இருக்கு" என்றாள் விஜி.

"தேங்க்ஸ் விஜி, காயத்ரி.....ஹவ் ஆர் யு, டேய் பிரவீன், நீ எப்படி டா இருக்க, உங்க டீம் எப்போ நேம் குடுக்க போகுது? ஏதாச்சும் சேஞ்சஸ் இருக்கா உங்க டீம் ல?" என்றான் டேவிட்.

"நான் நல்லா இருக்கேன் டேவிட்" என்று காயத்ரி கூறினாள்.

"நான் நாளா இருக்கேன் டா, ஐ திங்க் நோ சேஞ்சஸ், உன்னோட டீம் எப்படி" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், ஐ திங்க் சேம் டீம் தான்" என்றான் டேவிட்.

"நெறய சேஞ் டா உன்கிட்ட, உன்னோட கோபம் எல்லாம் எதுவும் இல்ல, ரொம்ப மெச்சூர்டாக ஆயிட்டே" என்றான் பிரவீன்.

"தேங்க் யு டா, வாங்க ஏதாவது சாப்பிடலாம், எங்க போலாம்" என்றான் டேவிட்.

"இல்ல டேவிட், நாளைக்கு எர்லி மார்னிங் சென்னை போகணும், ஒன் டே ப்ரோக்ராம் இருக்கு, சோ நான் கிளம்பறேன்" என்றாள் விஜி.

"ஓ அப்டியா, ஓகே ஓகே, ஒரு நிமிஷம்" என்றபடி தனது கார் கதவை திறந்து ஒரு பார்சலை எடுத்தான் டேவிட்.

அதை பிரவீனிடம் கொடுத்து, "இது உனக்கும் உன்னோட டீமுக்கும் என்னோட கிப்ட் டா, கிரிக்கெட் புல் கிட, ஆல் தி பெஸ்ட் டா" என்றான் டேவிட்.

ப்ரவீனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. "டேய் என்ன டா இவ்ளோ காஸ்ட்லீ கிப்ட் எல்லாம்" என்றபடி டேவிடை கட்டி அணைத்துக்கொண்டான்.

"விடு டா, நான் எவ்ளோ உன்னை ஹர்ட் பண்ணிருக்கேன் அதுக்கு காம்பென்செட் னு வெச்சுக்கோ, ஆல் தி பெஸ்ட் ஒன்ஸ் அகெய்ன் டா" என்றபடி "இது காயத்ரிக்கு" என்றபடிஇ அவளுக்கு ஒரு பார்சல்.

"இது என்ன டேவிட்" என்றாள் காயத்ரி.

"ஓபன் அண்ட் சி" என்றான் டேவிட்.

அதில் விலை உயர்ந்த சுடிதார் இருந்தது.

"இது ஸ்பெஷல், விஜிக்காக" என்றான் டேவிட்.

ஆச்சர்யமாக இருந்தது விஜிக்கு.

இவனது இந்த மாற்றம் அவளால் ஏற்க முடியவில்லை.

"ஐ லவ் யு விஜி, ஸ்டில் அண்ட் பாரெவர், ஐ ஆம் நாட் போர்சிங் யு பட் திங்க்...டேவிட் ஆல்வேஸ் தேர் பார் யு" என்றபடி அந்த கிப்டை விஜி கையில் வைத்தான்.

"இதுல என்னை டேவிட் இருக்கு?" என்றாள் விஜி.

"கோல்ட் ஆங்கிலேட்"என்றான் டேவிட்.

"இவ்ளோ காஸ்ட்லீ கிப்டுக்கு நான் டிசேர்வா டேவிட்?"என்றாள் விஜி.

"டோன்ட் பி சில்லி விஜி, ஓகே, நாளைக்கு சென்னை போகணும் னு சொன்னியே, கோ கோ கோ அண்ட் டேக் ரெஸ்ட், பிரவீன், கேர்புல்லா ஓட்டு டா" என்றபடி தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் டேவிட்.

மூவரும் வளவனூர் நோக்கி கிளம்பினர்.

"என்ன டி விஜி, இப்டி ஒரு சேஞ் டேவிட் கிட்ட நான் எக்ஸ்பெக்ட் பண்ணல டி" என்றாள் காயத்ரி.

"நானும் அதே ஷாக் ல தான் டி இருக்கேன், ஏன் இப்டி ஒரு சேஞ் அவன்கிட்ட" என்றாள் விஜி.

"ஏய், அவன் நெஜமாவே உன்னை ரொம்ப லவ் பண்ரானோ" என்று விஜியின் காதில் முணுமுணுத்தாள் காயத்ரி.

"ஷட் அப் காயத்ரி, அவன் என்னிக்கும் என்னை இப்டி எல்லாம் பண்ணி இம்ப்ரெஸ் பண்ணி என் மனசுக்குள்ள வர முடியாது, பட் அவன் கிட்ட நான் ரொம்ப டிஸ்டன்ட் மெயின்டெய்ன் பண்றேன் ஆனாலும் ஏன் இப்டி பண்ரான், ஐ ஹாவ் டு எக்ஸ்பிளேன் டு ஹிம் சூன்" என்றாள் விஜி காயத்ரியின் காதில்.

"ஹலோ...என்ன ரகசியம் பேசறீங்க, சத்தமா பேசுங்க" என்றான் பிரவீன்.

"ஒண்ணும் இல்ல, நீ சீக்கிரம் போ" என்றாள் விஜி.

காயத்ரியை அவள் வீட்டில் டிராப் செய்துவிட்டு இருவரும் விஜியின் வீட்டை அடைந்தனர்.

அன்று இரவு சாப்பாடு முடித்துவிட்டு பிரவீன் காரில் பிரேக் ஆயில், கூலண்ட் மற்ற அனைத்து சிஸ்டமும் சரியாக இருக்கிறதா என்று பார்த்தான். விஜி வெளியே வந்தாள்.

"என்னை டா பண்ற" என்றாள் விஜி.

"ஆயில், கூலண்ட் எல்லாம் செக் பண்றேன், நாளைக்கு லாங் ட்ரிப் இல்ல?" என்றான் பிரவீன்.

"ஓஹோ, இதெல்லாம் கூட உனக்கு தெரியுமா?" என்றாள் விஜி.

"ம்ம்ம், ஏதோ ஓரளவுக்கு" என்றான் பிரவீன்.

"எல்லாத்தையும் தெரிஞ்சுக்கோ எல்லாத்தையும் புரிஞ்சுக்கோ ஒண்ணை தவிர, நீ சரியான மங்கா டா" என்றாள் விஜி.

"ஹலோ, நான் எல்லாத்தையும் ஈஸியா அண்டர்ஸ்டெண்ட் பண்ணிடுவேன், எதை புரிஞ்சுக்காம இருக்கேன் சொல்லு பாப்போம், அந்த ஒரு விஷயம் எது....சொல்லு" என்றான் பிரவீன்.

சொல்லிவிடலாமா என்று தோன்றியது விஜிக்கு, ஆனால் ஒரு சிறிய பயம்."ஒண்ணும் இல்ல, நீ எல்லாம் சரியாய் இருக்கான்னு பாத்துட்டு வந்து சேரு" என்று சலித்துக்கொண்டே உள்ளே சென்றாள் விஜி.

இரவு விஜிக்கு நல்ல உறக்கம், எப்போதும் போல் பிரவீன் நாலரை மணிக்கு எழுந்தான். உடற்பயிற்சி முடித்து கிளம்பி தயாரானான். விஜி ஐந்தரை மணிக்கு தான் எழுந்தாள். ஆனால் வேகமாக கிளம்பினாள்.ராமயா மெசேஜ் அனுப்பி இருந்தாள். "ஸ்டார்ட்டட்???" என்று.

ஆறரை மணி ஆனது வளவனூரை தாண்ட. கார் சீரான வேகத்தில் விக்கிரவாண்டி, திண்டிவனம், மருவத்தூர், மதுராந்தகம் என முன்னேறி சென்னை நோக்கி சென்றது.

யேசுதாஸ் பாடல்களை கேட்டபடி பிரவீன் ஓட்ட, விஜியோ அவன் தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டு வந்தாள். அவள் டிஸ்டர்ப் ஆகிட கூடாது என்பதற்காக ஒரு கையால் அவளது கன்னத்தை பிடித்துக்கொண்டே ஒரு கையால் சீரான வேகத்தில் காரை செலுத்தினான் பிரவீன். தாயின் தோளில் உறங்கும் பிள்ளை போல அவ்வளவு கம்போர்ட்டாக விஜி உறங்கிக்கொண்டு வந்தாள்.

வண்டி மாமண்டூரை வந்தடைந்தது, காரை நிறுத்தினான் பிரவீன், "விஜி, விஜி, எழுந்திரு, ஏதாவது சாப்பிடறியா, பசிக்குதா?" என்றான் பிரவீன்.

உறக்கத்தில் இருந்து எழுந்து சோம்பல் முறைத்தபடி "எங்க ரீச் ஆயிருக்கோம்? திண்டிவனமா?" என்றாள் விஜி.

"திண்டிவனமா.....ஏய் நாம மாமண்டூர் ல இருக்கோம், இன்னும் அரைமணி நேரத்துல சென்னை, பசிக்குதா சாப்பிடறியா?" என்றான் பிரவீன்.

"என்னை டா, இவ்ளோ நேரமாவா தூங்கி இருக்கேன், தனியா பேச்சு துணை இல்லாம எப்படி டா இவ்ளோ தூரம் ஓட்டிட்டு வந்த, அதுவும் ஒரு சின்ன ஜெர்க் கூட நான் பீல் பண்ணல" என்றாள் விஜி ஆச்சர்யமாக.

"நீ கூட்ரோடு வரும்போதே என்னோட தோளில் சாஞ்சு தூங்க ஆரம்பிச்சுட்ட, எழுப்பி பின்னால படுக்க வெக்கலாம் னு தான் நெனச்சேன், உன்னோட தூக்கத்தை கலைக்க விரும்பல, அதான், ஒரு கையால உன்னோட தலையை என் தோளோடு புடிச்சுகிட்டு ஒரு கையால வண்டி ஓட்டிட்டு வந்தேன், இப்போ கூட உன்னை எழுப்ப மனசு இல்ல டா, ஆனா உனக்கு பசிக்குமோன்னு தான், அதுமட்டும் இல்ல, உன்னோட தலையை தோளோடு புடிச்சுட்டே நூத்தி அம்பது கிலோமீட்டர் ஓட்டிருக்கேன், கை மறத்து போச்சு டா, டிராபிக் வேற இல்ல, எர்லி மார்னிங்கா, சோ கியர் கூட அதிகம் மாத்தும் வேலை கூட அதிகம் இல்ல டா, சாரி டா' என்றான் பிரவீன்.

"டேய் என்ன டா சொல்ற, கை மறந்துபோச்சா" என்றபடி வண்டியில் இருந்து இறங்கினாள் விஜி.

ப்ரவீனும் இறங்கினான். இறங்கி கையில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக்கொண்டான், பின் முகம் கழுவிக்கொண்டான். "என்னை விஜி சாப்பிடற, அதோ மோட்டல் இருக்கு, இந்த கவர்மெண்ட் பஸ் எல்லாம் நிக்குமே அந்த மோட்டல், சாப்பிடறியா" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், பூரி சாப்பிடலாமா" என்றாள் விஜி.

"ம்ம்ம், ஓகே வா, உக்காரு" என்றான் பிரவீன்.

கார் மோட்டலுக்குள் சென்றது.

ரம்யா கால் செய்தாள்.

"அக்கா, எங்க இருக்கீங்க" என்றாள் ரம்யா.

"மாமண்டூர் டி, டேக்கிங் ப்ரேக்பாஸ்ட, நீ என்னை பண்ற" என்றாள் விஜி.

"நான் இப்போ தான் எழுந்தேன். ரெடி ஆயிட்டு எங்க பேர்வெல் கு போகணும், நீயம் நேர அங்க வந்துடு" என்றாள் ரம்யா.

"லொகேஷன் எது டி" என்றாள் விஜி.

"அரும்பாக்கம் தெரியுமா" என்றாள் காயத்ரி.

"இரு நான் பிரவீன் கிட்ட தரேன், அவன்கிட்ட ரூட் சொல்லு" என்றபடி பிரவீனிடம் கொடுத்தாள் விஜி.

"ம்ம், ஹலோ, சொல்லு ரம்யா, எப்படி இருக்க, குட் மார்னிங்" என்றான் பிரவீன்.

"ஹை, குட் மார்னிங், நீங்க என்னை பண்றீங்க, அரும்பாக்கம் விஜய் பார்க் ஹோட்டல் கு வாங்க, அதுல பார்ட்டி ஹால் 3 , ஓகே?" என்றாள் விஜி.

"ம்ம்ம், ஓகே ரம்யா, வந்துடறோம், வேற ஏதாவது??" என்றான் பிரவீன்.

"நத்திங், நல்ல சாங்ஸ் ரெடி பண்ணிக்கோங்க, நான் சொல்லிட்டேன், பிரவீன் னு ஒருத்தரு வருவாரு, ஹி இஸ் எ குட் சிங்கர் னு, நீங்களும் அக்காவும் சாங்ஸ் பாடணும்" என்றாள் ரம்யா.

"இப்டி ஒரு பனிஷ்மென்ட் கிடைக்கும் னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேனே" என்று சிரித்தான் பிரவீன். சிரித்துவிட்டு, "சரி சரி, வில் சிங், பை ரம்யா" என்றான் பிரவீன்.

"என்னவாம் அவளுக்கு?" என்றாள் விஜி.

"நீயும் நானும் பாட்டு பாடணுமாம், ஆல்ரெடி கமிட் பண்ணிட்டாளாம் பிரெண்ட்ஸ் கிட்ட" என்றான் பிரவீன்.

"இவ எப்பவுமே என்னை இக்கட்டான நிலமைல மாட்டி விட்டுட்டே இருப்பா, நாட்டி கேர்ள்." என்றபடி சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்தாள் விஜி.

கார் அரும்பாக்கம் விஜய் பார்க் ஹோட்டலை நோக்கி சென்றது.

பகுதி 60 முடிந்தது.

------------------------தொடரும்-----------------------

எழுதியவர் : ஜெயராமன் (23-Sep-17, 12:57 pm)
பார்வை : 271

மேலே