என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 59
விஜி விடியலில் மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். அவளுக்கு முன்னால் காயத்ரியும் நர்கீஸும் தேநீர் கோப்பையுடன் உட்கார்ந்திருந்தனர்.
"குட் மார்னிங் அக்கா, குட் மார்னிங் காயத்ரி, எழுந்து ரொம்ப நேரம் ஆச்சா,எழுப்பி இருக்கலாம் இல்ல என்னை" என்றாள் விஜி.
"ம்ம்ம்...சொல்லுவ டி நல்லா, நைட் புல்லா சுத்திட்டு வந்து மூணு மணிக்கு தூங்கி இருக்கீங்க, அஞ்சு மணிக்கு எழுந்ததுலேந்து எழுப்பிட்டு இருக்கேன் டி, பெரண்டு பெரண்டு படுக்கறியே தவிர எழுந்திருக்கல, நீ இப்படின்னா அங்க முபாரக் அண்ணா பஜர் பிரேயர் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சவரு இன்னும் தூங்கிட்டு இருக்காரு" என்றாள் காயத்ரி.
"நீங்க இவளை கூட்டிட்டு போகலன்னு காலைல இருந்து என்கிட்டே உம்முன்னு இருக்கா, நானே தான் வரலையே.....இதுல பீச் அப்டி இருந்துது, செம்மயா இருந்ததுன்னு இந்த பிரவீன் வேற நல்லா இவளை ஏத்திவிட்டுட்டு போய்ட்டான்" என்றாள் நார்கேஸ்.
"போய்ட்டானா....எங்க?" என்றாள் விஜி.
"அதா விடு டி, என்னை எழுப்பி கூட்டிட்டு போக வேண்டியது தான" என்றாள் காயத்ரி.
"இல்ல டி, நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான்" என்றாள் விஜி.
"சரி சரி, எழுந்து ப்ரஷ் பண்ணிட்டு வா, உனக்கு காபி ரெடியா இருக்கு" என்றாள் நர்கீஸ்."
"அக்கா, பிரவீன் எங்க?" என்றாள் விஜி.
"அவன் எப்பவும் போல காலைல நாலறைக்கு எழுந்து எக்ஸர்சைஸ் முடிச்சுட்டு ரெடி ஆகி ப்ராக்டிஸ்க்கு போய்ட்டான், அவன் எவ்ளோ லேட்டா தூங்கினாலும் அந்த ஷெட்யூல் ல இருந்து எதையும் மிஸ் பண்ண மாட்டான்" என்றாள் நர்கீஸ்.
"அப்போ முபாரக் அண்ணா பிராக்டிஸ் போகலையா" என்றாள் விஜி.
"எங்க, தலைவரை எவ்ளோ எழுப்பி பாத்தான், இன்னும் டென் மினிட்ஸ் டென் மினிட்ஸ் னு சொல்லி சொல்லி தூங்கிட்டே இருந்தாரு" என்றாள் காயத்ரி.
"இவன் மட்டும் ஏன் போனான், அவனும் தூங்கலாம் இல்ல" என்றாள் விஜி.
"என்னை விஜி தெரியாத மாதிரி பேசற, கிரிக்கெட் தான் அவனோட வாழ்க்கை, அதை அவன் யாருக்காகவும் விட்டு தரமாட்டான் ன் உனக்கு தெரியாதா" என்றாள் நர்கீஸ்.
"தெரியும் கா, ஆனா ஹெல்த விட கிரிக்கெட் முக்கியமா?" என்றாள் விஜி.
"ஆமாம் விஜி, அவனுக்கு என்ன ஆனாலும் அந்த கிரிக்கெட் யாருக்காகவும் விட்டு தர மாட்டான், அவனுக்கு அதுல ஒரு வெறி, ஜெய்க்கறதுல ஒரு போதை, அவன் இருந்தா அந்த டீம் ஹண்ட்ரட் பர்சன்ட் வின்னிங் பர்சண்டேஜ் தெரியுமா, போட்டில வெற்றி தோல்வி இருக்கும், ஆனா அவன் எவ்ளோ ஓவர் கான்பிடெண்டா இருந்தா நான் என்னிக்கு தோக்கறேனோ அன்னிக்கு இந்த ரவீன் கிரிக்கெட்டை விட்டுடுவான், இந்த பிரவீனை இந்த உலகம் விட்டுடும் னு சொல்லுவான்" என்றாள் நர்கீஸ்.
"அவன் அளவுக்கு வேற யாரும் வெறியா ஆடமாட்டாங்களா, என்னவோ இவன் தான் கிரிக்கெட் கடவுள் மாதிரி பேசுறீங்க, " என்றாள் விஜி.
"என்னை விஜி, அவனோட எவ்ளோ மேட்ச் பாத்துருக்க நீ, தெரிஞ்சும் இப்டி பேசறியே, எவ்ளோ நாள் அவனுக்கு பிளட் பிரஷர் அதிகமாகி வெளயாடும்போதே மூக்குல இருந்து ரத்தம் வரும், ஆனா அப்பவும் விடாம விளையாடிட்டு இருப்பான், அவனுக்கு தன்னோட ஹெல்த், தன்னோட ப்ரெண்ட்ஸ் எல்லோரை விட இந்த கிரிக்கெட் தான் ரொம்ப பெருசு" என்றாள் நர்கீஸ்.
"விஜி, பிரஷ் பண்ணிட்டு வா, ப்ளீஸ், உன்னோட இந்த இன்பார்மேஷன் கலெக்ஷனை விடேன்" என்றாள் காயத்ரி.
"அக்கா, குளிச்சுட்டு நாம ஸ்டேடியம் போலாமா, எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு" என்றாள் விஜி.
"ம்ம் சீக்கிரம் ரெடி ஆகு, நான் எல்லாருக்கும் ப்ரேக்பாஸ்ட கொடுக்கறேன், அப்புறம் போலாம்," என்றாள் நர்கீஸ்.
சற்று நேரத்தில் எல்லாம் சாப்பிட்டுவிட்டு ரெடி ஆக, அப்போது தான் எழுந்தான் முபாரக்,
"நர்கீஸ், எங்க கெளம்பிட்ட" என்றான் முபாரக்.
"விஜி காயத்ரி நான் மூணு பேரும் ஸ்டேடியம் போறோம், இன்கேஸ் அவங்க பிராக்டிஸ் ஆல்ரெடி ஆரம்பிச்சிருந்தாங்கன்னா நாங்க ஸ்விம்மிங் பூல் போயிட்டு அப்புறம் பிராக்டிஸ் முடிஞ்சு அவங்கள மீட் பண்றோம், நீங்க ரெடி ஆகி வாங்க" என்றாள் நர்கீஸ்.
"ஏய், பிளேயர் நானே இன்னும் ரெடி ஆகல, நீங்கள் என்ன??இது ரொம்ப ஓவர்" என்றான் முபாரக்.
"சரி சரி...எழுந்திருங்க, பை, விஜி காயு, வாங்க போலாம்" என்றபடி காரை நோக்கி வந்தாள் நர்கீஸ்.
என்ன ஒரு நேர்த்தியான டிரைவிங் நர்கீஸுக்கு.
ஸ்டேடியதை அடைந்ததும் அங்கே பிராக்டிஸ் தொடங்கவில்லை, எல்லாரும் ஜஸ்ட் வாமப் பண்ணிக்கொண்டிருக்க, பிரவீன் ஒரு ஓரத்தில் கண்களை மூடி அமர்ந்தபடி தியானம் செய்து கொண்டிருந்தான்.
"என்னக்கா பன்றான் இவன், தூங்கறான்" என்றாள் விஜி.
"ஏய், அவன் யோகா பண்ரான், மூச்சு பயிற்சி எடுக்கறான்" என்றாள் நர்கீஸ்.
ஒரு பத்து நிமிடம் இருக்கும், பிரவீன் எழுந்து இவர்களிடம் வந்தான். "என்னை நீங்க மட்டும் வந்திருக்கீங்க, இந்த வெயில் ல எதுக்கு தேவை இல்லாம, இன்னிக்கு மேட்ச் கூட இல்ல, ஜஸ்ட் பிராக்டிஸ் தான், அதுக்கு எதுக்கு? முபாரக் எங்க?" என்றான் பிரவீன்.
"இன்னும் தூங்குது, விஜி எல்லாரையும் மீட் பண்ணனும் னு சொன்னா, அதான்" என்றாள் நர்கீஸ்.
"ம்ம்ம், சரி" என்றபடி எல்லாரையும் கூப்பிட்டான் பிரவீன்.
"ஹாய் விஜி, ஹாய் காயத்ரி, ஹாய் நர்கீஸ், எப்படி இருக்கீங்க, நீங்க எப்போ வந்தீங்க விஜி" என்றான் ரியாஸ்.
"நேத்து நைட் அண்ணா" என்றாள் விஜி.
"எங்க ஸ்டெ" என்றான் விஜய்.
"முபாரக் அண்ணா வீட்லே" என்றாள் காயத்ரி.
"அந்த லூசு வரலியா" என்றான் ரியாஸ்.
"இன்னும் தூங்கறாரு" என்றாள் நர்கீஸ்.
"சரி, ஏதாவது சாப்பிடறீங்களா, வெளில நம்ம கடை இருக்கு, சூடா சமோசா?ஹார்லிக்ஸ்?" என்றான் லெனின்.
"அண்ணா, சமோசா அண்ணா" என்றாள் காயத்ரி.
"ஏய் இப்போ தான சாப்பிட்டோம்?" என்றாள் விஜி.
"விஜி, இதுல என்னை இருக்கு, நல்ல டேஸ்ட்டா இருக்கும், இருங்க, டேய்...கார்த்திக் இங்க வா, நீ போய் மூணு ஹார்லிக்ஸ், சமோசா, மெதுவடை, மசால் வடை.....அப்புறம் அந்த கீரை போண்டா போடுப்பாங்க, எல்லாம் சூடா போட்டு வாங்கிட்டு வா, உள்ள நம்ம டீம் கு ன்னு சொல்லி வாங்கு, புரியுதா...."என்றபடி நூறு ரூபாயை எடுத்து நீட்டினான் விஜய்.
"அண்ணா எதுக்கு கார்த்திக்கை வேலை வாங்கறீங்க பாவம்" என்றாள் காயத்ரி.
"என்னை பாவம், அவன் ஒன்னும் நினைக்க மாட்டான், என்னோட தம்பி அவன்" என்றான் விஜய்.
"சரி அண்ணா, டோர்னமெண்ட் வருது, என்னென்னிக்கு உங்க மேட்ச் னு சொல்லுங்க, நான் அதுக்கேத்த மாதிரி லீவு போடணும், உங்க மேட்ச் பாக்கணும்" என்றாள் விஜி.
"ம்ம்ம், நாமினேஷன் முடிஞ்சு பைவ் டேஸ்ல ஷெட்யூல் போற்றடுவாங்க, அப்போ கன்பார்ம் பண்றோம்" என்றான் ரியாஸ்.
அப்போது கோச் வந்தார், "பாய்ஸ், கம் கம்" என்றார்.
"ஏய், கோச் வந்துட்டாரு, நீங்க இங்க இந்த கேலரி ல இருங்க, கார்த்திக் ஐட்டம்ஸ் வாங்கிட்டு வந்ததும் சாப்பிடுங்க, ஓகே" என்றபடி அனைவரும் நகர்ந்தனர்.
"கேலரி வேணாம், உங்க கோச் பக்கத்துல நின்னு நாங்களும் பாக்கணும்" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம்....சரி வாங்க" என்றான் பிரவீன்.
"கோச், இது........முபாரக் வைப் தான, தெரியாத எனக்கு" என்றார் கோச்.
"ம்ம்ம், சூப்பர் சார் நீங்க" என்றான் ரியாஸ்.
"எப்டிமா இருக்கீங்க, எங்க அந்த சோம்பேறி, தூங்கறானா?" என்றார் கோச்.
"ஆமாம் சார்" என்றாள் நர்கீஸ்.
"ஓகே, அவன் வரட்டும், கார்த்திக் எங்க" என்றார் கோச்.
"சார், பிஸ் அடிக்க போயிருக்கான், வந்துருவான்" என்றான் விஜய்.
"சரி நாம ஆரம்பிக்கலாம்" என்றபடி முதலில் ஒரு சில திட்டங்கள் சொன்னார், யாரார் என்னென்ன மேட்சில் செய்ய வேண்டும் எப்படி பிளான் பண்ண வேண்டும் என்பது எல்லாம் பேசினார்கள். பிறகு "பாய்ஸ் உங்க எல்லாருக்கும் ஒரு ஹேப்பி நியூஸ், நம்ம பிரவீன் தமிழ்நாடு ரஞ்சி டீம் கு நடக்க போற செலெக்ஷன் கு நாமினேட் ஆயிருக்கான், இந்த டோர்னமெண்ட் முடிஞ்சதும் சென்னை ல ராபின் சிங் தலைமைல நடக்கப்போற செலெக்ஷன் ல பிரவீன் போய் கலந்துக்கப்போறான், க்ளாப்ஸ் அண்ட் விஷஸ் பார் ஹிம்" என்றார் கோச்.
பிரவீன் ஆச்சரியத்தில் திளைத்தான். அனைவரும் அவனை கட்டி அணைத்து தங்கள் சந்திஷத்தையும் பாராட்டையும் வாழ்த்தையும் கூறினர்.
"சார், ரொம்ப தேங்க்ஸ் சார், நான் எதிர்பாக்கவே இல்லை" என்றான் பிரவீன்.
"பிரவீன் யு டீசெர்வ் இட், ஓகே ஓகே, போ போய் நெட் பிராக்டிஸ் எடுங்க" என்றார் கோச்.
"பாய்ஸ் லெட்ஸ் கோ" என்றான் பிரவீன்.
அனைவரும் நெட் பிராக்டிஸ் லொகேஷனுக்கு சென்றதும் கோச்சிடம் விஜி நர்கீஸ் காயத்ரி மூவரும் பேசினர்.
மெல்ல நெட் பிராக்டிஸ் இடத்தை நோக்கி நடந்தபடியே கோச் இவர்களுக்கு பதில் சொன்னார்.
அவர்களும் பயிற்சி செய்யும் இடத்திற்கு நடந்தனர்.
"சார், மத்த எல்லாரையும் விட பிரவீன் எப்படி செலெக்ட் ஆனார்?" என்றாள் காயத்ரி.
"இல்ல மிஸ்........."பெயர் தெரியாமல் நிற்க, "காயத்ரி" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், காயத்ரி....பிரவீன்க்கு இருக்கற டேலண்ட்க்கு அவன் டு த்ரீ இயர்ஸ் முன்னாடியே செலெக்ட் ஆயிருக்கணும், சுனாமி ல அவன் அம்மா சிஸ்டர் இருந்ததுனால கொஞ்சம் ஒதுங்கிட்டான், இப்போ கண்டிப்பா அவனோட கனவு நிறைவேறும்" என்றார் கோச்.
மூவரும் சற்று தொலைவில் நின்று பயிற்சியை பார்க்க கோச் பயிற்சி செய்யும் இடத்தின் உள்ளே சென்றார்.
பிரவீனின் கமாண்டிங் கெபாசிட்டி...அவன் தனது அணி வீரர்களாக இருந்தாலும் போட்டி என்றால் எதிரி போல பாவித்து தனது வேகத்தை பந்து போடும்போது காட்டும் விதம், எல்லாமே விஜிக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு பந்தையும் போடும்போதே சொல்கிறான், இந்த பந்தில் உனக்கு மிடில் ஸ்டம்ப் காலி, இந்த பால் உன்னோட கால் பத்திரம், இந்த பால் யார்கள், என்று சொல்லி சொல்லி அவன் போடுவதும் கூட அவர்களுக்கு ஆச்சரியமளித்தது.
முபாரக் கடைசி வரை ப்ராக்டிஸ்க்கு வரவில்லை.
பிராக்டிஸ் முடிந்து அனைவரும் கிளம்ப, பிரவீன், விஜி, நர்கீஸ், காயத்ரி நால்வரும் சற்று நேரம் காரின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
"பிரவீன், பாட்டி வீட்டுக்கு போகணும், ஒன்னு பண்ணலாம், பாட்டி வீட்டுக்கு போய் ஜஸ்ட் தலையை காட்டிட்டு முபாரக் அண்ணா வீட்டுக்கு போலாம்" என்றாள் விஜி.
"ம்ம்ம், ஓகே, அப்போ ஒன்னு பண்ணுங்க, நர்கீஸ் நீயும் காயத்ரியும் கார்ல கிளம்புங்க, நான் விஜியை என்னோட பைக் ல கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன்" என்றான் பிரவீன்.
"ம்ம்ம், பட் சீக்கிரமா வா விஜி" என்றாள் காயத்ரி.
"சரி டி, வித்தின் டு ஹவர்ஸ், ஓகே?" என்றாள் விஜி.
"ம்ம்ம், பட், முதல்ல என்னோட வீட்டுக்கு போய் நான் குளிச்சுட்டு தான் வருவேன் ஓகே?" என்றான் பிரவீன்.
"நோ ப்ராப்ஸ்" என்றாள் விஜி.
நர்கீஸும் காயத்ரியும் கிளம்ப, ப்ரவீனும் விஜியும் அவன் வீட்டிற்கு வண்டியில் சென்றனர்.
பிரவீன் வீட்டில்,
"விஜி, ஏதாவது சாப்பிட....." என்றான் பிரவீன்.
"இல்ல டா, பாட்டி வீட்ல சாப்பிடலாம், நீ ரெடி ஆகி வா" என்றாள் விஜி.
"ஜஸ்ட் டென் மினிட்ஸ்" என்றான் பிரவீன்.
அவன் குளிக்க சென்றதும், வீட்டில் ஒரு அறை "இது பிரவீனின் கோட்டை...." என்று இருக்க, ஆர்வமாக அந்த அறைக்குள் சென்றாள் விஜி.
அங்கே கிரிக்கெட் நீச்சல் வாலிபால் ஹேண்ட் பால் என்று பிரவீன் விளையாடும் விளையாட்டுகளில் பெரிய ஆட்களின் போட்டோக்கள் சுவர் முழுதும் ஒட்டி இருந்தது. அழகாக அமைக்கப்பட்டிருந்த கட்டில், நாற்காலி, மேஜை.....ரசித்தபடியே மலைத்து நின்ற விஜிக்கு ஒரு சிறிய கருப்பு நிற பை தென்பட்டது. அதில் என்னை இருக்கிறது என்று பார்க்க ஆர்வமாக அதன் அருகில் சென்றாள் விஜி.
அதில்.......நிறைய காசு இருந்தது.எதற்கு என்று புரியாமல் திகைத்தாள்.கேட்பதற்கும் பயம். அதன் அருகில்......விஜியும் காயத்ரியும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படம், மேஜை மேல் இருக்கும் பிரவீனின் வேலெட் அவள் கண்ணில் பட்டது. மெல்ல அதை திறந்தாள். ஆச்சர்யத்தின் உச்சம்.......அதில் அவன் கையாலே வரைந்த விஜியின் முக ஓவியம்....அப்படி ஒரு நேர்த்தியான ஓவியம், ஏதோ புகைப்படம் போல இருந்தது. அதை விஜி எடுத்து வைத்துக்கொண்டாள்.
குளித்துவிட்டு பிரவீன் வந்தான்.
ரெடி ஆகிவிட்டது, "போலாமா விஜி" என்றான் பிரவீன்.
"போலாம்" என்றாள் விஜி.
"இரு, வேலெட் எடுத்துட்டு வரேன்" என்று உள்ளே போனவன் வெகு நேரமாக வரவில்லை. என்னவென்று பார்த்த விஜி ஷாக் ஆகிவிட்டாள். அந்த அறையே தலைகீழாக இருந்தது.
"என்ன டா பண்ற" என்றாள் விஜி.
"இதுல ஒரு போரோ இருந்துச்சு, அது காணும், ஸ்டேடியம் ல இருந்து கிளம்பும்போது கூட பாத்தேன்" என்றான் பிரவீன்.
"யாரு, அம்மா போட்டோவா" என்று தெரியாததை போல கேட்டாள் விஜி.
"இல்ல, அம்மா போட்டோ இல்ல" என்றான் பிரவீன்.
"விடு டா, வேற எடுத்துக்கலாம், அது என்னை அவ்ளோ முக்கியமான போட்டோவா" என்றாள் விஜி.
"ஆமாம், அந்த போட்டொ தான் எனக்கு எல்லாமே, அந்த போட்டோ இல்லன்னா...." என்றான் பிரவீன்.
"பிரவீன் லேட் ஆகுது, அப்புறம் தேடிக்கலாமே, கண்டிப்பா இங்க தான் எங்கயோ இருக்க போகுது" என்றாள் விஜி.
அறை மனதுடன் "சரி வா விஜி, போலாம்" என்றான் பிரவீன்.
"எதுக்கு என்னோட இந்த ட்ராயிங்கு இவ்ளோ இம்பார்ட்டன்ஸ் தரான், நானே இவன் கூட இருக்கேன் இந்த படம் அவ்ளோ இம்பாக்ட்டா இவனுக்கு" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
வண்டியை ஒட்டிய பிரவீன் அமைதியாக வந்தான்.
"ஏன் டா இப்டி பேசாம வர" என்றாள் விஜி.
"ஒண்ணும் இல்ல விஜி" என்றான் பிரவீன்.
"நீ இவ்ளோ அப்செட்டா ஆக அப்டி என்ன இம்பார்ட்டண்ட் போட்டோ அது?" என்றாள் விஜி.
"அந்த போட்டோ என் உயிர் விஜி" என்றான் பிரவீன்.
"என்னை விட முக்கியமா டா அந்த போட்டோ?" என்றாள் விஜி.
"உன்னை விட எதுவுமே எனக்கு முக்கியம் இல்ல தான், ஆனா நான் உன்கூட இருக்கற நேரத்தை விட நீ இல்லாத தனிமை ல அந்த போட்டோ தான் என்கூட இருக்கு டா" என்றான் பிரவீன்.
"அப்டின்னா அது என்னோட போட்டோவா டா" என்றாள் விஜி.
".............."மௌனமாய் இருந்தான் பிரவீன்.
"சொல்லு டா, யாரோட போட்டோ அது' என்றாள் விஜி.
விஜியிடம் அது அவளோட போட்டோ என்று சொன்னால் ஏதாவது நினைத்துவிடுவாளோ என்று அச்சப்பட்டான் பிரவீன். சற்று நொடிகள் அமைதிக்கு பிறகு, "அது, அது......எனக்கு இந்த வாழ்க்கை தந்த, என்னோட வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த ஒரு சாமி போட்டோ டா" என்றான் பிரவீன்.
இப்போது விஜி மௌனமாய் வந்தாள். பாட்டியின் வீடு வரும்வரை எந்த பேச்சும் இல்லை.
இரண்டு மணி நேரங்கள் நொடிகளாய் போனது பாட்டி வீட்டில்.
மதிய உணவுக்கு முபாரக் வீட்டை நோக்கி பறந்தது வண்டி.
முபாரக் வீட்டில், "ஏய் விஜி, வா முக்கியமான விஷயம்" என்றாள் காயத்ரி.
"என்னை டி" என்றாள் விஜி.
"டீம் லீடர் போன் வந்துச்சு டி, நம்ம ரெண்டு பேரும் மண்டே லீவ் போடக்கூடாதாம், யாரவது ஒரு ஆள் ட்யூட்டிக்கு வரணுமாம், முக்கிய கிளையண்ட் டெண்டர் சைன் இருக்காம், சோ, நீ அண்ட் பிரவீன் மட்டும் தான் ரம்யாவா பிக்கப் பண்ண போறீங்க" என்றாள் காயத்ரி.
"என்னை டி, மீட்டிங்க போஸ்ட்போன் பண்ண வேண்டிது தான இந்த டீம் லீடர்" என்றாள் விஜி.
"நான் சொன்னேன், பட் பெரிய கான்டராக்ட்டாம், சோ நோ போஸ்ட்போன்னு சொல்லிட்டாங்க" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், ஓகே டி" என்றாள் விஜி.
அந்த இரண்டு நாட்கள் மிகுந்த மகிழ்ச்சியாய் கழித்தாள் விஜி. ப்ரவீனுடன் இப்படி ஒரு வீகென்ட், அவள் வாழ்வின் மிக அழகான அர்த்தமுள்ள வார இறுதி......பிரவீன் தான் விஜியின் அந்த வரைபடம் எங்கு போனதோ என்று வருத்தத்தில் இருந்தான்.
பகுதி 59 முடிந்தது.
------------------------------தொடரும்-------------------------