என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 58

கார் கடற்கரை கடலோர காவல் படை முகப்பில் வந்து நின்றது. வெளியே நின்றிருந்த கான்ஸ்டபிள் இவர்களை பார்த்ததும், "என்ன முபாரக் தம்பி, பிரவீன் தம்பி, இவ்ளோ நாளா பீச் பக்கமே ஆள காணும்?" என்றார்.

"அதுவாண்ணே, கொஞ்சம் வேலை அதிகம்ண்ணே, அதான், சரி, உள்ள வாங்க தமிழ் ஏதாவது வாங்கி வெச்சுருப்பான் சாப்பிடலாம்" என்றான் முபாரக்.

"தம்பி, நான் சாப்பிட்டேன் தம்பி, நீங்க போங்க, அய்யா உள்ள தான் இருக்காரு" என்றார் அந்த கான்ஸ்டபிள்.

"யாரு அய்யா?" என்றாள் விஜி.

"தமிழ தான் அய்யான்னு சொல்றாரு" என்றான் பிரவீன்.

உள்ளே சென்றதும் சந்தோஷமாக வரவேற்றான் தமிழ்.

"வா முபாரக், வா பிரவீன், எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும், கல்யாண மாப்ள, லைப் எப்படி டா போகுது?" என்றான் தமிழ்.

"ம்ம்ம் சூப்பர் டா, இன்னுமா கல்யாண மாப்பிள்ளை, ட்வின்ஸ் க்கு அப்பா டா" என்றான் முபாரக்.

"இருந்தாலும் இன்னும் புது பையன் மாதிரி தான பளபளன்னு இருக்க, அது சரி, பிரவீன், உனக்கு எப்போ டா கல்யாணம்?" என்றான் தமிழ்.

"கூடிய சீக்கிரம் தமிழ், ஒரு நல்ல பொண்ணு இருந்தா பாரேன், நீ எந்த பொண்ணை கை காற்றியோ தாலி கற்றேன்" என்றான் சிரித்தபடியே.

"போலீஸ் காரனையே கலாய்க்கிற......நடந்து டா" என்றான் தமிழ் சிரித்தபடியே.

"சரி, எங்க நான் சொன்ன ஐட்டம்ஸ் எல்லாம் வாங்கி வெச்சியா" என்றான் முபாரக்.

"ம்ம்ம், அண்ணே, அந்த தட்ட கழுவி கொண்டு வாங்கண்ணே" என்றான் தமிழ்.

சற்று நேரத்தில் கான்ஸ்டபிள் தட்டுகள் கழுவி கொண்டு வந்தார்.

"நீங்க ஏதாச்சும் சாப்பிடறீங்களா" என்றான் தமிழ்.

"இல்ல சார், நான் ட்யூட்டி வரும்போதே நல்லா சாப்பிட்டு வந்துட்டேன்" என்றார் கான்ஸ்டபிள்.

"சரி அண்ணே, நீங்க போங்க, இந்தா டா, டீ, நீ சொன்ன மாதிரி மசாலா டீ, ஆனியன் தூக்கலா ஆம்லெட், அப்புறம் இது மஷ்ரூம் 65 " என்றான் தமிழ்.

"டேய், மஷ்ரூம் 65 செம்மயா இருக்கு டா" என்றான் முபாரக்.

"பிரவீன்...நீ இன்னும் இரவு சாப்பாடுக்கு பிறகு எதுவும் சாப்பிடாத பழக்கத்தை விடலையா" என்றான் தமிழ்.

"கூடவே பொறந்தது, என்னிக்கும் போகாது" என்றான் பிரவீன்.

"இவரு பெரிய படையப்பா....போடா கொய்யால"என்றான் தமிழ்.

"அண்ணா நானும் ப்ரவீனும் பீச் பக்கம் போலாமா, நீங்க இங்க பேசிட்டு இருங்க" என்றாள் விஜி.

"ஓ தாராளமா போங்க, பாத்து, பிரவீன், ஏதாவதுன்னா குரல் குடு, இல்லனா கால் பண்ணு" என்றான் தமிழ்.

"சரி டா" என்றபடி அந்த நிலையத்தை விட்டு வெளியே வந்தனர் இருவரும்.

நல்ல ரம்மியமான காற்று, அரை நிலா வெளிச்சம், அதன் பிரதிபலிப்பில் வெள்ளி உருக்கி ஊற்றியது போல் மின்னிய வங்கக்கடல். சற்று தொலைவில் நீண்டு வளர்ந்து இருக்கும் மரங்கள். ஆனால் தென்னையா பனையா என்று அறிய முடியாத இருள், உயர்ந்து நின்றிருந்த ஒன்றிரண்டு விளக்குகள், தார்பாலின் போட்டு மூடி வைத்திருந்த குழந்தைகள் விளையாடும் ராட்டினங்கள்.....மிக அழகாக இருந்தது கடற்கரை. ஆம், அது தான் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரையான தேவனாம்பட்டினம் சில்வர் பீச்.

பீச்சில் ப்ரவீனும் விஜியும் கையை கோர்த்துக்கொண்டு நடந்த அந்த காலடித்தடங்கள் கூட கவிதைகளாய் தெரிந்தன. எவ்வளவு தூரம் நடக்கிறோம் எங்கு நடக்கிறோம் எல்லாவற்றையும் மறந்து கைகள் கோர்த்து கடற்கரையில் கால் பதிக்காத இடமே இல்லை எனும் அளவுக்கு நடந்தனர். மௌனமே அவர்களின் மொழியாய் இருந்தது.

"பிரவீன், இந்த நேரத்துல என் பிரவீன் கூட தனியா யாருமே இல்லாத இந்த கடற்கரையிலே இப்படி ஒரு வாக்கிங்.......நான் நெனச்சுக்கூட பாக்கல டா, எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா, இந்த கடற்கரையிலே போகவேண்டிய என் உயிரை நீ காப்பாத்தினது இன்னும் என் மனசுல அப்டியே காட்சியா ஓடுது டா" என்றாள் விஜி.

"விஜி, இதே அழகான கடல் அமைதியான கடல் தான் என் அம்மாவையும் என் தங்கையையும் இந்த உலகத்துல இருந்து என்னை அனாதையா விட்டுட்டு அவங்கள கொண்டு போனது, அந்த காட்சி கூட என் மனசுல இன்னும் அப்டியே இருக்கு டா, ஆனா, என் தாயை தங்கையை பறித்த இந்த கடல் தான் உன்னை எனக்கு தந்திருக்கு" என்றான் பிரவீன்.

"உண்மை தான் பிரவீன், எப்படி உன்னோட அம்மா உன்கூடவே இருந்து உன்னை பாத்துப்பாங்களோ நானும் அப்டியே உன்னை பாத்துப்பேன் டா" என்றாள் விஜி.

"விஜி நீ சொன்னதே எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு டா" என்றான் பிரவீன்.

"பிரவீன், முபாரக் அண்ணா சொன்னது என்னால நம்பவே முடில டா, எப்படி அவ்ளோ துல்லியமா நான் கேட்ட கேள்வியையும் அதுக்கு நீ என்ன நெனைக்கிறன்னும் சொன்னாரு" என்று ஆச்சர்யமாக கேட்டாள் விஜி.

"அதான் முபாரக், அவன் அவ்ளோ மெச்சூர்ட், அதான் நான் சொன்னேன், என்னோட முகத்துல இருக்கற சின்ன மாற்றத்தை வெச்சே நான் ஏன் இப்படி இருக்கேன் னு சொல்லிடுவான், அவ்ளோ பயங்கரமா அவன் மூளை வேலை செய்யும்" என்றான் பிரவீன்.

முபாரக் அண்ணா மூளை அவ்ளோ ஷார்ப்பா பிரவீனை பத்தி சொல்லும் னு பிரவீன் சொல்றான். இன்னிக்கு இவ்ளோ சொன்ன முபாரக் அண்ணா, பிரவீன் என்னை லவ் பண்ரான் னு எந்த வார்த்தையும் சொல்லல, மீன்ஸ் முபாரக் அண்ணா அதை கெஸ் பண்ணல, சோ,, பிரவீன் என்னை இன்னும் லவ் பண்ணல, ஆனா அவர் கெஸ் பண்ணாம இருக்கலாம், மே பி பியூச்சர்ல தெரிய வரலாம், பட் ஒரு விஷயம் தான், ரொம்ப நாள் என் காதலை எனக்குள்ளே மறைச்சுக்க முடியாது.

விஜியின் மனம் யோசிக்க தொடங்கியது.

"என்ன விஜி சைலன்ட் ஆயிட்டே" என்றான் பிரவீன்.

"இல்ல டா, ஜஸ்ட் ஏதோ யோசிச்சேன், அதை விடு, நல்லா யோசிச்சு பாரேன், என் அப்பா உன்கிட்ட டிக்கெட் வாங்க சொல்லி சம்மந்தமே இல்லாம அந்த கடவுள் நமக்குள்ள ஒரு லிங்க் ஏற்படுத்திருக்காரு, அன்னிக்கே ஈவினிங் உன்னை செகண்ட் டைம் எதேச்சையா பாத்தேன், எங்களை கார் ல பிக்கப் பண்ணிட்டு கடலூர் வந்த, சுனாமி ல இருந்து அடையாளம் தெரியாத பிரேதமா போகாம என் உயிரை காப்பாத்தின....அப்டியே கொஞ்சம் கொஞ்சமா நம்ம ரிலேஷன்ஷிப் அதிகமாச்சு, இப்போ......கிட்டத்தட்ட அஞ்சு வருஷம்....போனதே தெரில டா, தினம் தினம் உன்னை பத்தி நான் நெனச்ச நேரங்கள் அதிகமா ஆயிட்டே தான் இருக்கு, இப்போ இந்த இருபத்திநாலு மணி நேரம் போதலை, என் வீட்ல உன்மேல வெச்ச்சுருக்கற நம்பிக்கை, எல்லாருக்கும் புடிக்கும்படி நடந்துக்கற உன் நடத்தை, என்மேல காட்டும் அக்கறை, பாசம்........நெஜமாவே இது எல்லாம் ஒரு ப்ரம்மிப்பா இருக்கு டா, இப்படி ஒரு நண்பர்கள் குழுவுக்கு நடுவுல ஒரு மகிழ்ச்சியான அஞ்சு வருஷ வாழ்க்கை, உன்னால எவ்ளோ சொந்தங்கள் என்னை சுத்தி, விழுப்புரம், கடலூர் எங்க போனாலும் கண்ணுக்கு முன்னாடி வர ரியாஸ் அண்ணா மதினா பஸ், அதுல கோபி ட்ரைவர் அண்ணா, கணபதி கண்டக்டர் அண்ணா, வெளியூர் போகணும்னா முபாரக் அண்ணா கார், பெரிய வண்டின்னா ரியாஸ் அண்ணா டெம்போ டிராவலர், கம்ப்யுட்டர் கு ஹரி அண்ணா, மேக்கப்புக்கு கார்த்திக், பார்ட்டின்னா முபாரக் அண்ணா நர்கீஸ் அக்கா, மாமா வண்டி ரிப்பேர் ஆச்சுன்னா அப்பா வண்டி ரிப்பேர் ஆச்சுன்னா வெற்றி அண்ணா கதிர் அண்ணா, கருணைக்கு லெனின் அண்ணா, எல்லாத்துக்கும் மேல விஜய் அண்ணா, ஷாகுல், என்ன ஒரு வாழ்க்கை, என்ன ஒரு சமூகம் , அவ்ளோ கம்போர்ட்டா இருக்கேன் டா, எல்லாத்துக்கும் நீ தான காரணம், நான் உனக்காக வாழறது தான சரி, சொல்லு டா, நீ இல்லனா இந்த ஒரு ஹேப்பி லைப் எனக்கு கெடச்சிருக்குமா, உன்னை பாத்து நெறையா கத்துக்கிட்டேன்,நீ என் ரோல் மாடல் டா, என் வேல் விஷர், என் பிரென்ட், எல்லாத்துக்கும் மேல.....நீ........எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரில டா, ஒன்னு மட்டும் உண்மை, நீ என்னை விட்டு பிரிஞ்சா என்னால தாங்கிக்க முடியாது டா" என்றாள் விஜி.

கைகளை விஜி இறுக்கமாக பிடிப்பதை உணர்ந்தான் பிரவீன்.

"விஜி நீ எதையோ மனசுல போட்டு குழப்பிட்டு ரொம்ப தெணறிட்டு இருக்க ன்னு நினைக்கறேன், எதுக்கு நீ இப்போ நாம பிரிஞ்சா கஷ்டப்படுவேன்னு சொல்ற, கண்டிப்பா நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன், இது ப்ராமிஸ், உன்மேல ப்ராமிஸ், போதுமா?" என்றான் பிரவீன்.

"நானே என்னை விட்டு போ ன்னு சொன்னாலும் ஏதோ கோவத்துல சொல்றேன், சரி ஆய்டும் னு நீ புரிஞ்சுக்கணும் என்னை விட்டு பிரிஞ்சு பேசாம போய்ட கூடாது, உன்கிட்ட இருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டேன், இந்த பொறுமையா டெசிஷன் எடுக்கறத தவற, என்னோட இந்த கோவம் மட்டும் தான் என்கிட்டே அப்டியே இருக்கு, சீக்கிரஹலா அந்த ஹேஸ்ட் டெசிஷனிங் பழக்கத்தை மாத்திக்கறேன்" என்றாள் விஜி.

"கண்டிப்பா நீயே என்னை போன்னு சொன்னாலும் உன்னை விட்டு பிரியமாட்டேன் டா, உன்னை விட்டு பிரிஞ்சா நான் மட்டும் சந்தோஷமா இருக்க முடியுமா, சந்தோஷத்தை விடு, முதல்ல உன்னை விட்டு பிரிஞ்சா என் உயிர் தான் முதல்ல பிரியும் டா" என்றான் பிரவீன்.

"தேங்க்ஸ் டா, அது சரி, என்னிக்கு நாமினேஷன் பண்ண போற, இன்னொரு விஷயம் தெரியுமா, உனக்கு சஸ்பென்ஸா ஒரு நியூஸ் இருக்கு, அது முபாரக் அண்ணா சொல்லுவாரு, நீ சொல்லு, நாமினேஷன் எப்போ" என்றாள் விஜி.

"என்ன சீக்ரெட் சஸ்பென்ஸ், சரி அதை நான் முபாரக் கிட்ட கேட்டுக்கறேன், புதன் கிழமை நாமினேஷன், நாம மண்டே ரம்யாவை பிக் பண்ண சென்னை போறோம், " என்றான் பிரவீன்.

"இந்த டேவிட் விழுப்புரம் டீம் கு விளையாட சென்னை ல இருந்து வறானாம், என்னை மீட் பண்ணனும் னு சொல்லுச்சு அந்த லூசு" என்றாள் விஜி.

"லூசுன்னு எல்லாம் சொல்லாத விஜி, ஒருத்தன் இல்லாதப்போ அவனை தப்பா பேசறது தப்பு, பாக்கணும் னு சொன்னா பாரு, எல்லா சந்தர்ப்பமும் நமக்கு கடவுள் தரும் வாய்ப்பு, மே பி அந்த சந்திப்புல ஏதாவது வெச்சுருப்பாரு கடவுள்." என்றான் பிரவீன்.

"நீ ஒரு சரியான......." பிரவீனின் தலையில் செல்லமாக தட்டினாள் விஜி.

மேலும் சற்று நேரம் நடைக்கு பின்னர் முபாரக்கிடம் இருந்து கால் வந்தது,"டேய் மணி ரெண்டு டா, எனக்கு தூக்கம் வருது, நாளைக்கு பிராக்டிஸ் கு போகணும், நீயும் தான், ஞாபகம் இருக்கு இல்ல, வா டா, போகலாம்" என்றான் முபாரக்.

"ஐயோ, விஜி மணி ரெண்டு, டைம் போனதே தெரில, வா போலாம், தூங்கணும், நீ ரெஸ்ட் எடுக்கணும்" என்றான் பிரவீன்.

"இங்கயே இப்படியே உன்கூட இருந்திடனும், இந்த பொழுது விடியாம இரவாவே இருக்கணும், நீயும் நானும் மட்டும் தனியா காலம் பூரா இப்டி சேந்து இருக்கணும்....எவ்ளோ நல்லா இருக்கும் இல்ல பிரவீன்?" என்றாள் விஜி.

"ம்ம்ம், இருக்கும் இருக்கும், நாம என்ன பிசாசா, நைட்ல மட்டும் வாழ, வா விஜி, சும்மா காமெடி பண்ணிக்கிட்டு" என்றான் பிரவீன்.

ரொமான்ஸை புரிஞ்சுக்கறானா பாரு இந்த பேக்கு......என்று மனசுக்குள் நினைத்தபடி "ஹையோ....போ, வரேன்" என்றாள் விஜி சலித்துக்கொண்டே.

நிம்மதியாக மனதில் இருந்த குழப்பங்களும் கவலைகளும் நீங்கி மகிழ்ச்சியாக காரில் ஏறி உட்கார்ந்தாள் விஜி.

கார் முபாரக் வீட்டை நோக்கி சென்றது.

பிரவீன் விஜியின் கடற்கரை கால் தடங்கள் மட்டும் அவர்களின் நினைவலைகளோடு சில்வர் பீச்சில் உறங்க தொடங்கியது.

முபாரக் வீட்டை அடையும்போது மணி மூன்று.

"டேய் மணி பாத்தியா, மூணு டா, நாளைக்கு ப்ராக்டிஸ்க்கு போய் நல்லா தூங்க போறேன்" என்றான் முபாரக்.

"சரி சரி, டைம் வேஸ்ட் பண்ணாம தூங்குங்க, நான் போய் காயத்ரி நர்கீஸ் அக்கா கூட படுக்கறேன், குட் நைட்" என்றாள் விஜி.

விளக்குகள் அணைந்தன. விழிகள் மூடின.

விஜியின் மனதில் மட்டும் சந்தோஷ தணல் பிரகாசமாக மின்னியது.

மனதிற்குள் மகிழ்ச்சி, தனக்குத்தானே சிரித்துக்கொள்ளும் உதடுகள்......காதலில் ஒவ்வொரு அசைவும் அழகு தானே. அதுவும் விஜியின் அழகு சொல்லவா வேண்டும்........

மகிழ்ச்சி பொங்கிய மனதுடன் உறங்க தொடங்கினாள் விஜி.

பகுதி 58 முடிந்தது.

----------------------தொடரும்----------------------

எழுதியவர் : ஜெயராமன் (23-Sep-17, 3:36 am)
பார்வை : 287

மேலே