என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 57

சற்று நேரத்திற்கெல்லாம் காயத்ரி உறங்கிவிட்டாள். விஜிக்கு உறக்கம் வரவே இல்லை. எழுந்து வெளியே வந்தாள். வெளியே ப்ரவீனும் முபாரக்கும் உறங்காமல் பேசிக்கொண்டிருந்தனர்.

"என்ன விஜி தூங்கலையா" என்றான் முபாரக்.

"இல்ல அண்ணா, தூக்கம் வரல,என்னன்னு தெரில, மனசு சரி இல்ல" என்றாள் விஜி.

"டேய், பாத்தியா, இலங்கை தமிழர் பத்தி சொல்லி இப்டி தூக்கம் இல்லாம பண்ணிட்டியே டா" என்றான் பிரவீன்.

"என்னது....நான் மட்டும் தான் சொன்னேனா, நீயும் தான சொன்ன" என்றான் முபாரக்.

"அண்ணா, கார்ல ஒரு ரவுண்ட் போலாமா, ப்ளீஸ், இப்போ, எனக்கு நைட் கார் ரைட் போகணும் னு ஆசை அண்ணா, அதுவும் உங்க ரெண்டு பேர் மாதிரி பெஸ்ட் பிரெண்ட்ஸ் கூட போறது எவ்ளோ பெரிய விஷயம்...இப்டி ஒரு சான்ஸ் இன்னிக்கு கெடச்சுருக்கு, ப்ளீஸ் அண்ணா" என்றாள் விஜி.

"என்ன விஜி, ப்ளீஸ் னு எல்லாம் சொல்லிக்கிட்டு, போலாம் இருங்க, நான் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்" என்று எழுந்தான் முபாரக்.

"விஜி, இது என்ன வித்யாசமான ஆசை?" என்றான் பிரவீன்.

"இல்ல டா, நிஜமா ரொம்ப நாள் ஆசை" என்றாள் விஜி.

"சரி....எங்க போறது? இந்த நைட் ல இது தேவையா?" என்றான் பிரவீன்.

"பீச் கு போலாம் டா" என்றாள் விஜி.

"பைத்தியமா உனக்கு, இந்த நைட் ல, சுனாமிக்கு அப்புறம் நான் அந்த கடல் பக்கமே போகல, வேணாம், ப்ளீஸ், ஐ ஆம் நாட் கண்விண்ஸ்ட்" என்றான் பிரவீன்.

"ப்ளீஸ் டா, எனக்காக வரமாட்டியா?" என்றாள் விஜி.

அந்த ஒரு வார்த்தையில் ஆப் செய்தாள் பிரவீனை.

"நான் நர்கீஸ் கிட்ட சொல்லிட்டு சாவிய எடுத்துட்டு வரேன்" என்றபடி அறைக்குள் சென்றான் முபாரக்.

நர்கீஸ் உறங்கிக்கொண்டிருந்தாள். "நர்கீஸ், நானும் ப்ரவீனும் விஜியும் கொஞ்சம் கார்ல வெளில போயிட்டு வரோம், விஜிக்கு மனசு சரி இல்லயாம்" என்றான் முபாரக்.

அரைத்தூக்கத்தில் நர்கீஸ்,"ஏன் மாமா, என்ன பிரச்சனை? நான் வேணும்னா கூட வரவா?" என்றாள்.

"இல்ல இல்ல, மேனேஜ் பண்ணிக்கறேன், நீ காயத்ரி கூட தூங்கு, நாங்க வந்துடறோம், நான் கதவை வெளியால பூட்டி சாவிய எடுத்துட்டு போறேன், இன்னொரு சாவி டிவி மேல வெச்சுட்டு போறேன், சரியா" என்றான் முபாரக்.

"சரி மாமா, பாத்து, நீங்க ட்ரைவ் பண்ணாதீங்க, உங்களுக்கு நைட் ல ட்ரைவ் சரியா வராது, பிரவீன் பண்ணட்டும்" என்றாள் நர்கீஸ்.

"தூக்கத்துல கூட என்னை அசிங்கப்படுத்துது பாத்தியா இது..." என்று சிரித்துக்கொண்டே வெளியே சென்றான் முபாரக்.

"வாடா, போலாம்," என்றபடி நடந்தான் முபாரக்.

"டேய், நீ ஓட்டவேண்டாம் நான் ஓட்டறேன், உனக்கு நைட் டிரைவிங் சரியா வராது" என்றான் பிரவீன்.

"டேய் என்னடா இது, நர்கீஸும் அப்டியே சொல்றா, நீயும் அப்டியே சொல்ற" என்றான் முபாரக்.

"ஒருத்தவங்க சொன்னா அது கலாய், எல்லாரும் சொன்னா அது உண்மை மச்சி....நீ சாவிய குடு" என்றான் பிரவீன்.

"எல்லாம் நேரம் டா" என்றான் முபாரக்.

காரில் மூவரும் ஏறினர். பிரவீன் ஓட்ட, முபாரக் முன்னாள் உட்கார விஜி ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்தாள்.

"எங்க டா போறது?" என்றான் முபாரக்.

"விஜி பீச் கு போகணும் னு சொல்றா டா" என்றான் பிரவீன்.

"இப்பவா, கடலோர காவல் படை ரோந்து வருவாங்க டா, ஒரு பொண்ணை கூட்டிட்டு போறது தப்பா ஆய்டும் டா மச்சி" என்றான் முபாரக்.

"அதான் ஓ.டீ. பீச் வேணாம், நம்ம சில்வர் பீச் போலாம், அங்க நம்ம தமிழ் செல்வன் தான் ட்யூட்டி, அவர்கிட்ட போய் சொல்லிவிட்டு போகலாம் இல்ல?" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், சரி விடு வண்டிய, நான் தமிழுக்கு போன் பண்றேன்.

கார் நகர்ந்தது.

"தமிழ், எப்படி இருக்க பா" என்றான் முபாரக்.

"நல்லா இருக்கேன் முபாரக், நீ என்ன ரொம்ப நாளா கால் பண்ணல, ரொம்ப பிசி போல?" என்றான் தமிழ்.

"அப்டி எல்லாம் இல்ல, டிஸ்டர்ப் பண்ண வேணாம்,நீ நைட் ட்யூட்டி பாத்துட்டு தூங்கிட்டு இருப்ப அதான் பகல் ல உனக்கு தேவை இல்லாம போன் பண்றது இல்லை" என்றான் முபாரக்.

"சரி பிரவீன் எப்படி இருக்கான்" என்றான் தமிழ்.

"ம்ம் நல்லா இருக்கான், என்கூட தான் இருக்கான், இப்போ நாங்க பீச் கு வரோம், எங்ககூட என்னோட சிஸ்டர் இருக்கா, ஓகேவா?" என்றான் முபாரக்.

"யாரு, காயத்ரின்னு ஒரு விழுப்புரம் பொண்ணு, அதுவா..." என்றான் தமிழ்.

"இல்ல டா......விஜி" என்றான் முபாரக்.

"ஓ பிரவீன் பிரென்ட்...அந்த பொண்ணா" என்றான் தமிழ்.

"ஆமாம், நீ என்ன பண்ற, ஒரு மூணு ஸ்பெஷல் டீ வாங்கிக்கோ, ஓ, பிரவீன் நைட் சாப்பாடுக்கு அப்புறம் எதுவும் குடிக்க மாட்டானோ.....அப்போ ரெண்டு ஸ்பெஷல் டீ வாங்கிக்கோ, நல்லா சூப்பர் ஆம்லெட் ரெண்டு, ஆனியன் தூக்கலா போட்டு, வாங்கி வை, இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள அங்க இருப்போம்" என்றான் முபாரக்.

"அண்ணா என்ன அண்ணா நீங்க, போலீஸ் கிட்ட இப்டி எல்லாம் பேசறீங்க" என்றாள் விஜி.

"அவன் என்னோட பிரென்ட் மா, ஒண்ணும் பிரச்சனை இல்ல" என்றான் முபாரக். உங்க பிரெண்ட்ஸ் சர்க்கிள் ரொம்ப பெருசா அண்ணா, ஏன்னா இடத்துலயும் ஆள் வெச்சுருக்கீங்க" என்றாள் விஜி.

"நம்ம கிட்ட பழகறவங்கள அப்டி தான மா வெச்சுக்கணும், அது மட்டும் இல்ல, மேட்ச்காக ஊர் ஊரா போய் வெளயாடுறோம், அப்டி பிரென்ட் புடிக்கிறது தான், இந்த தமிழ் பையன எனக்கு சுனாமி வந்த அப்போ தான் தெரியும்" என்றான் முபாரக்.

"அண்ணா, நீங்க ரியலி கிரேட் அண்ணா" என்றாள் விஜி.

"தேங்க்யூ விஜி,அது இருக்கட்டும், இந்த நைட் ல எதுக்கு இந்த ட்ரிப் உனக்கு?" என்றான் முபாரக்.

"இல்லேண்ணா, பிரவீன் இதை உங்ககிட்ட ஷேர் பண்ண கூடாதுன்னு சொன்னான், ஆனா என்னால முடில, நான் ஒரு தப்பு பண்ணிவிட்டேன் அண்ணா, உங்க வீட்டுக்கு வரும்போது பிரவீன் கிட்ட ஒரு கேள்வி கேட்டேன், அதுக்கு அவன் பதில் சொல்லல, ஆனா பயங்கர அன் ஈஸி ஆயிட்டான், அவனை கஷ்டப்படுத்திட்டோமோன்னு தோணுச்சு, தூக்கம் வரல" என்றாள் விஜி.

சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான் பிரவீன்.

கோபமாக எதுவும் பேசாமல் காரை விட்டு இறங்கி நடக்க தொடங்கினான்.

"டேய், டேய், நில்லு டா, எங்க போற" கத்தியபடியே முபாரக் அவன் பின்னால் ஓடிஏ, விஜியோ சோகத்தில் காரில் இருந்து இறங்கி வெளியே நின்றாள்.

முபாரக் அவனை நிறுத்தினான்.

"என்ன டா உனக்கு கோவம், என்ன ஆச்சு?" என்றான் முபாரக்.

"இல்ல டா, விடு என்னால வண்டி ஓட்ட முடில" என்றான் பிரவீன்.

"சரி டா, வண்டி ஓட்ட வேணாம், நீ உக்காரு நான் ஓட்றேன், அதை விட்டுட்டு இப்டி இறங்கி போனா என்ன அர்த்தம், என்னை பாத்தா லூசு மாதிரி தெரியுதா, சரி போ, போ டா, இனிமே என்கூட பேச வராத" என்று கோபமாக சொல்லிவிட்டு விஜியை நோக்கி நடந்தான் முபாரக்.

"டேய், டேய் முபாரக், நில்லு டா, நில்லு, சாரி' என்றபடி முபாரக்கின் பின்னால் இப்போது பிரவீன் ஓடி வந்தான்.

விஜியின் அருகில் முபாரக் வந்து நின்றான். விஜி கையை கட்டிக்கொண்டு தரையை பார்த்தபடி நின்றிருந்தாள். முபாரக் காரின் அருகில் வந்து அதில் சாய்ந்து நின்றான். பிரவீன் விஜியின் எதிரே நின்றான். இருவருமே தரையை பார்த்தபடி நின்றனர்.

"உங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணு சொல்றேன், பிரெண்ட்ஷிப்ல ஒபென்னெஸ் அதாவது வெளிப்படையா இருக்கறது ரொம்ப முக்கியம், உள்ளுக்குள்ள ஒரு விஷயத்தை போட்டுக்கிட்டு மெல்ல முடியாம முழுங்க முடியாம தவிக்கிறது உங்க ரெண்டு பேருக்கு நடுவுல பெரிய பிரச்னையை குடுக்கும், அவ்ளோதான் சொல்லுவேன்....என்ன டா ஒரு சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல தெரியாதா உனக்கு, " என்றான் முபாரக்.

"டேய், விஜி என்ன கேள்வி கேட்டா தெரியுமா, அதுக்கு என்கிட்டே பதில் இல்ல டா" என்றான் பிரவீன்.

"அப்டி என்ன டா பொல்லாத பதில் இல்லாத கேள்வி, உன்னை பொறுத்தவரை முபாரக் முக்கியமா இல்ல விஜி முக்கியமா?இது தான அந்த கேள்வி?" என்றான் முபாரக்.

விஜியும் ப்ரவீனும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று இருவரும் முபாரக்கை பார்த்தனர்.

"டேய், எப்படி டா" என்றான் பிரவீன்.

"இது ரொம்ப சாதாரணம் பிரவீன், ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, இதுக்கு உனக்கு பதில் சொல்ல தெரிலன்னா நீ வாழ்க்கை ல ரொம்ப கஷ்டப்படுவ, இதுக்கான பதில் உன்னோட சார்பா நான் சொல்றேன்" என்று பிரவீனிடம் சொல்லிவிட்டு விஜியை பார்த்தான் முபாரக்."என்ன விஜி, நீ கேட்ட கேள்வி இது தான" என்றான் முபாரக்.

"ஆமாம் அண்ணா, ஆனா அதுக்கு எனக்கு ஆன்சர் வேணாம், எனக்கு நல்லா தெரியும், ப்ளீஸ் ஆன்சர நீங்களே வெச்சுக்கோங்க எனக்கு வேணாம். நான் கேட்டது தப்பு தான்" என்றாள் விஜி.

"இல்ல விஜி, நான் இதுக்கு பதில் சொல்லி தான் ஆகணும், நீ இதுக்கான விடை தெரிஞ்சுக்கிட்டு தான் ஆகணும். அவனை கஷ்டப்படுத்தற கேள்வி நீ கேட்டுட்டே, இப்போ உன்னை இந்த பதில் கஷ்டப்படுத்தும், அதை நீ அனுபவிச்சு தான் ஆகணும்" என்றான் முபாரக்.

விஜி கண்கள் கலங்கிவிட்டாள்.

"வேணாம் டா, விஜியை கஷ்டப்படுத்தாத டா" என்றான் பிரவீன்.

"இல்ல பிரவீன், இந்த உண்மைய விஜி இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டு தான் ஆகணும், நீ யாரு நான் யாரு நம்ம நட்போட பலம் என்ன, எல்லாம் விஜிக்கு தெரிஞ்சு தான் ஆகணும்" என்றான் முபாரக்.

பிரவீன் மௌனமானான். விஜியின் கண்கள் கலங்கியதை நிறுத்தவே இல்லை.

"தெரிஞ்சுக்கோ விஜி, பிரவீனை நீ கேட்ட கேள்விக்கு பிரவீன் மனசுல இருக்கற பதில் இது தான், அவனுக்கு என்னை விட ஏன் இந்த உலகத்தை விட விஜி தான் முக்கியம், ஏன்னா விஜி தான் அவன் உலகம், இதை அவன் மறைக்கலாம், என்னை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு, ஆனா என்னால அவன் கஷ்டப்பட கூடாது, எனக்கு என் பிரவீனை பத்தி தெரியும், அவன் உனக்கு பதில் சொல்லாததற்கு காரணம் என்ன தெரியுமா, நேத்து வந்த நீ எங்க பிரெண்ட்ஷிப்பை பிரிச்சு என்னை விட உன்னை முக்கியமா நெனைக்க வெச்சுட்டு னு நீ கில்டி ஆய்டா கூடாது, அது மட்டும் இல்ல, நேத்து வந்த நமக்காக உயிரா இருக்கற பிரெண்ட விட்டுட்டான் பிரவீன் னு அவனையும் நீ தப்பா நெனைக்க கூடாது, நானும் பாரு, நேத்து வந்த பெண்ணுக்காக என்னை விட்டுட்டான் னு நெனைக்க கூடாது...இதெல்லாம் மனசுல போட்டு உருட்டிக்கிட்டு தான் பதில் சொல்லல, இப்போ நான் சொல்லிட்டேன், ப்ரவீனோட மனசுல உனக்கு தான் என்னிக்கும் முதல் இடம், யு ஆர் ரூலிங் ஹிஸ் டேம் ஹார்ட் விஜி, டேய் நீ சொல்ல வேண்டியது தான, இதுல என்ன டா தயக்கம், நான் என்னிக்கும் உன்னை தப்பா நெனைக்க மாட்டேன், உன்னையே தப்பா நினைக்காத நான் உன் மனசையே கட்டி ஆளும் உன் உயிர் விஜியை எப்படி டா தப்பா நினைப்பேன்?" என்றான் முபாரக்.

அந்த கணம் ப்ரவீனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை, ஓ வென சத்தமாக அழுதான், ஆனந்தத்தில் முபாரக்கை கட்டி அணைத்துக்கொண்டான், விஜியாலும் இதை ஒருகணம் நம்பமுடியவில்லை.

"அண்ணா நிஜமா தான் சொல்றீங்களா, என்னால நம்ப முடில அண்ணா" என்றாள் விஜி.

"அவனோட அமைதியே சொல்லலையா விஜி உனக்கு, நான் சொன்னது உண்மைன்னு" என்றான் முபாரக்.

விஜியே தன்னை மீறி முபாரக்கை அணைத்து "அண்ணா, தேங்க்ஸ் அண்ணா, நீங்க என்னோட சொந்த அண்ணனா இருக்க கூடாதான்னு இப்போ நெனைக்கிறேன், ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அண்ணா" என்றாள் விஜி.

விஜியை மெல்ல விலக்கி அவளது கண்களை துடைத்துவிட்டான் முபாரக்.

"போ, பிரவீன் கிட்ட சாரி கேளு, என்ன எதுன்னு முடிவு பண்ணுங்க பேசி, நான் அந்த எதிர் டீ கடைல சூடா ஒரு டீ குடிச்சுட்டு இருக்கேன், சால்வ் பண்ணிட்டு என்கிட்டே வாங்க" என்று விஜிக்கு சொல்லிவிட்டு,"அண்ணா சூடா ஒரு டீ சக்கரை தூக்கலா' என்றபடி ரோட்டை கடந்தான் முபாரக்.

விஜியும் ப்ரவீனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் நின்றிருந்தனர், மெல்ல விஜி திரும்பினாள்."ஏன் டா இதை நீ என்கிட்டே நேரடியா சொல்ல வேண்டிது தான" என்றாள் விஜி.

"சொல்ல முடியாத காரணத்தை தான் முபாரக் சொன்னானே விஜி" என்றான் பிரவீன்.

"அண்ணா சொன்னது உண்மையா பிரவீன்" என்றாள் விஜி.

"ஆமாம் விஜி, ஆனா முபாரக் என்னை உன்னை புரிஞ்சுகிட்டு அளவுக்கு நான் உன்னையும் அவனையும் புரிஞ்சுக்கல டா......" என்றான் பிரவீன்.

"என்ன ஆமாம்? உன் வாயால அதை கேக்கணும் னு நெனைக்கிறேன் டா, ப்ளீஸ் சொல்லு" என்றாள் விஜி.

மௌனமாய் இருந்தான்.

"ப்ளீஸ் டா, என்னை உன்னோட மௌனத்தால் கொல்லாத,சொல்லு டா, உனக்கு எல்லாரை விட நான் தான் முக்கியமா டா?" என்றாள் விஜி.

"ஆமாம் விஜி, அது என்ன காரணம், ஏன் எல்லாரை விட நீ முக்கியம் எதுவும் புரியல, ஆனா நீ தான் உலகம், உன்னை ஒவ்வொரு நொடியும் மிஸ் பண்றேன், உன்னோட குரல் எப்பவுமே என் இதயத்துல கேட்டுகிட்டே இருக்கு டா, உன்னை பிரிய முடியாதவனாய் இருக்கேன், நீ இல்லாத லைப்.....என்னால யோசிக்க கூட முடில, நீ அவ்ளோ கண்ட்ரோல் பண்ணற என்னை" என்றான் பிரவீன்.

"எனக்கும் தான் டா, நீ தான் என் உலகத்துக்கு முக்கியம், யார் என் லைப்ல இல்லனாலும் நான் அவ்ளோ வருத்தப்படமாட்டேன். ஆனா நீ இல்லாத ஒரு லைப் என்னால நெனச்சு கூட பாக்க முடியாது டா, டோன்ட் எவர் லீவ் மீ, ப்ளீஸ் பிரவீன்" என்றாள் விஜி.

"நான் என்னிக்கு உன்னை பிரியறேனோ அன்னிக்கு என்னோட வாழ்க்கையோட கடைசி நாளா இருக்கும் விஜி, இது சத்தியம்" என்றான் பிரவீன்.

"சாவு பத்தி பேசாத பிரவீன், நான் கண்டிப்பா உன்னை விட்டு போக மாட்டேன், நீயே போக சொன்னாலும் உன்னை என் மனம் விட்டு போகாது டா" என்றாள் விஜி.

விஜி மனசார பிரவீனை கட்டிக்கொண்டாள், அவளது கண்கள் அவனது மார்பை கண்ணீரால் ஈரமாக்கியது.

இருவருக்குள்ளும் காதலை சொல்லி விடலாமா என்று தோன்றினாலும் ஒருவர் மற்றொருவரை எப்படி பாவிக்கின்றனர் என்பது அவர்களுக்குள் இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.

"விஜி, வா, முபாரக் கடைல வெய்ட் பண்ரான்" என்றான் பிரவீன்.

இருவரும் கை கோர்த்தபடி சாலையை கடந்தனர்.

முபாரக் கையில் டீ கப்புடன் பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டிருந்தான். "என்ன டா, கன்வின்ஸ் ஆனீங்களா இல்லையா, விஜி ஒரு டீ?" என்றான் முபாரக்.

"கன்வின்ஸ்ட் அண்ணா, ஓகே, ஒரு டீ" என்றாள் விஜி.

"நீ என்ன சார், கண்விசுடா இல்லையா, ஒரு பொண்ணு தைரியமா பதில் சொல்றா, நீ அப்டியே நிக்கற, எனக்கு வெக்கமா இருக்கு டா" என்றான் முபாரக்.

"கன்வின்ஸ்ட் டா" என்றான் பிரவீன்.

"அண்ணா இங்க வாஷ் ரூம் இருக்கா" என்று கடைக்காரரிடம் கேட்டாள் விஜி..

"ஓ இருக்கு மேடம், சைட் ல இருக்கு போங்க" என்றான் கடைக்காரன்.

"சுத்தமா இருக்கா பா, லைட் எல்லாம் இருக்கா" என்றான் முபாரக்.

"சார், எல்லாம் இருக்கு சார்" என்றான் கடைக்காரன்.

"டேய் எதுக்கும் நாம போய் அந்த பக்கம் நீக்கலாம், விஜி நீ போ" என்றான் முபாரக்.

விஜி சென்றதும், "டேய் முபாரக், எங்க நீ வேற நான் லவ் பண்றேன் னு விஜி கிட்ட சொல்ல்லிடுவியோன்னு பயந்துட்டேன் டா" என்றான் பிரவீன்.

"டேய் எனக்கு தெரியும் டா, எதை பேசணும் எதை பேசக்கூடாது, எது என் லிமிட், எல்லாம் தெரியும், என்னிக்கு நீயா சொல்றியோ அதுவரைக்கும் நானோ நர்கீஸோ இந்த விஷயத்தை ஓபன் பண்ணமாட்டோம், நீ பயப்படாத, என்ன சொன்னா விஜி, பயங்கரமா கட்டி புடிச்சு ஆறுதல் சொன்ன போல இருக்கு?" என்றான் முபாரக்.

"டேய் நீ வேற கிண்டல் பண்ணாத டா, என்ன க்ளோசா இருந்தாலும் அவ லவ் அன்றால் இல்ல இது பிரெண்ட்ஷிப் தானான்னு புரிய டா சாத்தியமா" என்றான் பிரவீன்.

"உன்ன மாதிரி ஒரு மக்கு பயல நான் பாத்ததே இல்ல டா" என்றான் முபாரக்.

"டேய், உன்னைப்பத்தி எனக்கு தெரியும், நர்கீஸுக்கு ப்ரபோஸ் பண்ணினப்போ நீயும் இப்டி தான பண்ணின, அவன் அவனுக்கு வந்தா தான் டா தெரியும் வலி, நாய்ங்களா, வெளில இருந்து கமெண்ட் அடிக்கிறான், லூசு" என்றான் பிரவீன்.

விஜி இவர்களை நோக்கி நடந்து வந்தாள்.

டீ குடித்துவிட்டு காரை நோக்கி நடந்தனர் மூவரும்.

"என்ன டா, நீ ஒற்றையா இல்ல நான் ஒட்டட்டுமா?" என்றான் முபாரக்.

"நானே ஓட்றேன்" என்றான் பிரவீன்.

கார் கடற்கரையை நோக்கி பறந்தது.

பகுதி 57 முடிந்தது.

-------------------------தொடரும்------------------------

எழுதியவர் : ஜெயராமன் (22-Sep-17, 10:12 pm)
பார்வை : 325

மேலே