இந்த அவல நிலை என்று மாறும்

சமீப காலமாக தோலை காட்சி பெட்டியிலும், தினசரி பத்திரிக்கைகளிலும் வரும் விளம்பரங்கள்
நிறைய ""முதியோர் இல்லங்களை"" பற்றி தான் இருக்கிறது.

தவிர மருத்துவ மனைகளிலும்,பேருந்து நிலையங்களிலும் ஹோட்டல்களிலும் நிறைய
முதியவர் ஒருவரும் அவர் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாக மெல்ல நடந்து வந்து
கொண்டு இருப்பதை பார்கிறோம்.முடிகிறதோ முடிய வில்லையோ அவரவர்கள் பைகளை அவர்களே
எடுத்துக் கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்து வரும் அவலத்தை பார்த்து வருத்த படுகிறோம்.
அவர்களுடன் பேச்சு துணைக்கு யாரும் இல்லாது இருப்பதை காண்கிறோம் அநேக வயதானவர்களுக்கு
காது சரியாக கேட்பது இல்லை. கண் பார்வை சரியாக இருப்பதில்லை கைகளிலும் கால்களிலும் பலம்
இழந்து இருப்பதை பார்க்கும் போது .நம்மை அறியாமல் அவர்கள் பேரில் அனுதாபம் ஏற்படுகிறது.

தங்கள் வாழ் நாளில் வயித்தை கட்டி வாயை கட்டி பிள்ளைகளுக்கு அவர்கள் ஆசைப் படும் துணி
மணி.பள்ளிக்கோ காலேஜுக்கோ அவர்கள் சவுகரியமாக போய் வர சைக்கிளோ இரு சக்கர வண்டியோ
வாங்கிக் கொடுத்து அவர்கள் சந்தோஷ படுத்து கிறோம். இதை தவிர பள்ளி செலவு காலேஜ் செலவு
இவைகளையும் சமாளித்து வருகிறார்கள் பிள்ளைகள் எப்படியாவது முன்னுக்கு வந்து ஒரு நல்ல
வேலை, கிடைத்து ஒரு நல்ல உறவினர் பெண்ணையோ பையனையோ எல்லா உறவினர்கள்
முன்னிலையில்திருமணம் செய்து அவர்கள் குழந்தை பெற்றவுடன் அந்த குழந்தைகளுடன்
சந்தோஷமாக இருந்து வர கனவு காண்கிறார்கள்.

ஆனால் நடப்பது ஏன்ன?

காலேஜ் படிப்பு முடிந்ததும் ஒரு நல்ல வேலை ஒன்று கிடைத்ததும் பெத்தவர்கள் தங்களுக்கு
செய்த தியாகத்தை அறவே மறந்து விட்டு தங்களுக்கு பிடித்த ஒருவரை காதலித்து தங்கள் முழு
நேரத்தை அவர்களுடன் கழித்து வர ஆசை பட்டு வரும் கேவலத்தை நாம் பார்க்கிறோம்.பல
பிள்ளைகள் பெற்றோர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் காதலித்த அந்த "ஒருவருடன்" ஓடிப் போய்
தனியாய் வாழ்ந்து வருகிறார்கள்.

நான் என் குடும்பத்திலே நடந்த ஒரு உண்மை நிகழ்சசியை இங்கே சொல்ல ஆசை படுகிறேன்.
என் குடும்பத்து பையன் ஒருவன் கல்யாணத்துக்கு " பெண் " பார்க்க என்னையும் உடன் அழைத்து
போனான்.இரு குடுமபத்தாருக்கும் "எல்லாம்" பிடித்து இருந்தது.பேச்சு வார்த்தைகளில் ஒத்துமை
இருந்தது.கடைசியாக பையன் பெண்ணுடன் தனியாக பேச போனான்.இருவரும் ஒருவர் விருப்பு
வெறுப்புகளை பகிர்ந்து கொண்டார்கள்.கடைசியில் என் குடும்பத்து பையன் அந்த " பெண்ணிடம்"" " என்
அப்பா அம்மா ரொம்ப வயதானவங்க. தவிர என் வீட்டிலே ரொம்ப வயசான ஒரு அத்தை
இருக்காங்க.எங்க குடும்பத்திலே என் அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பையன். நீங்க வேலைக்கு போது
வந்த மத்த ஒய்வு நேரங்களிலே அவங்க மூனு பேருக்கும் உதவியா இருந்து வருவீங்களா " என்று
மெதுவாக கேட்டான்.உடனே அந்த பெண் " நான் ஏற்கெனவே எங்க வீட்டிலே என் வயசான
பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் நிறைய செஞ்சு இருக்கேன். கல்யாணம் ஆன பிறவு புருஷனுடன்
சந்தோஷமா தனி குடித்தனம் செஞ்சு வர ஆசைப் படறேங்க.என்னாலே அவங்களுக்கு உதவி பண்ணி
வந்து என் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லீங்க. கல்யாணம் கட்டி கிட்ட
ஒரு மாசத்திலே நாம " தனி குடித்தனம்" போறதா இருந்தா நாம கல்யானம் கட்டி கிடலாம்ங்க .
இல்லைன்னா எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லீங்க" என்று அவனிடம் இருந்து பதில்
வந்தது.இதற்கு முன் பார்த்த இரண்டு பெண்களும் இதே பதிலை சொல்லி இருக்கவே வேறு வழி
இல்லாமல் தனக்கும் வயது ஏறி கொண்டு இருப்பதை மனதில் கொண்டு கல்யாணம் பண்ணிக்க
கொண்டு தனது வயதான அம்மா அப்பா சித்தி இவர்களை விட்டு விட்டு தனி குடித்தனம் போனான்.

JOINT FAMILY யாக வாழ்ந்து வரும் எண்ணம் இப்போதைய இளைய தலை முறைக்கு
இல்லாததாலும், வேலைக்கு போய் வந்து பணம் காசு சம்பாதித்து அவர்கள் மட்டும் சந்தோஷமாக
வாழ்ந்து வரும் ஆர்வம் அதிகமாக இருப்பதாலும். அவர்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நல்ல
பெரிய பணக்கார பள்ளிகளில் படிக்க வைத்து, அந்த குழந்தைகளுக்கு எல்லா வசதியும் செய்து
கொடுக்கும் முன்னுக்கு கொண்டு வரும் ஆர்வம் அதிகமாக இருப்பதாலும் அடிக்கடி சினிமா டிராமா
போய் வரவும் பல பெரிய ஹோட்டல்களில் பல வகை உணவை ரசித்து சாப்பிட்டு மகிழும் ஆர்வம்
அதிகமாக இருப்பதாலும் நிஜத்தில் வயதான பெரியவர்களை "" பாரமாக "" கருதி வரும் எண்ணம்
இருப்பதாலும் பல வயதான முதியவர்கள் இப்படித்தான் தனிமையை அனுபவித்து வேறே வழி
இல்லாமல் முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்து தனிமையை அனுபவித்து மனம் உடைந்து,
அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு ""பலன்"" கிடைக்காமல் நோய் வந்து அதை கவனிக்க நல்ல மறுத்துவ
வசதி செய்து கொள்ள போதிய பண வசதி இல்லாமல் அந்த வியாதிக்கு ஆளாகி ஒரு நாள் இறந்து
விடுகிறார்கள்.

விஷயம் கேள்வி பட்டு பெற்ற பையன் அவர்களுக்கு ஈமக் கடன்களை செய்து விட்டு அவன்
வாழ்க்கைக்குப் போய் விடுகிறான்.வருஷத்திலே ஒரு நாள் அவர்கள் ஞாபகம் வந்து அவர்களுக்கு
""திதி" தருகிறான்.தன குழந்தைகள் நன்றாக படித்து முன்னுக்கு வர அவர்கள் ஆஸீர்வாததத்தை
வேண்டுகிறான்.

இந்த அவல நிலை என்று மாறும். மேற்கித்திய கலாசாரத்தில் இது ரொம்ப சகஜமாக இருக்கலாம்.
ஆனால் நம்முடைய இந்து கலாசார படி இது ரொம்ப சரி இல்லையே. பெற்ற்வர்கள் ஆசிர்வாதம்
ஒரு நல்ல காரியம் நடக்க இருக்கும் போது அவர்கள் படைத்தாய் னைத்து மாலைகள் அணிவித்து
வேண்டி வருகிறோம் இல்லையாங்க.அப்போது நாம் அவர்களை அவர்கள் வாழ்ந்து வந்த நாளில்
சரியாக கவனிக்க வில்லையே என்று வருத்த படுகிறோம் இல்லையாங்க??

ஏங்க இந்த அவல நிலை.??.

இது நமக்கு ஒரு ""கேவலம்"" இல்லையாங்க??

வேண்டாமே இந்த ""கேவலம்"".இந்த ""கேவலத்தை"" நாம் ஆசைப் பட்டால் மாற்ற முடியுமேங்க.


((என்னுடைய எழுத்தில் சில பிழைகள் வந்து இருக்கிறது. மன்னிக்கவும்))

.

























..
,

எழுதியவர் : ஜெ சங்கரன் (22-Sep-17, 8:14 pm)
சேர்த்தது : Sankaran
பார்வை : 184

மேலே