என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 56 இலங்கையில் வாழும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பணம் இந்த பகுதி - ஏதும் தவறாக எழுதி இருந்தால் மன்னித்து தவறை சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்
இரண்டு நிமிடங்கள் கழிந்திருக்கும், பிரவீன் காருக்குள் வந்தான், "போலாமா விஜி" என்றான்.
ஏதோ தெளிவடைந்தவனாக நடந்துகொண்டான்.
"என்ன டா, நார்மல் ஆயிட்டியா' என்றாள் விஜி.
"நார்மல் ஆனதா தெரில, ஆனா அப்னார்மலா இல்ல" என்றான் பிரவீன்.
"ஏன் டா இப்டி குழப்பமாவே பேசி என்னையும் குழப்பற...உன்னை பத்தி மட்டும் தான் டா என்னோட மனசு நெனைக்குது. ஏன் டா இப்டி பண்ற....." என்றாள் விஜி.
"நான் குழப்பல விஜி, குழம்பி இருக்கேன், சரி, இப்போ முபாரக் வீட்டுக்கு போறோம், சின்ன சேஞ் என் முகத்துல இருந்தா கூட ஈஸியா கண்டுபுடிச்சுடுவான், கேட்டான்னா என்னால பொய் சொல்ல முடியாது, சோ நார்மலா ஆயிட்டு தான் போகணும், சோ நான் ஒன்னு பண்றேன், கொஞ்சம் சாங்ஸ் கேப்போம், டு த்ரீ சாங்ஸ்க்கு அப்புறம் போலாம்" என்றான் பிரவீன்.
"சரி டா, அப்டியே பண்ணலாம், " என்றாள் விஜி.
சற்று நேரம் கழித்து..."போலாம் விஜி, ஐ ஆம் நார்மல்" என்றான் பிரவீன்.
"போலாம் டா" என்றாள் விஜி.
கார் மெல்ல நகர்ந்தது, ஆனால் எந்த உரையாடலும் நடக்கவில்லை.
முபாரக் வீட்டின் அருகில் வந்ததும் பிரவீன் வண்டியை நிறுத்தினான், "விஜி, எதையும் முபாரக் கிட்ட சொல்லாத, ஓகே?" என்றான் பிரவீன்.
"தெரியும் டா" என்றாள் விஜி.
முபாரக் வீட்டை அடைந்தனர் இருவரும்.
"ஹாய் விஜி, வாங்க, என்ன டா இவ்ளோ நேரம்?" என்றான் முபாரக்.
"இல்ல டா வீட்ல கொஞ்சம் வேலை இருந்துது, அதான் லேட், காயத்ரி நர்கீஸ் எல்லாரும் எங்க?" என்றான் பிரவீன்.
"என் ரூம் ல இருக்காங்க" என்றான் முபாரக்.
"என்ன விஜி, சாப்டீங்களா? என்றான் முபாரக்.
"ம்ம்ம், பிரவீன் சமையல் அண்ணா...செம்மயா சமைக்கறான்.அப்பா, ஹோட்டல் சாப்பாடை விட டேஸ்ட் அதிகம்" என்றாள் விஜி.
"வாண்டூஸ் எங்க டா" என்றான் பிரவீன்.
"தூங்கிட்டாங்க டா, வாப்பா கூட, சரி நீ உள்ள வா, நம்ம ரூம் ல இரு, நான் தோ நியூஸ் பாத்துட்டு வரேன்" என்றான் முபாரக்.
"நானும் நியூஸ் பாக்கறேன் அண்ணா, பிரவீன் நீ போய் நர்கீஸ் கூட காயத்ரி கூட இரு, எனக்கு நியூஸ் பாக்கணும்" என்றாள் விஜி.
"ஓகே" என்றபடி உள்ளே சென்றான் பிரவீன்.
பிரவீன் சென்றதும்....
"அண்ணா....பிரவீன் செமயா சமைக்கறான் எப்படி?" என்றாள் விஜி.
"இது என்னம்மா பிரமாதம் நார்த் இந்தியன் ஸ்நாக்ஸ் ஐட்டம் செய்வான் பாரு, சூப்பரா இருக்கும், சாப்டுட்டே இருக்கலாம், ஒருசில ட்ரிங்க்ஸ் செய்வான் பாரு, அவ்ளோ நல்லா இருக்கும்" என்றான் முபாரக்.
"இதெல்லாம் எப்படி அண்ணா கத்துக்கிட்டான்" என்று கேட்டாள் விஜி.
"அவன் காலேஜ் படிக்கும் பொது ஒன் இயர் கிராப்ட் கோர்ஸ் படிக்கணும் கம்பல்சரியா....அதுல அவன் கேட்டரிங் அண்ட் பெவெரேஜ்ஸ் டிப்ளமோ படிச்சான். அவ்ளோ நல்லா சமைப்பான்,இதெல்லாம் பாத்து ரசிக்க அவன் அம்மா தங்கை இல்லையே மா, எவ்ளோ படிச்சுருக்கான் தெரியுமா இந்த வயசுல, எப்படி எல்லாம் வளந்தான் தெரியுமா.....அப்பா அதை எல்லாம் இப்போ நெனச்சாலும் எனக்கு பெருமையா இருக்கும்" என்றான் முபாரக்.
"என்ன அண்ணா, எனக்கும் சொல்லுங்களேன்...." என்றாள் விஜி.
"ஸ்கூல் படிக்கும்போதே அவங்க அம்மாக்கு ஹெல்பா இருக்கணும் னு என் வீட்டுக்கு வரேன் னு டெய்லி பொய் சொல்லிட்டு நைட் செகண்ட் ஷோ படம் முடியற வரைக்கும் அந்த வேல்முருகன் தியேட்டர் பக்கத்துல டீ கடைல வேலை செய்வான், லீவு நாள் ல பாட்டு க்ளாஸ் எடுப்பான், முறையா சங்கீதம் கத்துக்கிட்டவன், அப்போ எல்லாம் எங்ககிட்ட கூட பணக்கஷ்டம் இருக்குன்னு சொல்ல மாட்டான், நான் பணம் குடுத்தாலும் வாங்கிக்க மாட்டான், அவனே சம்பாதிச்சு கம்ப்யுட்டர், டைப்பிங், ஷார்ட் ஹாண்ட், தையல், செல்போன் ரிப்பேரிங், எல்லாம் கத்துக்கிட்டான், ஆர்கெஸ்டரால பாட்டு பாடுவான், கிரிக்கெட் மட்டும் இல்ல, அவனுக்கு நீச்சல், ஸ்கேட்டிங், ஹேண்ட் பால், வாலி பால், எல்லாத்துலயும் டிஸ்ட்ரிக்ட்டை ரெப்ரெசென்ட் பண்ணிருக்கான், இப்போ ஒன்லி கிரிக்கெட் ல கான்செண்ட்ரேட் பண்ரான். இந்த டோர்னமெண்ட் கு அப்புறம் வரப்போற தமிழ்நாடு ரஞ்சி செலெக்ஷன் கு நாமினேட் ஆயிருக்கான்.இது இன்னும் அவனுக்கு தெரியாது, இப்போ தான் ஈவினிங் கோச் போன் பண்ணி சொன்னாரு. ஆனா ஒருநாள் கூட அவனை கடவுள் சந்தோஷமா இருக்க விடல விஜி, என்ன ஆனாலும் அதனை கஷ்டத்தையும் மனசுக்குள்ளேயே வெச்சுக்குவான், பாவம் அவன், இந்த வயசுல இப்டி ஒரு கஷ்டத்தை அனுபவிக்கிறான், இன்னும் எவ்ளோ நாள் விஜி நாங்க மட்டுமே னு இருக்க முடியும் அவனால, எனக்கு அவனை நினைச்சா தான் பாவமா இருக்கும், என்னோட அப்பா கூட அவன்மேல் ரொம்ப கேர் எடுத்துப்பாரு, நாங்க உசுரோட இருக்கற வரைக்கும் நாங்க அவனை சந்தோஷமா பாத்துக்கணும் னு நினைக்கிறோம், வெச்சுப்போம்" என்றான் முபாரக்.
"அண்ணா, நெஜமாவே அவன் கிரேட் அண்ணா, நானும் உங்ககூட இருந்து அவனை சந்தோஷமா வெச்சுக்க ட்ரை பண்றேன், அவன் கஷ்டப்பட்டா எனக்கும் பிடிக்காது அண்ணா" என்றாள் விஜி.
"அவன் கூட பழகின யாருக்குமே அவனை கஷ்டப்படுத்தனும் னு தோணவே தோணாது, ஈஸியா நம்ம மனச கவர்ந்துடுவான், நம்ம அவன்மேல் ஒரு பர்சன்ட் பாசம் காட்டினா அவன் பதிலுக்கு நம்ம மேல ஹண்ட்ரட் பர்சன்ட் பாசம் காட்டுவான், அவனை மிஸ் பண்ண யாருக்கும் பிடிக்காது...முடியாது டூ" என்றான் முபாரக்.
"சரி தான் அண்ணா, அவனோட கேரிங் அவனோட அபெக்ஷன் எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு, சாம் டைம்ஸ் நானே ஓவர்வெல்மிங் ஆயிடுவேன்" என்றாள் விஜி.
"சரி சரி, வா நியூஸ் போட்டுட்டான், " என்றான் முபாரக்.
செய்திகள் ஆரம்பிக்கும்போது காயத்ரி அவர்களோடு இணைந்துகொண்டாள்.
"வா காயத்ரி, என்ன, நர்கீஸும் ப்ரவீனும் பிளேடு போடறாங்களா, நேத்து தான் மீட் பண்ணினான், ஆனா மீட் பண்ணி என்னவோ பத்து வருஷம் ஆனா மாதிரி பேசிப்பாங்க, ஒருசில டைம்ல எனக்கே காண்டாயிடும்" என்றான் முபாரக்.
"அப்டி எல்லாம் இல்ல அண்ணா, நானும் நியூஸ் பாக்கணும் அதான்" என்றாள் காயத்ரி.
செய்திகள் ஆரம்பமாயின......
தலைப்பு செய்தியே கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது....அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. இந்த பிரச்சனைக்கு நிரந்தர முடிவு எடுக்க சொல்லி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்,மீன் பிடிக்க போவதில்லை என கருப்பு கோடி காட்டி போராட்டம், தலைப்பு செய்திகளில் கடைசியாக இந்திய இலங்கை அணிகளுக்கே இடையே நடந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி.
"இந்த பசங்க இங்க ஜெயிப்பாங்க, அதுக்கு பதில் கிரிக்கெட் ல தராம அதுக்கு துப்பில்லாம நம்ம அப்பாவி மீனவர்களை அவனுங்க கடற்படை கொல்லும், இது ஒரு சாபக்கேடு. இவனுங்க ஜெயிக்க கூடாதுன்னு வேண்டுற ஆளுங்க இன்னும் ராமேஸ்வரத்துல இருக்காங்க" என்றான் முபாரக்.
"அண்ணா, இவங்க ஏன் எல்லை தாண்டி மீன் பிடிக்க போறாங்க, அதான் சுடறாங்க, பாகிஸ்தான் காஷ்மீர் ல வந்தா நம்ம சுடறது இல்லையா, அது மாதிரி தான இதுவும்?" என்றாள் காயத்ரி.
"அம்மா, நீ நல்லா ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ, கச்சத்தீவு பகுதி உடன்படிக்கை என்ன சொல்லுது, அந்த தீவு இரண்டு நாட்டுக்கும் பொது, என்னதான் அந்த தீவை நாம இலங்கைக்கு குடுத்தாலும், உடன்படிக்கை ல இரு நாட்டு மீனவர்களுக்கும் உரிமை உண்டு, அங்கே சென்று வலை காய வைத்துக்கொள்ளலாம் னு சொல்லுது" என்றான் முபாரக்.
"அப்புறம் ஏன் சுடறாங்க அண்ணா, இதை ஏன் தடுக்க முடில?" என்றாள் விஜி"
அதுக்கு பின்னாடி பல அரசியல் இருக்கு மா, அது லாங் ஹிஸ்டரி. அதுக்கு நீங்க முழு இலங்கை வரலாற்றை படிக்கணும். இலங்கை ல ஆரம்பம் முதல் இருந்தது நம்ம தமிழர்கள் தான், குமரிக்காண்டம் எனப்படும் நிலப்பரப்போட ஒரு பகுதி தான் இன்றைய இலங்கை. அப்படி என்றாள் அது தமிழ் நாடு தானே.பல வருஷங்கள் முன்னாடி இலங்கையோட வடக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்தும் ஆண்டும் வந்திருக்கின்றனர். 1505 இல் போர்ச்சுக்கல் இலங்கையை கைப்பற்றியபோது தமிழ் பேசும் தமிழ் குறுநாடும் சிங்களம் பேசும் பிரிவு ஒரு நாடாகவும் தான் இருந்திருக்கு, 1658 ல டச்சுக்காரர்களும் அதை தொடர்ந்து 1796 ல பிரிட்டிஷ் கை பற்றியிருக்கு, ஆனா போர்ச்சுக்கல் டச்சு இரண்டும் இந்த தீவை இரண்டு தனி நாடுகளாக தான் ஆட்சி செய்திருக்கின்றன, ஆனால் 1833 இல் பிரிட்டிஷ் ஆட்சி சுலபமாக இருக்க செயற்கையாக இரண்டு தனி நாடுகளை ஒன்றாக இணைத்தது" என்றான் முபாரக்.
"எப்படி அண்ணா உங்களுக்கு இதெல்லாம் தெரியும்" என்றாள் விஜி.
"அவர்கள் நம்ம ரத்தம் மா, அவங்களோட வரலாறு நமக்கு தெரியணும், அது நமக்கு அவசியம் இல்லையா" என்றான் முபாரக்.
"அப்புறம் என்ன ஆச்சு அண்ணா......" என்றாள் காயத்ரி.
"1948 ல பிரிட்டிஷ் சுதந்திரம் கொடுத்து அந்த நாட்டை மெஜாரிட்டியா இருந்த சிங்களர்கள் கையில் கொடுத்துச்சு சிலோன் னு பெற வெச்சு அவர்களும் ஆட்சி அமைச்சாங்க, அப்போ தான் பிரசனை ஆரம்பிச்சது, எப்படி இந்தியா பாகிஸ்தான் பிரித்து பிரிட்டிஷ் நமக்கு சூழ்ச்சி செஞ்சாங்களோ சேம் கான்செப்ட், வெவ்வேற மொழி மற்றும் பண்பாட்டை கொண்டு இரு நாடுகளாக இருந்த தீவு ஒரே நாடாக மாறும்போது ஏற்படும் அந்த சமமாக நடத்தும் முறை தோற்க தொடங்கியது. மக்களை ட்ரீட் பண்றதுல ஏற்றத்தாழ்வு ஆரம்பமானது, தமிழர்களுக்கு எதிராக மெஜாரிட்டி ஆட்களான சிங்களர்கள் கலவரத்தில் ஈடுபட தொடங்கினர்.ஈக்வல் ட்ரீட்மெண்ட் சட்டம் தோற்றது, தமிழர்களை இல் ட்ரீட் பண்ண ஆரம்பிச்சது அரசாங்கம், ஓரவஞ்சனை அதிகம் ஆனது" என்றான் முபாரக்.
"என்ன டா, என்ன பேசறீங்க" என்றபடி பிரவீன் வந்தான்.
"இல்ல, இவங்களுக்கு ஈழம் பத்தி தெரியாம பேசினாங்க, அதான் எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன்" என்றான் முபாரக்.
"டேய், இப்போ முடிக்க மாட்டியே நீ இதை ஆரம்பிச்சா" என்றான் பிரவீன்.
"பரவால்ல அண்ணா, நீங்க சொல்லுங்க, நாங்க தெரிஞ்சுக்க ஆசை படறோம், " என்றாள் விஜி.
ப்ரவீனும் அந்த டிஸ்கஷனில் சேர்ந்துகொண்டான்.
"ம்ம்ம்,எங்க விட்டேன்?" என்றான் முபாரக்.
"தமிழர்கள் மேல பார்ஷியாலிட்டி ஆரம்பிச்சது....." என்றாள் விஜி.
"ம்ம்ம், அறுபது வருஷம் இந்த பார்ஷியாலிட்டி தொடர்ந்துச்சு, மெல்ல மெல்ல சட்டங்களும் சலுகைகளும் சிங்களருக்கு மட்டுமே சாதகமாகவும் தமிழருக்கு பாதகமாகவும் இயற்றப்பட்டது. இந்த பார்ஷியலிட்டி 1948 லேயே ஆரம்பிச்சாச்சு, முதல் கட்டமா அந்த வருஷத்துல சுமார் பத்து லட்சம் தமிழர்கள் சிலோன் சிட்டிசன் இல்லை என அறிவிக்கப்பட்டு நாட்டை விட்டு அனுப்பப்பட்டனர் அகதிகளாக, 1949 ல தமிழர்கள் வாழும் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தங்களின் காலனிகளை ஏற்படுத்தினர் சிங்களர்கள். 1956 ல சிங்களம் அபீஷியல் மொழியாகவும் ஆக்கப்பட்டது, 1970 ல அனைத்து இந மக்களுக்கும் பொதுவாக இருந்த மேற்படிப்புக்காக எண்ட்ரன்ஸ் எக்ஸ்சாம்களில் ஒரே கேள்வி முறைகளும் ஆனால் தமிழர்கள் சிங்களர்களை விட முப்பது சதவீதம் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே கல்லூரிகளில் இடம் பெற முடியும் சூழலும் உருவானது. அப்படி எடுத்தும் பலபேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது" என்றான் முபாரக்.
"இரு டா, மேல நான் சொல்றேன்" என்றான் பிரவீன்.
"உனக்கும் தெரியுமா டா, " என்றாள் விஜி.
"தமிழனா இருக்கற ஒவ்வொருத்தனுக்கும் தெரிய வேண்டிய விஷயம் டா இது" என்றான் பிரவீன்.
"சொல்லு பிரவீன்...அப்புறம் என்ன ஆச்சு" என்றாள் காயத்ரி.
"1972 ல தமிழர்களின் ஈடுபாடு இல்லாமல் புதிய சட்டம் இயற்றப்பட்டது, அதில் சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்கா என மாற்றப்பட்டு குடியரசாக அறிவிக்கப்பட்டது, மேலும் புத்த மதம் தேசிய இனமாக அறிவிக்கப்பட்டது, இதைஇ எதிர்த்து தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கு தேச துரோகிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டன." என்றான் பிரவீன்.
"அதன் பிறகு 1977 இல் தீவிரவாத அடக்குமுறை சட்டம் எண்டு கொண்டுவரப்பட்டு போராடும் தமிழர்களை கொடுமை படுத்தியும் தண்டனைகள் கொடுத்தும் கொடுங்கோல் ஆட்சியை செய்தது சிங்கள அரசு." என்றான் முபாரக்.
"1976 வரைக்கும் நம்ம தமிழர்கள் நான் வயலன்ஸ் தான் போராட்ட ஆயுதமா யூஸ் பண்ணினாங்க, ஆனா அவங்க இரக்கமே காட்டல நம்ம மேல, அது மட்டும் இல்லாம சிங்கள அமைப்புகளை அரசாங்கமே தமிழர்களுக்கு எதிராக அமைத்து வன்முறை செய்ய வெச்சுது, ஆர்மில கூட தொண்ணூத்தி ஒன்பது சதவீதம் சிங்களருக்கு ஆயுதம் ஏந்திய பதவிகளை கொடுத்து தமிழர்களை ஒதுக்கியது அரசு" என்றான் பிரவீன்.
"தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ரொம்பவே அதிகமாச்சு, கூண்டோட தமிழர்களை அழிக்க அவங்க ஆரம்பிச்சாங்க, கும்பல் கும்பலா தமிழர்கள் கொல்லப்பட்டாங்க. 1976 வரைக்கும் அமைதியா ஈக்வாலிட்டிக்கு போராடின தமிழர்கள் முப்பது வருஷத்துக்கு அப்புறம் பொறுமையை இழந்ததாங்க, வடகிழக்கு பகுதி ல தாங்களாக எலெக்ஷன் நடத்தி தமிழ் தலைவர்களை தேர்ந்தெடுத்து பிரச்சனைகளை தீர்க்க முடிவெடுத்தனர். 1977 ல நடந்த தேர்தல் ல எண்பத்தி இரண்டு சதவீத தமிழர்கள் தனி தமிழ்நாடு வேண்டி போராட்ட வாக்குகள் அளித்தனர். அப்போ தான் தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போ தான் முதல் முறையாக தமிழர்களின் போராட்டம் லிபேரேஷன் டைகர்ஸ் ஆப் தமிழ் ஈழம் என்ற இயக்கமாக வெடித்தது." என்றான் முபாரக்.
"1983 ல சிங்கள அமைப்பு ஒன்று தமிழர் ஒருவரை நிர்வாணமாக கொடுமை படுத்தி அவர்மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்றது, 1985 ல திம்பு ல இந்திய அரசாங்கத்தின் மீடியேஷன்ல நடந்த பேச்சுவார்த்தை ல தமிழர்கள் சார்புல போன ஆட்கள் "தமிழர்கள் வாழும் பகுதி தனி தமிழ்நாடாக அறிவிக்க வேண்டும், தமிழ் நாட்டிற்கு தனி அந்தஸ்து வரவேண்டும், ரைட்ஸ் டு தமிழ் நேஷனல் செல்ப் டெடர்மினேஷன், அனைத்து தமிழருக்கும் குடிமக்கள் தகுதி ஆகிய பாயிண்ட்ஸ் முன்னிறுத்தப்பட்டன, ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது" என்றான் பிரவீன்.
"அந்த பேச்சு வார்த்தை தோல்விக்கு அப்புறம் தான் தமிழர்கள் எல்லாரும் எல்.டீ.டீ.இ. பின்னால் போர்க்கொடி தூக்கி அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட தொடங்கியது. அந்த போராட்டங்கள் ல சுமார் 75000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் அதுல 97 சதவீதம் பேர், சிங்களர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் பொதுமக்கள்.அதுமட்டும் இல்ல, தமிழர்கள் தங்களோட சுயமரியாதைக்காக சுமார் பதினெட்டாயிரம் இளம் உயிர்களை தியாகம் செய்தனர், எல்.டீ.டீ.இ. வடகிழக்கு பகுதி ல தமிழ் மக்களின் ரெப்ரெசெண்டேடிவாக அவர்களுக்கு சிவில் சர்வீசஸ் செய்ய தொடங்கினர்." என்றான் முபாரக்.
"2002 பிப்ரவரி வரைக்கும் சிங்கள ராணுவம் பல தமிழர்களை கொன்று குவித்தது, அப்போது தான் சீஸ்பயர் அக்ரீமெண்ட் போடப்பட்டது, அப்டின்னா என்ன தெரியுமா?" என்றான் பிரவீன்.
"தெரியாது" என்று கோரஸாக விஜி காயத்ரி இருவரும் சொன்னார்கள்.
"ம்ம்ம், தெரிஞ்சுக்கோங்க, பிப்ரவரி 2002 ல இலங்கை ராணுவமும் எல்.டீ.டீ.இ.வும் ஒரு ஒப்பந்தம் செய்தனர். தமிழர்கள் வாழும் பகுதி சிங்களர் வாழும் பகுதி என்று பார்டர் போடப்பட்டது, இரு எல்லைகளும் அவரவர் வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையாக நிற்பார்கள் என்றும், அவர்களின் ஆட்கள் பொதுமக்கள் வாழும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் பொதுமக்களை இன்னலுக்கு உள்ளாக்கமாட்டோம் என்றும் இரு அணிகளும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். அரசு சார்பில் வடக்கு பிராந்திய மேஜர் பொன்சேகாவும் தமிழர்கள் சார்பாக தீபன் என்பவரும் கையெழுத்திட்டனர்." என்றான் பிரவீன்.
"அண்ணா....இவ்ளோ இருக்கா இதுக்கு பின்னாடி" என்றாள் காயத்ரி.
"இன்னும் இருக்கு.....அதே வருஷம் நவம்பர் இரண்டு பிரிவினருக்கும் இடையே ஒஸ்லோ உடன்படிக்கை போடப்பட்டது, அமெரிக்க செக்ரெட்டரி ரிச்சர்ட் ஆர்மிடேஜ், நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜன் பீட்டர்சன், யு.கே. செக்ரெட்டரி க்ளயர் ஷாட், ஜப்பானின் யசூஷி அகாஷி முன்னிலையில் எல்.டீ.டீ.இ.இன் அய்யா ஆன்டன் பாலசிங்கம் - இலங்கையின் சார்பில் எயிறிஸ் இடையே நார்வேயில் போடப்பட்டது." என்றான் முபாரக்.
"அதன்படி இரு பிரிவுக்கும் இலங்கை அரசின் உள்ளே சுமூக தீர்வும் நிரந்தர தீரும் எடுப்பதாக சொல்லப்பட்டது." என்றான் பிரவீன்.
"அதில் போடப்பட்ட திட்டங்களை மூன்று வருடங்களில் மீறியது இலங்கை அரசு" என்றான் முபாரக்.
"என்னென்ன திட்டம் அண்ணா?" என்றாள் விஜி.
"பள்ளி, கல்லூரி மற்ற பொது இடங்களில் நிற்கவைக்கப்பட்ட ராணுவத்தை திரும்ப பெறுவது, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அவசர கால உதவி முறை அடிப்படையில் சீரமைப்பு பணிகளும் ரெஹாபிலிடெக்ஷன் ப்ரோக்ராம்களும் செய்யப்படும், வடகிழக்கு ரெகன்ஸ்ட்ரக்ஷன் நிதி ஒதுக்கப்படும், சுனாமி ல பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் ஆபரேஷன் மேனேஜ்மேண்ட் ஏற்படுத்தப்படும் போன்ற திட்டங்கள் காற்றில் விடப்பட்டன" என்றான் முபாரக்.
"அப்போது தான் 2005 தேர்தல் வந்தது, அதில் ஏற்கனவே கோபத்தில் இருந்த சிங்களர்கள் ராஜபக்சே வின் தேர்தல் அறிவிப்புகளான தமிழர்களுக்கு தனி ஆட்சி உரை தரப்படாது, தனி ரெகக்னிஷன் மறுக்கப்படும், பெடரல் முடிவுகள் தவிடு பொடி ஆக்கப்படும், நம் நாட்டிற்குள் நடக்கும் பிரச்சனைகளில் வெளிநாட்டு மத்தியஸ்தம் முடக்கப்படும் போன்ற அறிவிப்புகளால் மெஜாரிட்டி சிங்களர்கள் ராஜபக்சேவை தேர்ந்தெடுத்தனர், அவரது சட்டசபாயில் தமிழர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டனர்." என்றான் பிரவீன்.
"பின்பு புத்த மத கட்சியினரால் தூது நாடான நார்வே கோடி இலங்கையினரால் எரிக்கப்பட்டது, அதன் பிறகு மீண்டும் வயலெக்ஷன்ஸ் வெடித்தது, முதலில் நாற்பத்தி ஏழு பொது னால சேவகர்கள் கடத்தி கொல்லப்பட்டனர், ஐந்து சட்டசபை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், தமிழ் பத்திரிக்கை காரர்களும் பொது மக்களும் மீண்டும் கும்பல் கும்பலாக கொல்லப்பட்டனர், எல்லாத்துக்கும் மேல 17 பிரெஞ்சு என்.ஜீ.ஓ. பொதுநல சேவகர்கள் கொடூரமாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர், வெளிநாட்டு தூதர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டனர். 2006 இல் வங்காலையில் தாயை கற்பழித்தும் பிள்ளைகளை கொடுமை படுத்தி தூக்கிலிட்டும் இவை அனைத்தையும் தந்தையை பார்க்க வைத்து பின்பு சுட்டுக்கொல்லப்பட்டனர்" என்றான் பிரவீன்.
"2006 ஆகஸ்ட் ல முல்லைத்தீவு ல ஒரு குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டை போட்டது இலங்கை, அதில் 67 மாணவிகளும் ஏழு ஆசிரியைகளும் கொல்லப்பட்டனர், அதற்க்கு இரக்கமே இல்லாத ஒரு மந்திரி, வருங்கால தீவிரவாதிகளை கொள்வது தப்பில்லையே என்று சொன்னார்" என்றான் முபாரக்.
"போன வருஷம் சீஸ்பயர் அக்ரீமெண்டை இலங்கை ஆஃபீஷியலாக டிசால்வ் பண்ணிச்சு" என்றான் பிரவீன்.
"அதுக்கப்புறம் ஒரு நாளைக்கு ஆவெரேஜ் ஆ ஏழு தமிழர்கள் கொல்லப்பட்டனர் னு ஒரு சர்வே சொல்லுது,இப்பவும் அநியாயம் நடந்துட்டே தான் இருக்கு" என்றான் முபாரக்.
"அண்ணா, நீங்க ஏன் இவ்ளோ இவ்ளோ டென்க்ஷனா ஆயிட்டிங்க, எல்லா அநியாயத்துக்கும் தண்டனை இருக்கு அண்ணா" என்றாள் விஜி.
"சரி சரி....நோ எமோஷன்ஸ் நவ், போங்க போய் தூங்கலாம்" என்றான் முபாரக்.
"எவ்ளோ கொடுமை அண்ணா நீங்க சொன்னது, மனசே கஷ்டமா இருக்கு" என்றாள் விஜி.
"சரி விஜி, இது எல்லாம் ஜஸ்ட் தெரிஞ்சுக்க தான், போங்க, எல்லாம் நல்ல முடிவுக்கு வரும், போய் தூங்குங்க, நீங்க ரெண்டு பெரும் நர்கீஸ் கூட எங்க ரூம் ல படுங்க, நானும் ப்ரவீனும் இப்டி இங்க படுத்துக்கறோம், குட் நைட்" என்றான் முபாரக்.
"சரி அண்ணா, குட் நைட்" என்றாள் விஜி.
பகுதி 56 முடிந்தது.
(இலங்கையில் வாழும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பணம் இந்த பகுதி - ஏதும் தவறாக எழுதி இருந்தால் மன்னித்து தவறை சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்)
----------------------தொடரும்-----------------