என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 55
"பிரவீன் நமக்காக ஒவ்வொரு விஷயத்திலும் இவ்ளோ கேர் எடுத்துக்கறானே, இவன் ஏழையா அனாதையா இருக்கலாம், ஆனா இப்படி என்னை விழுந்து விழுந்து பாத்துக்கற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கறது நான் செஞ்ச பாக்யம் இல்லையா? என்ன தான் யாரும் விரும்பாலானாலும் நான் அவனை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன், எவ்ளோ இண்டெரெக்ட்டா சொல்லிட்டு தான் இருக்கேன், அவனுக்கு புரியுதா....இல்லையா....புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கறானா.....ஒண்ணுமே புரியல. ஆனா ஒரு விஷயம், அவன் இல்லன்னா நான் எப்படி இருப்பேன் னு தெரில, நான் ஒரு சேப் சோன்ல இருக்கேன், எதுவா இருந்தாலும் அவன் இருக்கான்னு ஒரு எக்ஸ்டரா கான்பிடென்ட், அப்பா அம்மா ரம்யா காயத்ரி எல்லாரையும் எப்படி பைபாஸ் பண்ரான் இவன்???அவ்ளோ பாசம் காட்றதுனால தான நம்ம மனசு அவனை இவ்ளோ எதிர்பாக்குது, இப்டி ஒருத்தன பாஸ்ட்ல எவ்ளோ கஷ்டப்படுத்திருப்பேன்? அன்னிக்கு எனக்கு கால் ல அடிபட்ட போது எந்த ஒரு யோசனையும் இல்லாம என்னோட கால தொட்டு மடியில வெச்சு என்னமா எனக்கு வலிக்காம ட்ரீட் பண்ணினான், இன்னிக்கு.....எவ்ளோ டீசெண்டா என்னோட வைட் டிரஸ் வல்கரா இருந்ததை சொன்னான், அவனோட கண் என்னை தப்பா பாத்ததா எனக்கு நினைப்பு இல்ல, எவ்ளோ வருத்தப்பட்டான் இல்ல?, எனக்கு மென்சஸ் னு தெரிஞ்சு எவ்ளோ அழகா தனக்கு புரிஞ்சுருச்சுன்னு எனக்கு புரியவெச்சான், சாப்பாட்டுல கூட என்னோட ஹெல்த எப்படி கேர் பண்ணிகிட்டான், எனக்காக இப்டி விழுந்து விழுந்து கவனிக்கிற பிரவீனை நான் கல்யாணம் பண்ணிக்கலன்னா இந்த இயற்கையே என்னை மன்னிக்காதே.....ஆனா அவன் என்ன நெனைக்கறான் னு தெரில....அந்த ஒரு விஷயம் தான் எனக்கு கொஞ்சம் தடுமாற்றமா இருக்கு, அவனோட அந்த நோட் ல கூட என்னை மிஸ் பண்றேன் அப்டி இப்படின்னு சென்டிமெண்டா நெறையா இருக்கு ஆனா லவ் பன்றானா னு ஏதாவது ஒரு பாய்ண்ட் இருக்கா....இல்லையே....எதை வெச்சு நான் ஒரு முடிவுக்கு வர்றது, ஆனா சீக்கிரமா அவனுக்கு புரியணும்...புரிய வெக்கணும்.......பாக்கலாம்....விஜியின் மனம் என்னென்னவோ நினைத்தது.
ஆனாலும், அவன் என்மேல இவ்ளோ கேர் எடுக்க என்ன காரணமா இருக்க முடியும், காதலா தான இருக்க முடியும்......அப்டின்னு முடிவு எடுக்க முடிலயே....ஏன் னா அந்த அளவுக்கு கேர் அவன் முபாரக், விஜய், ரியாஸ், எல்லார்கிட்டயும் காட்டறான், சோ இது நட்பா கூட இருக்கலாம் இல்லையா.....அவனோட தனிமையால நம்மளையும் முபாரக் ரியாஸ் விஜய் மாதிரி ஒரு நல்ல பிரெண்டா மட்டும் பாக்கறேன் னு வெச்சுப்போம், அவன்கிட்ட ப்ரபோஸ் பண்ணி அந்த நட்புக்கு களங்கம் ஏற்படுத்தவும் கூடாது....பாக்கலாம், அதுக்குன்னு ஒரு காலம் வரும்.... என்று யோசித்தபடியே டீவியை ஆன் செய்தாள் விஜி.
முபாரக் வீட்டை அடைந்தான் பிரவீன்.
"வா காயத்ரி, வா டா, எப்போ வரேன்னு சொன்னீங்க, ஏன் டா லேட்? விஜி எங்க?" என்றான் முபாரக்.
"விஜி என் வீட்ல இருக்கா, ஆட்டோல அனுப்ப விருப்பம் இல்ல, ட்ரிப்பிள்ஸ் வர காயத்ரி அன்கம்போர்ட்டபிள், சோ பர்ஸ்ட் காயத்ரி ட்ராப்பிங், தென் விஜி பிக்கப், என்றான் பிரவீன்.
"லூசு பயலே, சொல்லி இருந்தா கார் எடுத்துட்டு வந்திருப்பேன் இல்ல" என்றான் முபாரக்.
"நான் சொன்னேன் அண்ணா, விஜி தான் டிஸ்டர்ப் பண்ண வேணாம் னு சொன்னா" என்றாள் காயத்ரி.
"ஓஹோ, இது டிஸ்டர்ப் ஆ?" என்றான் முபாரக்.
"சரி அண்ணா விடுங்க, உள்ள போலாம், அப்பா அம்மா குட்டீஸ் நர்கீஸ் அக்கா எல்லாம் எங்க அண்ணா?" என்றாள் காயத்ரி.
"எல்லாரும் மாடி ல ஏசி ரூம் ல இருக்காங்க, நான் உங்களுக்காக இங்க வெய்ட் பண்ணிட்டு இருந்தேன், வா, டேய், நீ போய் விஜியை கூட்டிட்டு வா, வேண்டிய விட்டுட்டு கார எடுத்துட்டு போ, ஏன்னா நைட் டைம் ல நம்ம ரோட்டுல கண்ணுல பூச்சி அடிக்கும் ஹெட் லைட் வெளிச்சத்துல, போ, இந்தா கீ" என்றான் முபாரக்.
லாவகமாக அவன் தூக்கிப்போட்ட சாவியை பிடித்தான் பிரவீன்.
மாடிக்கு சென்று காயத்ரியை விட்டுவிட்டு மீண்டும் கீழே வந்து காத்திருந்தான் முபாரக்.
"ஹே காயத்ரி....வா வா என்ன......எப்படி இருக்க, வீட்ல எல்லாரும் ஓகே தான" என்றாள் நர்கீஸ்.
"எல்லாரும் நல்லா இருக்காங்க அக்கா, நீங்க குட்டிஸ் அங்கிள் ஆன்டி எல்லாரும் நல்லா இருக்கீங்களா?" என்றாள் காயத்ரி.
"நல்லா இருக்கோம் டா, குட்டிஸ் பாரு, என்ன வேலை பண்ணுதுங்கன்னு...."என்றபடி கையை காட்டினாள் நர்கீஸ்.
அங்கே பாட்டி தாத்தா இருவருக்கும் முகத்தில் மீசை வரைந்துகொண்டிருந்ததை பார்த்து சிரித்தாள் காயத்ரி."சரி, வா நாம நம்ம ரூம் கு போகலாம், வாப்பா அம்மா தூங்கட்டும், வாப்பா, நீங்க பசங்ககூட இருங்க, இப்போ தூங்கிடும் ரெண்டும், நாங்க கீழ எங்க ரூமுக்கு போறோம்" என்றாள் நர்கீஸ்.
"சரிம்மா, பாப்பாக்கு ஏதாவது சாப்பிட குடு" என்றார் மைபாராக்கின் தந்தை.
"இன்னுமா கா பசங்க சாப்பிடல?" என்றாள் காயத்ரி.
"ஹேய்....அவரு பாப்பான்னு சொன்னது உன்னை" என்றாள் நர்கீஸ்.
"ஓ அப்படியா, நான் சாப்பிட்டேன் அங்கிள்" என்றாள் காயத்ரி.
"அப்டியாமா, டி காப்பியாச்சும் குடிக்கறது" என்றார் முபாரக்கின் தந்தை.
"சரி அங்கிள்" என்றபடி அறையை விட்டு வெளியே வந்தனர் நர்கீஸும் காயத்ரியும்.
பிரவீன் காரை தனது வீட்டை நோக்கி ஒட்டி வந்துகொண்டிருந்தான்.
அப்போது ரம்யாவின் போன் வந்தது.
"ஹாய், எப்படி இருக்கீங்க, என்ன ஸ்பெஷல். ரெண்டு நாள் வீகென்ட் ஆச்சே, இப்போ தான் விஜி அக்காக்கு போன் பண்ணேன், ஆனா அட்டென்ட் பண்ணல, எக்ஸாம் முடிஞ்சாச்சு. எல்லா எக்ஸாமும் செம்மயா பண்ணிருக்கேன்" என்றாள் ரம்யா.
"ம்ம்ம் வெரி குட், யாரோட தங்கை நீ.....நல்லா தான் படிப்ப...விஜி என் வீட்ல தான் இருக்கா, கடலூர் வந்திருக்கா, காயத்ரியும் தான். இன்னிக்கு நான் தான் சமையல், சாப்பிட்டு நைட் முபாரக் வீட்ல ஸ்டே. ரெண்டு நாள் கடலூர் தான்" என்றான் பிரவீன்.
"ஓஹோ, சூப்பர் சூப்பர், நான் இல்ல அங்க.....நீங்க எல்லாரும் நல்லா என்ஜாய் பண்றீங்க, பொறாமையா இருக்கு, ஒன்னும் பிரச்சனை இல்ல, இன்னும் ரெண்டு நாள் தான், நானும் வந்து ஜாயின் பண்ணிடுவேன் உங்க க்ரூப் ல" என்றாள் ரம்யா.
"கண்டிப்பா....யு ஆர் மோசட் வெல்கம்" என்று போனை வைத்தான் பிரவீன்.
வைத்த அடுத்த நொடியே விஜி ரம்யாவுக்கு கால் செய்தாள். "ரம்மி, என்ன டி எக்ஸாம் எல்லாம் எப்படி பண்ணின, சாரி டி, நீ கால் பண்ணும்போது பாத்ரூம் ல இருந்தேன், திருப்பி பண்ணும்போது பிஸின்னு வந்தது சொல்லு டி" என்றாள் விஜி.
"ஆமாம், பிரவீன் கூட பேசிட்டு இருந்தேன்" என்றாள் ரம்யா.
"என்ன பேசின" என்றாள் விஜி.
"ஹலோ....இது தேவையா அக்கா, அதை விடு, கடலூர் ல என்ஜாய் பண்ணிட்டு இருக்கியாமே, பொறாமையா இருக்கு கா, எப்போ மண்டே வரும் னு இருக்கு, நானும் உங்க க்ரூப் ல சேந்துடுவேன் இல்ல" என்றாள் ரம்யா,
"ஏய், சின்ன பொண்ணா லச்சணமா இரு" என்றாள் விஜி.
"ஆமாம் இவங்களுக்கு அவ்வயார் வயசு ஆயிருச்சு பாரு, என்னை சின்ன பொண்ணுன்னு சொல்றாங்க" என்றபடி சிரித்தாள் ரம்யா.
"சரி சரி....வாயாடி, தூங்கு, நாளைக்கு காலைல போன் பண்றேன், நானும் காயத்ரியும் ப்ரவீனும் உன்னை பிக்கப் பண்ண மண்டே வரோம்" என்றாள் விஜி.
"ஓ ஓகே ஓகே, நான் அப்புறம் பேசறேன்" என்று போனை வைத்தாள் ரம்யா.
வெளியே காரின் ஹாரன் கேட்டது. அடுத்த நொடியே பிரவீனின் கால் வந்தது.
"ஹலோ விஜி, நான் வந்துட்டேன், கதவை திற" என்றான் பிரவீன்.
கதவை திறந்தாள் விஜி.
"என்னை டா, வண்டி எங்க? கார எடுத்துட்டு வந்திருக்க?" என்றாள் விஜி.
"முபாரக் தான் வண்டி வேணாம் கார எடுத்துட்டு போக சொன்னான், வா போலாமா?" என்றான் பிரவீன்.
"அந்த நோட்டில் இருக்கும் வார்த்தைகளுக்கு என்னை அர்த்தம்" என்று கேட்க சொல்லி விஜியின் மனம் நச்சரித்தது. ஆனால் அது அவனுடைய பர்சனல், அவனை கேட்காமல் அதை படித்தது தவறு, அவன் ஏதாவது நினைத்துவிட்டால்......அவன் என்னை காதலித்தால் கண்டிப்பாக அவனே சொல்லுவான், பார்க்கலாம், " என்று நினைத்தபடியே "போலாம் டா" என்றாள் விஜி.
"ஒரு நிமிஷம், எல்லாம் செக் பண்ணிட்டு வரேன்" என்றான் பிரவீன்.
"என்னை செக் பண்ணணும்?" என்றாள் விஜி.
"பாரு" என்றபடி ஒவ்வொரு ரூமாக சென்றான் பிரவீன்.
"வா இப்போ போகலாம்" என்றான் பிரவீன்.
"நீ என்ன செக் பண்ணின" என்றாள் விஜி.
"எல்லா ரூம் லைட் பேன் எல்லாம் அணைச்சிருக்கா, சாமி ரூம் ல ஸிரோ வாட்ஸ் பல்ப் எரியுதா, கேஸ் எல்லாம் ஆப் ஆயிருக்கா, எல்லாம் பாக்கணும்" என்றான் பிரவீன்.
"ஓஹோ, ரொம்ப பர்பெக்ட் தான் டா நீ"என்றாள் விஜி.
"தேங்க்ஸ் விஜி அவர்களே.....போலாமா" என்றான் பிரவீன்.
காரில் முன் இருக்கையில் உட்கார்ந்தாள் விஜி.
கார் நகர தொடங்கியது.
"பிரவீன், திரும்பி திரும்பி கேக்கறேன் னு நினைக்காத, என்னை உனக்கு நெஜமாவே ரொம்ப புடிக்குமா டா" என்றாள் விஜி.
"விஜி, நீ எவ்ளோ வாடி கேட்டாலும் ஒரே பதில் தான், என்னை எனக்கு எவ்ளோ புடிக்குமோ உன்னை அதைவிட அதிகமா புடிக்கும், இதை உலகம் பூரா ஒரு பக்கம் வெச்சு மறுபக்கம் உன்னை மட்டும் வெச்சா கூட எனக்கு நீ தான் டா பெருசு" என்றான் பிரவீன்.
"ஒரு பக்கம் முபாரக், விஜய், ரியாஸ் மூணு பேரையும் வெச்சு மறுபக்கம் என்னை வெச்சா உனக்கு யாரு டா பெருசு" என்றாள் விஜி.
இந்த கேள்வியை பிரவீன் எதிர்பார்க்கவில்லை.
சற்று அமைதியாய் வந்தான்.
விஜிக்கோ அவனது பதிலை அறிந்துகொள்ள ஆவல்.
"சொல்லு டா என்ன யோசிக்கிற" என்றாள் விஜி.
"இது ரொம்ப கஷ்டமான கேள்வி டா" என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதி ஆனான்.
பெண்களுக்கே உரிய அந்த பொசெசிவ்னெஸ் விஜியின் கேள்வியில் தெரிந்தது.
"என்ன டா, தப்பான கேள்வி கேட்டுடேனா, சரி சொல்ல முடிலன்னா விடு டா, உன்னை இக்கட்டான சூழ்நிலை ல நான் என்னிக்குமே விட மாட்டேன் டா, சாரி பார் தி ராங் க்வெஸ்ட்டின்" என்றாள் விஜி.
"இல்ல விஜி, என்னிக்கு இருந்தாலும் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லும் இடத்துக்கு வந்து தான் ஆகணும், ஆனா இன்னிக்கு அந்த பதிலுக்கு நான் தயார் ஆகலைன்னு நினைக்கறேன்" என்றான் பிரவீன்.
"என்னிக்கு உனக்கு விடை தெரியுதோ அன்னிக்கு எனக்கு சொல்லு டா" என்றாள் விஜி.
விஜியின் கேள்வி ப்ரவீனுக்குள் பல தகவல் பரிமாற்றங்களை செய்தது, அவனால் காரை சரியாக ஓட்டமுடியாமல் தவித்தான். ஒரு கட்டத்தில் வண்டியை ஓரம் கட்டிவிட்டு "ஒரு நிமிஷம் விஜி" என்று சொல்லி வண்டியில் இருந்து இறங்கி சற்று தூரம் நடந்தான். விஜி அவன் பின்னாலேயே நடந்து "என்ன டா, என்ன ஆச்சு, எனிதிங் ராங்?" என்றாள் விஜி.
"இல்ல டா, ஏதோ மனசு கண்ட்ரோல் ல இல்லாம போகுது, நீ கார் ல வெய்ட் பண்ணு, ஒரு டு த்ரீ மினிட்ஸ் நான் வரேன்" என்றான் பிரவீன்.
"இல்ல டா, உனக்கு என்ன ஆச்சு, சொல்லு ப்ளீஸ், என்னால தான? உன்னை கஷ்டப்படுத்திட்டேனா டா" என்றாள் விஜி.
"இல்ல டா, நீ என்ன பண்ணினாலும் அது எனக்கு சந்தோசம் தான் டா" என்றான் பிரவீன்.
"பிரவீன், நான் கேட்டது தப்பா டா" என்றாள் விஜி.
"இல்ல டா, நீ கார் ல இரு, ஜஸ்ட் டு மினிட்ஸ் வரேன்" என்றான் பிரவீன்.
பிரவீனின் கையை பிடித்து தனது கன்னத்தில் வைத்துக்கொண்டு கண்களை மூடி "சாரி டா, ஏதோ ஒரு பொசெசிவ்னெஸ் ல தான் கேட்டுட்டேன், உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்கும் டா, உன்னை இனிமே கஷ்டப்படுத்த மாட்டேன், நான் கார்ல வெய்ட் பண்றேன், வா டா, சாரி" என்று சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தாள் விஜி.
கண்கள் கலங்குவதை கூட அவள் மனம் உணர மறுத்தது. அவளது மூளையோ கண்களில் இருந்து வழியும் கண்ணீரை துடைக்க கைகளுக்கு தகவல் தர மறுத்தது. காருக்குள் சென்று உட்கார்ந்து திருப்பி பின்னால் இருக்கும் கண்ணாடி வழியாக பிரவீனை பார்த்தாள் விஜி.
அவன் தனது கண்களை தனது கைக்குட்டையால் துடைத்துக்கொண்டிருந்தான்.
பகுதி 55 முடிந்தது.
--------------------தொடரும்-----------------------