என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 54

கதவை திறந்த விஜியை பார்த்த பிரவீன் ஆச்சர்யமானான், அவ்வளவு அழகாக இருந்தாள், ஈரமான கூந்தல், அது முன்னெற்றியில் இருந்த ஈரத்தில் ஒட்டிக்கொண்டு வெள்ளை நிலவு போன்ற முகத்தில் மேகக்கூட்டம் நடனமாடுவது போல், காதில் தொங்கும் மணி போன்ற தொங்கல், மூக்குத்தி, கன்னத்தில் குழி விழும் சிரிப்பு, பொட்டு வைக்காத பிறை நிலா நெற்றி, உதட்டு சாயம் இல்லாமலே சிவந்திருக்கும் இதழ், கழுத்தில் தொங்கும் பிரவீன் கொடுத்த செயின், ப்ரவீனுக்கு பிடித்த கருப்பு நிற ஆடை, கையில் இருக்கும் தங்க வளையல், காலில் அன்னப்பறவை கொலுசு சத்தம், சாயமிட்ட நகங்கள்.......வானுலக தேவதை மண்ணில் பிரவீனை காண வந்த அதிசயம்.......

"என்ன டா, என்ன டி....அப்டியே நிக்கறீங்க, சீக்கிரம் உள்ள வாங்க, பசி எடுக்குது, நீ எப்போ சமைச்சு நான் எப்போ சாப்பிட்டு பாட்டி வீட்டுக்கு போறது, ஒரு விஷயம் பண்ணலாமா, சாப்பிட்டு நைட் முபாரக் அண்ணா வீட்டுக்கு போய் நர்கீஸ் அக்கா கூட தங்கிடலாமா, இல்லன்னா, ஒரு சேஞ்சுக்காக ரகு அண்ணா வீட்ல போய் தங்கலாமா அவரோட சிஸ்டேர்ஸ் கூட?, நான் பாட்டிகிட்ட பேசிக்கறேன்" என்றாள் விஜி.

"குட் ஐடியா டி, முபாரக் வீட்டுக்கு போய் தங்கலாம்" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், சரி நீ போய் குளி, வெந்நீர் போட்ருக்கேன், அதுக்குள்ள நான் முபாரக் அண்ணா கிட்ட சொல்றேன், பிரவீன், அப்டியே மசமசன்னு நிக்காம போய் சமை. போ, சரியான சோம்பேறியா இருக்கியே" என்றாள் விஜி.

"யாரு நானா, இப்போ பாரு எவ்ளோ வேகமா சமைக்கிறேன் னு' என்றான் பிரவீன்.

"ஹலோ....வேகமா எல்லாம் வேணாம், சாப்பிடற மாதிரி செய், வேக வேகமா பண்ணி வயித்துவலி வர வெச்சுறாத, ஏற்கனவே இயற்கை வயித்துவலி வந்துருச்சு" என்றாள் விஜி.

"ம்ம்ம், சரி சரி, சாப்டுட்டு சொல்லுவ பாரு, இப்டி ஒரு சாப்பாட நீ சாப்பிட்டதே இல்லை னு" என்றான் பிரவீன்.

"பாக்கலாம் பாக்கலாம், வாயால வடை சுடாத, போ போய் சமை, நான் டிவி பாக்கறேன்" என்றாள் விஜி.

காயத்ரி குளிக்க சென்றாள். பிரவீன் கிச்சனுக்கு போனான், விஜி முபாரக்கிற்கு போன் செய்தாள். போனில் முபாரக்கும் தாராளமா வரலாமே, ரொம்ப சந்தோசம் என்று தெரிவிக்க, விஜி மெல்ல சோபாவில் உட்கார்ந்து டிவி பார்க்க தொடங்கினாள்.

இருப்பு கொள்ளவில்லை. கிச்சனுக்கு சென்றாள். பிரவீன் சமைப்பதை பார்த்தாள். எவ்வளவு சுத்தமாக செய்கிறான் என வியந்தாள்.

"என்ன விஜி அப்டி ஆச்சர்யமா பாக்கற, உனக்கு சமைக்க தெரியுமா..." என்றான் பிரவீன்.

"எனக்கு தெரியாது, நல்லா சாப்பிட தான் தெரியும், காயத்ரிக்காவது இட்லி தோசை சப்பாத்தி எல்லாம் பண்ண தெரியும், எனக்கு ஒன்லி ஹாட் வாட்டர் வெக்க தான் தெரியும்," என்றாள் விஜி.

"பாவம் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன்" என்றான் பிரவீன்.

"நான் கண்டிப்பா நல்லா சமைக்க தெரிஞ்சவன் தான் கல்யாணம் பண்ணிப்பேன் னு நெனைக்கிறேன், சரி தான" என்று சிரித்தபடியே சொன்னாள் விஜி.

"எனக்கு எப்படி தெரியும் விஜி, அப்டி கெடச்சா நல்லது தான்" என்றான் பிரவீன்.

"கண்டிப்பா எனக்கு தெரியும், நல்லா சமைக்க தெரியற ஆளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்றாள் விஜி.

"ஆமாம், நீ என்ன பியூச்சர கணிக்கற ஜோசியக்காரியா" என்றான் பிரவீன்.

"இல்ல, பியூச்சர பாத்துகிட்டே தான இருக்கேன், என் கண்ணு முன்னாடி" என்றாள் விஜி.

"நீ என்ன கமல் சார் படம் மாதிரி புரியாமயே பேசற, சரி, நான் வெங்காயம் நறுக்க போறேன், கண்ணு எரியும், நீ போய் ஹால் ல உக்காரு டா" என்றான் பிரவீன்.

"இல்ல பரவால்ல, நான் நீ எப்படி செய்யறேன்னு பாக்கறேன்" என்றாள் விஜி.

"ஓகே ஓகே, அப்புறம் உன் இஷ்டம்" என்றான் பிரவீன்.

டக் டக் என அவ்வளவு வேகமாக வெங்காயத்தை வெட்டினான் பிரவீன். இருந்தாலும் அத்தனை சரியான ஷேப்பில் இருந்தது.

"எப்படி டா, இவ்ளோ எக்ஸ்பெர்ட்டா வெங்காயம் வெட்டற" என்று ஆச்சர்யமாக கேட்டாள் விஜி.

"எல்லாம் பிராக்டிஸ் விஜி, உனக்கு கண்ணு எறியாம வெட்டினேனா, சூப்பர் இல்ல?" என்றான் பிரவீன்.

"எப்படி டா அது" என்றாள் விஜி.

"நீ இங்க இருப்பேன் னு சொல்லிட்டே, உனக்கு நான் வெங்காயம் நறுக்கும்போது கூட நீ என்னால கண் கலங்க கூடாது, அதான் அதுக்கு ஒரு சின்ன ப்ரிபரேஷன் பண்ணிட்டேன்" என்றான் பிரவீன்.

"எங்க அம்மா வெங்காயம் நறுக்கும்போது கூட கண்ணு எரியும் டா, நீ எப்படி டா...." என்றாள் விஜி.

"அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல டா, நீ கண் கலங்க கூடாது, அதான் எனக்கு முக்கியம், அதுவும் என்னால நீ கண் கலங்க கூடாது, வெங்காயத்தை வினிகர் ரெண்டு சொட்டு ஊத்தி ஹாட் வாட்டர் ல 2 மினிட்ஸ் போட்டுட்டு நறுக்கினா கண்ணு எரியாது" என்றான் பிரவீன்.

"சூப்பர் டா" என்றாள் விஜி.

"பாரு.....நான் கிரேட் இல்ல?, பியூச்சர்ல உன்னோட புருஷன் சமைக்கும்போது அவன்கிட்ட நீ சொல்லு, உன்னை கண்கலங்காம பாத்துக்கணும் அவன், அதனால இந்த ட்ரிக்கை அவனுக்கு சொல்லி குடு" என்றான் பிரவீன்.

"ஐ திங்க், இந்த ட்ரிக் நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பையனுக்கு தெரியும் டா.....அவன் கண்டிப்பா என்னை கண்கலங்காம பாத்துக்குவான் னு எனக்கு தெரியும்" என்று மறைமுகமாக சொன்னாள் விஜி.

"விஜி, நீ இருந்தாலும் என்னைவிட ரொம்ப ஓவர் கான்பிடென்ட்" என்றான் பிரவீன்.

"என்ன டி, இங்க கிச்சன் ல...உனக்கு தான் ஒண்ணும் தெரியாதே..." என்றபடி காயத்ரி வந்தாள்.

"இல்ல டி, ஒரு ஆம்பள, எப்படி எக்ஸ்பெர்ட்டா சமைக்கறான்....எஸ்பெஷாலி அவன் அந்த வெங்காயத்தை நறுக்கினால் பாரு, அப்ப்பா......செம்ம டி" என்றாள் விஜி.

"நீ இப்டி பாத்துகிட்டே இரு, கத்துக்காத" என்றாள் காயத்ரி.

"என்ன, நான் ஏன் சமைக்கணும், நான் கல்யாணம் பண்ணிக்கபோறவன் நல்லா சமைப்பான், வீட்ல ஒருத்தருக்கு சமைக்க தெரிஞ்சா போதும்" என்றாள் விஜி.

சற்று நேரத்திலேயே அனைத்து சமையலையும் முடித்தான் பிரவீன்.

அப்படி ஒரு நேர்த்தியான சமையல் விஜி இதுவரை பார்த்ததே இல்லை.

சற்று நேரத்திலேயே இவ்வளவு வகை உணவு தயாரிப்பு, ஒரு பெண்ணால் கூட இவ்வளவு வேகமாகவும் சுவையாகவும் மணமாகவும் நேர்த்தியாகவும் செய்யமுடியுமா என்பது கேள்விக்குறியே......

உதிரி உதிரியாக சரியான பதத்தில் எடுக்கப்பட்ட சாதம், வெண்டைக்காய் சிறிய வெங்காயம் போட்ட சாம்பார், மோர்க்குழம்பு, அப்பளம், பருப்பு பாயசம், வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு செய்த தக்காளி, ராஜ்மா, டபுள் பீன்ஸ் போட்ட குருமா, ரசம், வெங்காயம் போட்டு செய்த கேரட் பொரியல் என்று அசத்தி இருந்தான் பிரவீன்.

"எப்படி டா, இவ்ளோ ஐட்டம், இவ்ளோ டேஸ்டியா...:; என்றாள் விஜி.

"என்ன விஜி இது எல்லாம் சாதாரணம்" என்றான் பிரவீன்.

ஒவ்வொன்றும் அவ்வளவு ருசியாக இருந்தது.

இவை தவிர, சீராக வெட்டப்பட்ட அவோகேடோ பழங்கள், வாழை, பாதாம், முட்டை மஞ்சள் கருவில் செய்யப்பட்ட ஒரு பணியாரம் போன்ற ஐட்டம் என்று தனியாக செய்திருந்தான்.

"என்ன இருந்தாலும் எனக்கு உருளை கிழங்கு பிரை ரொம்ப புடிக்கும்" என்றாள் விஜி.

"இல்ல விஜி, இந்த டேஸ்ல நீ கேஸ் ஐட்டம் ஹீட் ஐட்டம் சாப்பிட கூடாது, அதான் பண்ணல" என்றான் பிரவீன்.

ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றாள் விஜி. காயத்ரியும் கூட ஆச்சர்யப்பட்டாள்.

"ஓஹோ, ரொம்ப கேர் தான் போங்க, அப்டின்னா இப்போ செஞ்சிருக்கற எல்லாமே விஜி ஹெல்த்துக்கு ரொம்ப நல்லதா, ரொம்ப ஓவரா இருக்கே...." என்றாள் காயத்ரி.

"ஆமாம் காயத்ரி, இது இந்த டைம் ல விஜிக்கு முக்கியமான சாப்பாடு தான், அவளுக்கு மட்டும் இல்ல, உனக்கும் இந்த மாதிரி டைம் ல இது சாப்டா அந்த டைம் அனீஸி எதுவும் இருக்காது" என்றான் பிரவீன்.

"என்ன பிரவீன் சொல்ற..." என்றாள் விஜி.

"ஆமாம் விஜி, கருப்பு பாலிதீன் மெடிக்கல் ல இருந்து வந்தா என்னன்னு எனக்கும் தெரியும், எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா.....இருந்தா......." என்றான் பிரவீன்.

"சோ....." என்றாள் காயத்ரி.

"இந்த டைம் ல, ஹார்மோன்ஸ் கம்மியா சுரக்கும், டைஜஸ்டிவ் என்சைம்ஸ் ஸ்லோவா ரியாக்ட் பண்ணும், சோ ஹெவியா சாப்பிட கூடாது, உடம்புக்கு உஷ்ணம் தர சாப்பாடை அவாய்ட் பண்ணணும், அது மட்டும் இல்ல, இந்த டைம் ல நீங்க எப்போதும் சாப்பிட்றத விட அதிகம் கேல்ஷியம், பைபர், அயன், மக்னிஷியம், வைட்டமின் பி 12 மற்றும் டி, ஒமேகா 3 எஸ், எடுக்கணும்.இது உங்களுக்கு ஏற்படும் அசைவுகரியங்களை தடுக்கும், அதுமட்டும் இல்ல, இப்படி சாப்பிட்டா ரெகுலரைஸ் ஆகும், இப்போ இல்லனாலும் உங்க பியூச்சருக்கு நல்லது, அதனால தான் இது மருத்துவ ருசியான சாப்பாடு, அதனால தான் கேல்ஷியம்க்காக டைரி ப்ராடக்ஸ்....மோர் குழம்பு, தயிர்ல வெந்தயம், வெந்தயம் உடம்பை குளிர்ச்சியாக்கும், எல்லாமே செக்கு கடலை எண்ணெய் ல பண்ணிருக்கேன், பாதாம் டபுள் பீன்ஸ் ராஜ்மா போன்ற பீன்ஸ் வகைல அதிக பைபர் இருக்கு, அதான் இந்த குருமா, சாலட் ல பாதாம், இரும்பு சத்துக்காக....ஐ மீன், அயன் காக இந்த ராஜ்மா மசாலா, மெக்னீஷியம் காக அவோகேடோ, வாழைப்பழம் சாலட், டே டைமா இருந்தா கீரை செஞ்சுருப்பேன், நைட்ல கீரை சாப்பிட்டா டைஜெக்ஷன் ஸ்லோ ஆய்டும், அதான் அதுக்கு சாப்ஸ்டிடுட், ஒமேகா 3 எஸ் அண்ட் பி 12 காம்பினேஷன் முட்டை மட்டும் பாதாம் ல இருக்கு, சோ முட்டை ல செஞ்ச ஒரு ஸ்பெஷல் டிஷ், வைட்டமின் டி முட்டை மஞ்சள் கரு ல இருக்கு அதன் இந்த ஸ்பெஷல் டிஷ்..." என்றான் பிரவீன்.

"டேய், நெஜமாவே நீ கிரேட் டா, என் அம்மாகூட இப்டி பண்ணிருக்க மாட்டாங்க, எப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் நீ இவ்ளோ கேர் எடுத்துக்கற, எனக்கு ரொம்ப சந்தோசம் டா, உன்கூடவே இருந்தா இந்த உலகத்துலயே என்னைப்போல சந்தோஷமான ஆள் யாரும் இருக்க மாட்டாங்க டா, எனக்குன்னு கடவுள் இந்த பிரவீனை குடுத்துருக்கான் டா, நீ என் லைப்ல வந்ததுக்கு அப்புறம் நான் எதுக்குமே கஷ்டப்படல, எந்த பிரச்சனை வரும் னு நான் பயந்ததே இல்லை டா, எதுவா இருந்தாலும் பிரவீன் இருக்கான் னு நெனச்சுக்குவேன், என்னை இப்டி ஒரு கம்போர்ட் சோன்லயே வெச்சுருக்கியே டா, நீ இல்லாத ஒரு காலம் வந்தா நான் தனியா இந்த உலகத்துல எதையும் தனிச்சு ஹேண்டில் பண்ண முடியாத ஒரு குழந்தையை போல ஆக்கிட்டியே டா" என்றாள் விஜி.

"விஜி, டைம் ஆகுது, உன்னோட சென்டிமென்டை கொஞ்சம் நிறுத்து, சீக்கிரம் சாப்பிட்டு முபாரக் அண்ணா வீட்டுக்கு போய் அங்க உன்னோட பாச மழையை பொழிஞ்சுக்கோ" என்றாள் காயத்ரி.

"ஆமாம், எப்படி போறது முபாரக் அண்ணா வீட்டுக்கு, ட்ரிப்பிள்ஸ்...?" என்றாள் விஜி.

"ஹலோ, அதெல்லாம் இல்ல, சேம், இந்த வாட்டி எண்ணெய் முதல்ல டிராப் பண்ணிட்டு வரட்டும், நெக்ஸ்ட் உன்னை ஏத்திட்டு வரட்டும்" என்றாள் காயத்ரி.

"ஏய், முபாரக் அண்ணா வீடு கடலூர் ஓ.டீ. ல இருக்கு டி, போர்துக்கே அரைமணி நேரம் ஆகும்" என்றாள் விஜி.

"பரவால்ல,ஒண்ணும் ப்ராப்ளேம் இல்ல, நான் வேணும்னா அன்னமிட்ட போன் பண்ணி கார் எடுத்துட்டு வரமுடியுமான்னு கேக்கறேன்" என்றாள் காயத்ரி.

"ஏய்...தேவை இல்லாம எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணாத, சரி, நீ பர்ஸ்ட் போய் அங்க இறங்கு, நெக்ஸ்ட் பிரவீன் எண்ணெய் கூட்டிட்டு போவான்" என்றாள் விஜி.

அந்த நேரம் டேவிட் மெசேஜ் செய்தான் விஜிக்கு. "விஜி, ஐ ஆம் ஆன் தி வே டு பண்ருட்டி, க்ராஸ்ட் விக்கிரவாண்டி" என்று மெசேஜ் வந்தது.

"இந்த லூசு வேற மெசேஜ் பண்ணுது" என்றாள் விஜி.

"யாரு" என்றான் பிரவீன்.

"டேவிட், அந்த லூசு பண்ருட்டி வருதாம், வரபோற டோர்னமெண்ட்ல அதுவும் வெளயாடுதாம், திருப்பி வாங்கி கட்டிக்க வருது" என்றாள் விஜி.

"விஜி, அப்டி எல்லாம் சொல்லாத, அவன் தான் மாறிட்டான் இல்ல" என்றான் பிரவீன்.

"இது தான் டா உன்னை மேல மேல நெனைக்க வெக்கிது" என்றாள் விஜி.

சாப்பிட்டுவிட்டு எழுந்தனர் இருவரும்.

"சாப்பாடு எப்படி விஜி" என்றான் பிரவீன்.

"சூப்பர் டா, நான் ரொம்ப குடுத்து வெச்சவ தான்" என்றாள் விஜி.

ப்ரவீனுக்கு விளங்கியதாக தெரியவில்லை.

"சரி விஜி, நீ சேம் லைக் பிபோர் கதவை உள்ளால தாப்பாள் போட்டுட்டு உள்ள இரு, நான் காயத்ரியை டிராப் பண்ணிட்டு வரேன். நான் கால் பண்ணதும் நீ கதவை திறந்தா போதும், ஓகே" என்றான் பிரவீன்.

"சரி டா" என்றபடி அவர்கள் வெளியே செல்லும்போது "காயத்ரி....ஒன் சைட் கால் போட்டு உக்காரு" என்றாள் விஜி.

"அம்மா தாயே.....எனக்கு தெரியும், நன் வரும்போதே அப்டி தான் உக்காந்து வந்தேன், நீ வருத்தப்படாத, உள்ள போய் வெய்ட் பண்ணு," என்றாள்.

வண்டி மெல்ல நகரத்தொடங்கியது.

உள்ளே சென்று விஜி தாழிட்டாள்.

பகுதி 54 முடிந்தது.

-------------------------தொடரும்--------------------------

எழுதியவர் : ஜெயராமன் (22-Sep-17, 2:16 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 314

மேலே