என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 53

மாலை மிகவும் ஆர்வமாக பிரவீன் போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பிங்கில் காத்திருந்தான். காயத்ரியிடம் இருந்து ஏற்கனவே மெசேஜ் வந்திருந்தது. அவர்கள் புதுவையில் இருந்து கடலூர் வரும் டீ.வி,எம்.எஸ். பேருந்தில் வந்து கொண்டிருப்பதாக செய்தி அனுப்பி இருந்தாள்.

பிரவீன் வந்து நின்று பத்து நிமிடத்தில் அந்த பேருந்தும் வந்தது. பேருந்தில் இருந்து விஜியும் காயத்ரியும் இறங்கினர்.

அவர்களை கண்டவுடன் ப்ரவீனுக்கு அப்படி ஒரு ஆனந்தம். என்ன தான் வசியம் வசீகரம் இருக்கிறது விஜியிடம்.

"என்ன விஜி, எப்படி இருக்க, வெல்கம் டு கடலூர், தி லேண்ட் ஆப் பிரவீன், வெல்கம் காயத்ரி, ஓகே தான, இந்த டைம் ல பாண்டி கடலூர் பஸ் ரொம்ப கூட்டம் இருக்கும் னு எனக்கு தெரியும், அதான் நான் வந்து பிக்கப் பண்றேன் னு சொன்னேன், பாரு, எப்படி இருக்கீங்க ரெண்டு பெரும், வாடி போன ரோஜா பூ மாதிரி இருக்கீங்க, எப்படி வேர்த்து கொட்டிருக்கு பாரு, சீட் கெடச்சுதா இல்லையா" என்றான் பிரவீன்.

"இல்ல பிரவீன், சீட் கிடைக்கல, நின்னுட்டு தான் வந்தோம்,நெஜமாவே ஹெக்டிக் டிராவல் இது" என்றாள் விஜி.

"அதுவும் லூசு மாதிரி வெள்ளை டிரஸ் போட்டுட்டு வருவாங்களா" என்றான் விஜய்.

"ஏன், இதுக்கு என்ன" என்றாள் விஜி.

"என்னவா. வீட்டுக்கு வந்து கண்ணாடி முன்னாடி நில்லு தெரியும், அது சரி, நீ என்ன டல்லா இருக்க" என்றான் பிரவீன்.

"ம்ம்ம்,அவளுக்கு ஜுரம் ரெண்டு நாளா" என்றாள் காயத்ரி.

"ஏன், என்ன ஆச்சு, " என்றான் பிரவீன்.

"என்னன்னு தெரில, சடனா ஜுரம், பட் ஓகே, வா போலாம், ரொம்ப சோர்வா இருக்கு" என்றாள் விஜி.

"சரி இரு, ஆட்டோ புடிக்கறேன்" என்றான் பிரவீன்.

"இல்ல, உன்னோட பைக் ல ட்ரிப்பிள்ஸ் போய்டலாம், கொஞ்ச தூரம் தான," என்றாள் விஜி.

"ஏய், என்ன டி, ட்ரிப்பிள்ஸ் போலாம் னு சொல்ற, வேணாம், உன்னை முதல்ல போய் இறக்கி விடட்டும், நான் வெய்ட் பண்றேன், அப்புறம் வந்து என்னை ஏத்திட்டு வரட்டும்" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, பிரவீன் வண்டி சீட் கொஞ்சம் பெருசு தான், வா ஒரே டைம் ல போய்டலாம்" என்றாள் விஜி.

"இல்ல வேணாம், நான் வெய்ட் பண்றேன்" என்றாள் காயத்ரி.

"சரி, நீ இரு, ஜஸ்ட் பிப்ட்டின் மினிட்ஸ் குள்ள வந்துடுவான், ஓகே" என்றாள் விஜி.

வண்டியில் இரண்டு பக்கமாக காலை போட்டு அமர்ந்தாள் விஜி. பிரவீன் வண்டியை சற்றே வேகமாய் செலுத்த, வண்டி காயத்ரியின் பார்வையில் இருந்து மறைந்தது.

"விஜி, ஏன் உனக்கு பீவர்" என்றான் பிரவீன்.

"உண்மையா சொல்லனும்னா, உனக்கு பீவர் னு தெரிஞ்சதுமே எனக்கு பீவர் வந்துருச்சு டா, ஐ ஆம் டோட்டலி கண்ட்ரோல்லேட் பை யுவர் திங்கிங்" என்றாள் விஜி.

"என்ன விஜி சொல்ற, பாரு, இதுக்கு தான் எனக்கு உடம்பு சரி இல்லன்னு யார்கிட்டயும் சொல்லாம இருந்தேன்." என்றான் பிரவீன்.

"அது சரி, ஏன் டா நான் வைட் ல வந்ததுக்கு திட்டின" என்றாள் விஜி.

"விஜி, நீ ஏன் வெள்ளை சுடிதார் போட்டுட்டு வந்திருக்க, யோசிக்கவே மாட்டியா? பஸ் ல வேர்த்துக்கொட்டி அப்டியே உடம்போட ஒட்டி இருக்கு பாரு உன்னோட டிரஸ், சொல்லவே எனக்கு சங்கோஜமா இருக்கு டா, வீட்டுக்கு போன உடனே நீ டிரஸ் செஞ் பண்ணிக்கோ, அது மட்டும் இல்ல, முதல்ல குளி, லைட் ஹாட் வாட்டர் போட்டு தரேன், பயங்கரமா வேர்வை ஸ்மெல் வருது வேற" என்றான் பிரவீன்.

"ஓஹோ, தாங்க முடிலயோ" என்றாள் விஜி.

"அப்டி இல்ல டா, ஜஸ்ட் சொன்னேன், உன்கிட்ட எனக்கு என்னடா ரெஸ்ட்ரிக்ஷன், உன்னோட வியர்வை கூட எனக்கு வாசனை தான் டா" என்றான் பிரவீன்.

"போதும், ஐஸ் வெக்காத, அது சரி, ரொம்ப வல்கரா இருக்கா டா வைட் டிரஸ்? அசிங்கமா தெரியுதா? இன்னர்ஸ் எல்லாம் தெரியுதா?" என்றாள் சற்றே வெட்கத்துடன் விஜி.

"என்ன விஜி, நீயே வீட்டுக்கு வந்ததும் கண்ணாடில போய் பாரு, காயத்ரி கூட சொல்லலியா" என்றான் பிரவீன்.

"ஓ, அதுக்கு தான் அந்த லூசு பஸ் ல துப்பட்டாவை முன்னாடி இழுத்து போடு முன்னாடி இழுத்து போடுன்னு சொல்லிட்டே வந்தாளா" என்றாள் விஜி.

வீடு வந்தது.

வீட்டை திறந்து விட்டு, நீ உள்ள இரு விஜி, என்றபடி டி.வீ.யை ஆன் செய்தான். அதில் நேரத்திற்கேற்றாற்போல "எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும் உன் நிழலில் இளைப்பாற வருவேன் பெண்ணே, மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து உன் மடியில் தலை சாய்ந்து இறப்பேன் பெண்ணே......" என்ற காதல் திரைப்பட பாடல் ஓட, "சரி பிரவீன், நீ போய் காயத்ரியை கூட்டிட்டு வா" என்றாள் விஜி.

"அது சரி, நான் ஹாட் வாட்டர் போடுறேன், அது ஆனதும் நீ குளிச்சுட்டு. ஒரு டென் பிப்ட்டின் மினிட்ஸ் வெய்ட் பண்ணி குளி, வேர்வை அடங்கட்டும், இல்லன்னா சளி புடிக்கும், நான் ககாயத்ரியா பிக்கப் பண்ணிட்டு கொஞ்சம் காய்கள் வாங்கிட்டு வரேன், ஒரு அரை மணி நேரம் முக்கால் மணி நேரம் ஆகும், நீ கதவை உள்பக்கமா தாப்பாள் போட்டுட்டு இரு, நன் வந்ததும் உனக்கு கால் பண்றேன், அப்போ தொறந்தா போதும்" என்றான் பிரவீன்.

"பிரவீன் அப்டியே நீ காயத்ரியை பிக் பண்ணதும் எனக்கு போன் பண்ணு, எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்" என்றாள் விஜி.

"என்னன்னு சொல்லு, நான் வாங்கிட்டு வரேன்" என்றான் பிரவீன்.

"எனக்கு தெரியும் யாரை வாங்க சொல்லணும் னு, சொல்றத செய்" என்றாள் விஜி.

"அப்டி ஒரு சீக்ரெட் னா ஓகே, கால் பண்ண சொல்றேன்", என்றபடி கிச்சனில் சுடுதண்ணீர் போட்டான் பிரவீன்.

"விஜி, வெந்நீர் போட்டிருக்கேன், பத்து நிமிஷரத்துல ஆய்டும், நீ குளிச்சுட்டு டிரஸ் செஞ் பண்ணிட்டு அப்டியே காயத்ரிக்கு வெந்நீர் போட்டு வெச்சுரு, அவ வந்ததும் குளிக்க ரெடி ஆயிருக்கும்" என்றான் பிரவீன்.

"சரி சரி, நீ போ, நீ எப்போ வந்து சமைச்சு நான் சாப்பிட்டு, எனக்கு இப்பவே பசிக்க ஆரம்பிச்சுருச்சு" என்றாள் விஜி.

பிரவீன் வேகமாக கிளம்பினான்.

கதவை உள்பக்கமாக தாழிட்டு விட்டு உள்ளே வந்தாள் விஜி. அறை அறையாக பார்த்தாள். ஒரு பேச்சிலர் வீடு போலவே இல்லை, அவ்வளவு சுத்தமாகவும் நறுமணம் வீசிக்கொண்டும் ஒரு குடும்பஸ்தன் வீடு போல இருந்தது. ஒன்றிரண்டு இடங்களில் விஜி என்று எழுதப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. தாய் தந்தை தங்கை மூவரின் புகைப்படத்திற்கு மாலை விடப்பட்டிருந்தது. அங்கே ஒரு சிறிய நோட்டு புத்தகம் இருந்தது. அதில் "பிரவீன் தொலைந்த கதை" என்று ஒரு குறிப்பு இருந்தது, அதை எடுத்து படித்தாள் விஜி. புளகாங்கிதத்தின் உச்சத்திற்கு சென்றாள். அப்படியும் அணு அணுவாக விஜியை ரசித்து அவளது ஒவ்வொரு செயலையும் வர்ணித்து எழுத முடியுமா என்று அவளுக்கே அன்று தான் தெரிந்தது. அவன் தன்மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தால் இப்படி எல்லாம் அவனால் எழுத முடியும் என்று எண்ணினாள், மனதிற்குள் தான் இந்த உலகத்திலேயே தன்னை மிக அதிகமாக நேசிக்கும் ஒருவனை தான் காதலிக்கிறோம் என்று முழுவதுமாக நம்பினாள் விஜி. குறிப்பாக "இன்றோடு விஜி ஆஸ்திரேலியா சென்று பத்தொன்பது நாட்கள் ஆகின்றன, இன்னும் அவளை பார்க்கவில்லை, மனம் என்னவோ அவளோடு தான் இருக்கிறது, ஆனாலும் கண்களுக்கு தெரியவில்லையே. கண்களை சமாதானப்படுத்தும் சக்தி எனக்கில்லை, நேற்று போலவே இன்று இப்போது இரவிற்காக காத்திருக்கிறேன், கனவிலாவது அவள் வருவாள் என்று. ஆனாலும் நேற்றை போலவே கனவிலும் இரவிற்காகவே காத்திருப்பேனோ.......பயமாக இருக்கிறது. புகைப்படத்துடன் வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமை தான், என் தாய் தந்தை தங்கை இறந்து புகைப்படமாகி விட்டனர், என் உயிர் இருந்தும் இப்போது புகைப்படமாகவே தான் என்னோடு வாழ்கிறாள்" என்று எழுதி வைத்து அந்த பக்கத்தில் விஜியின் புகைப்படத்தை ஒட்டி வைத்திருந்தான். ஒவ்வொரு பக்கத்திலும் அவளை பற்றின வர்ணனைகள் தான். அவள் கோபம் அப்படிப்பட்டது, அவள் சிரிப்பு இப்படிப்பட்டது, அவள் நடை உடை பாவனை பேச்சு குரல் தீண்டல்......அது இது என்று பெரிய கவிஞனை போல எழுதி இருந்தான். காதல் என்று வந்தால் காக்கையும் கவிபாடும் என்பது உலக நியதி தானே.....ஆச்சர்யப்பட்டு போனாள் விஜி.

"அய்யய்யோ, வெந்நீர் ஆயிருக்கும்" என்று நினைத்தபடி கிச்சனுக்கு ஓடினாள். அங்கே வெந்நீர் தலைத்துக்கொண்டிருந்தது. அதை பாத்ரூமில் பக்கெட்டில் ஊற்றிவிட்டு தண்ணீர் பிடித்து காயத்ரிக்கு வெந்நீரை போட்டாள். அவ்வளவு நேர்த்தியாக பாத்ரூமை வைத்திருந்தான் பிரவீன். விஜி வருகிறாள் என்பதற்காகவே அவளுக்கென தனி புது சோப்பும் துண்டும் வைத்திருந்தான் தயாராக. அப்போது தான் அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் பார்த்தாள் விஜி. "ஆம் பிரவீன் சொன்னது சரி தான், வெள்ளை ஆடை வியர்வையில் உடம்போடு ஒட்டி பார்ப்பதற்கே விஜிக்கு சற்று தடுமாற்றமாக இருந்தது. ஆனாலும் அதை பிரவீன் அவளுக்கு எடுத்துரைத்த விதத்தை நினைத்தபடியே கண்ணாடியை பார்த்து தனக்கு தானே சிரித்துக்கொண்டாள் விஜி. அப்போது அவளது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த செயின் ஆடை உடலோடு ஒட்டியதால் டாலர் வெளியே அப்பட்டமாக தெரிய, அந்த செயினை கையால் வெளியே எடுத்து தனது அழகிய உதட்டில் வைத்து வெட்கத்தில் கடித்தாள். அந்த டாலரில் "விஜி-பிரவீன்" என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஆம் அது பிரவீன் அவளுக்கு கொடுத்த சங்கிலி தான்.

அவர்கள் இருவரும் வருவதற்குள் குளித்துவிட்டு வேண்டும், ஆனால் இந்த காயத்ரி இன்னும் போன் பண்ணவில்லை என்று நினைக்கும்போதே காயத்ரி போல் செய்தாள். "சொல்லு டி, என்ன ஏதோ வாங்கணும் னு சொன்னியாமே, என்ன?" என்றாள் காயத்ரி.

விஜி மறுமுனையில் ஏதோ வாங்க வேண்டும் என்று கூற, "நீ பிரவீன் கிட்ட சொல்லாம என்னை கால் பண்ண சொல்லும்போதே தெரியும், இதுவா தான் இருக்கணும் னு" என்று சிரித்தாள் காயத்ரி.

"ஓகே டி, நான் குளிச்சுட்டு ரெடியா இருக்கேன், சீக்கிரம் வாங்க" என்றாள் விஜி.

"சரி" என்று போனை கட் செய்துவிட்டு "பிரவீன், போகும்போது மறக்காம ஏதாவது மெடிக்கல்ஸ் ல நிறுத்துங்க" என்றாள் காயத்ரி.

"ஏன், ஏதாவது மருந்து வாங்கணுமா" என்றான் பிரவீன்.

"ஆ.....ஆமாம், மருந்து தான் வாங்கணும், கிளம்புங்க" என்றாள் காயத்ரி சிரித்துக்கொண்டே.

காய்கறிகள் பழங்கள் ஸ்வீட்ஸ் என நிறைய வாங்கிக்கொண்டு வண்டி கடலூர் லேனா மெடிக்கல் முன்பு நிற்க, காயத்ரி சென்று மீண்டும் வந்தாள் கையில் கருப்பு நிற பாலிதீன் பையோடு, அப்போது தான் மூளை இல்லாத இந்த முட்டாள் ப்ரவீனுக்கு புரிந்தது. நாக்கை கடித்துக்கொண்டு சிரித்தபடியே வண்டியை வீட்டை நோக்கி செலுத்தினான்.

விஜி குளித்துவிட்டு ஆடைகளை மாற்ற வரும்போது அங்கே ஒரு அறை இருக்கவே அதில் என்னவென்று பார்த்தாள். "ஓ, சாமி ரூமா, இன்னிக்கு வரமுடியாது, சாரி, கோச்சுக்காதிங்க சாமி" என்று பேசிக்கொண்டே ஆடைகளை மாற்ற தொடங்கினாள். அவள் மாற்றி முடிப்பதற்கும் பிரவீன் கால் செய்வதற்கும் சரியாக இருந்தது.

பகுதி 53 முடிந்தது.

-------------------------தொடரும்-------------------------

எழுதியவர் : ஜெயராமன் (22-Sep-17, 12:48 pm)
பார்வை : 243

மேலே