என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 61

விஜய் பார்க்கில் வெளியே அழகான நீல நிற வட இந்திய பாணியில் உருவான ஆடையில் அவ்வளவு அழகாய் நின்றிருந்தாள் ரம்யா. ப்ரவீனயும் விஜியாயும் பார்த்ததும் அவள் ஓடிவந்து விஜியை கட்டி அணைத்துக்கொண்டு "வாக்கா, எப்படி இருக்க, என்ன கண்ணு எல்லாம் செவந்து இருக்கு, தூக்கம் இல்லையா? என்றாள் ரம்யா.

"நல்லா தூங்கிட்டு தான் வந்தேன், நீ எப்படி இருக்க ரம்யா?" என்றாள் விஜி.

"ம்ம்ம், சூப்பர், வாங்க பிரவீன், நீங்க என்ன விஜிக்கு ஆஸ்தான ட்ரைவரா என்ன?" என்றாள் ரம்யா.

"ஏன் ரம்யா, விஜிக்கு ட்ரைவரா தான் நான் வரணும் னு இருக்கா என்ன, உன்னை பாக்க வரக்கூடாதா" என்றான் பிரவீன்.

"அந்த நாடகத்துக்காக வந்துட்டு போனதோடு சரி, அதுக்கப்புறம் இங்க வந்து யாருமே பாக்கல, இப்போ இந்த பில்டப் வேற" என்றாள் ரம்யா.

"செம்ம காண்டா இருக்க போல" என்றான் பிரவீன்.

"ம்ம்ம்???இல்ல ரொம்ப ஹேப்பியா இருக்கேன், விஜி அக்கா காயத்ரி அக்கா ரெண்டு பேரும் செமயா லைப்பை என்ஜாய் பண்ராங்க, நான் இங்க ஹாஸ்டல் ல தனியா.....போகட்டும், இப்போ தான் முடிஞ்சுருச்சே, அது சரி, நானும் உங்க க்ரூப்ல ஒரு மெம்பெர் தான" என்றாள் ரம்யா.

"கண்டிப்பா, அதுல டவுட்டே இல்ல" என்றான் பிரவீன்.

"ரம்மி, போ, போதும், ரொம்ப அறுக்காத" என்றாள் விஜி.

"நீங்க வெட்டி கதை பேசினா அது டிஸ்கஷன், நான் பேசினா அறுவையா?" என்றாள் ரம்யா.

"அப்டி இல்ல டி, எனக்கு கம்போர்ட் ரூம் கு போகணும், ரொம்ப அர்ஜென்ட்"என்றாள் விஜி.

"ஓஹோஹோஹோ, சாரி, வாங்க நாம போலாம், ரெண்டாவது மாடில நம்ம ஹால் இருக்கு" என்றபடி லிப்டை நோக்கி நடந்தனர் மூவரும்.

மாடிக்கு சென்றவுடன் ராமாயாவின் தோழிகள் பூமா,சத்யா மற்றும் அந்த டிராமாவில் நடித்த அனைவரும் பிரவீனை பார்த்ததும் "ஹலோ பிரவீன், எப்படி இருக்கீங்க, இந்த டிரஸ் ல செம்ம ஸ்மார்ட்டா இருக்கீங்க, அப்புறம், எங்க எல்லாரையும் மறந்துடீங்க இல்ல, நாங்க எங்க நம்பரை தான் உங்களுக்கு குடுத்தோமே, ஏன் ஒரு போன் ஒரு மெசேஜ் கூட பண்ணல?" என்றாள் பூமா.

"இல்ல...தேவை இல்லாம ஒரு பொண்ணுக்கு மெசேஜ் அனுப்பறது தப்பு இல்லிங்களா பூமா?" என்றான் பிரவீன்.

"ஓஹோ, ரம்யாக்கு மட்டும் போன் பண்ணுவீங்க இல்ல?" என்றாள் சத்யா.

"அப்டி இல்ல, ரம்யா, எங்க விஜியோட சிஸ்டர், அதுனால...அது மட்டும் இல்ல, ரமேயாகு கூட அடிக்கடி கால் பண்ணமாட்டேன், ரேரா தான்" என்றான் பிரவீன்.

"என்ன இருந்தாலும் நீங்க இப்டி எங்களை மறக்க கூடாது பிரவீன்" என்றாள் பூமா.

விஜிக்கு பிரவீன் மற்ற பெண்களிடம் பேசுவது வயிற்றெரிச்சலாய் இருந்தது. கோபமாக கைகளை கட்டியபடி பிரவீனை கோபமாக பார்த்து நின்றிக்கொண்டிருந்தாள்.

பத்து நிமிடங்களுக்கு பிறகு பிரவீன் அந்த கூட்டத்தில் இருந்து விலகி விஜியிடம் வந்தான். விஜி கோபமாக எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

"வா விஜி அந்த பக்கம் சேர்ல உக்காரலாம்" என்று விஜியின் கையை பிடித்தான் பிரவீன்.

உதறிவிட்டாள் விஜி.

பிரவீன் அதிர்ச்சியாக "என்ன விஜி, என்ன ஆச்சு, ஏன் கோவமா இருக்க?" என்றான் பிரவீன்.

"ஏன்? உனக்கு நான் ஏன் கோவமா இருக்கேன் னு தெரியாதா?" என்றாள் விஜி.

"தெரில டா, என்ன ஆச்சு?" என்றான் பிரவீன்.

"என்னை தனியா இங்க விட்டுட்டு மத்த பொண்ணுங்ககூட ஹா ஹா ஹா ஹா னு சிரிச்சு பேசிட்டு இருக்க? நான் இங்க பைத்தியக்கார மாதிரி நின்னுட்டு இருக்கேன்....போ போய் அந்த பொண்ணுங்க கூட உக்காந்துக்கோ...." என்றாள் விஜி.

"ஐயோ விஜி, அவங்க எல்லாம் சின்ன பொண்ணுங்க டா, அவங்க எல்லாம் உன் முன்னாடி எம்மாத்திரம்? நீ தான டா எனக்கு முக்கியம்.இப்டி எல்லார்முன்னாடியும் கோவப்படாத டா" என்றான் பிரவீன்.

"ச்சீ போ, நடிக்காத, நான் முக்கியம் னா, என்னை விட்டுட்டு அங்க அந்த மெட்ராஸ் பொண்ணுங்க கும்பல் ல நின்னு சிரிச்சு சிரிச்சு பேசுவியா டா, நாயே" என்று அவன் இடுப்பில் நறுக்கென கிள்ளினாள் விஜி.

"ஏய் என்ன விஜி, வலிக்குது" என்றான் பிரவீன்.

"நல்லா வலிக்கட்டும், ஏண்டா என்னை மேல மேல பொஸசிவ் ஆக்கிட்டு போற, நீ அந்த பொண்ணுங்க கிட்ட பேசறதை என்னால எடுக்கவே முடில டா, இதுல அவளுங்களுக்கு நீ போன் மெசேஜ் எல்லாம் பண்ணணுமாம், உலகத்துல வேற பசங்கள் இல்லையா அவளுங்களுக்கு, அவங்க நம்பர் எல்லாம் உன்கிட்ட இருக்குன்னு நீ ஏன் என்கிட்டே சொல்லல டா?"என்றாள் விஜி.

"விஜி இதெல்லாம் ஒரு விஷயமா, அதான் நான் அவங்களுக்கு எல்லாம் ஒரு வாடி கூட காலோ மெஸேஜோ பண்ணலையே டா" என்றான் பிரவீன்.

"பிரவீன், நீ வேற பொண்ணு கூட பேசறதை என்னால ஏத்துக்க முடியாது டா, ப்ளீஸ் எனக்காக அவங்க நம்பரை எல்லாம் டெலிட் பண்ணு" என்றாள் விஜி.

"விஜி, எனக்கு நீ தான் முக்கியம், உன்னை கஷ்டப்படுத்தற எந்த விஷயத்தையும் நான் பண்ணமாட்டேன், இந்தா என் போன், எந்த நம்பர் எல்லாம் உனக்கு பிடிக்கலையா டெலிட் பண்ணு டா," என்றான் பிரவீன்.

மொபைலை விஜி கையில் கொடுத்துவிட்டு தனியாக சேரில் போய் அமர்ந்தான்.

சற்று நேரத்தில் அவன் அருகே வந்து அமர்ந்தாள் விஜி. "என்ன டா கோவமா" என்றாள்.

"உன்மேல என்னிக்குமே கோவப்படமாட்டேன் விஜி, என் தப்பு தான், உனக்கு பிடிக்காது னு எனக்கு தெரியாம தான் நான் பேசிட்டேன் அவங்ககிட்ட, சாரி டா" என்றான் பிரவீன்.

"பரவால்ல டா, ஆனா உன்னை கெஞ்சி கேக்கறேன், அட்லீஸ்ட் எனக்கு முன்னாடி நீ எந்த பொண்ணுங்க கிட்டயும் பேசாத, எனக்கு பிடிக்கல டா, உனக்கு ஏன் என் மனசு புரிய மாட்டேங்குது, என்னால ஏத்துக்க முடில டா" என்றபடி பிரவீனின் தோளில் சாய்ந்தாள் விஜி.

ரம்யாவும் மற்ற தோழிகளும் மேடையில் என்னென்னவோ காலை நிகழ்ச்சிகள் செய்தனர். ஆனால் அதை எல்லாம் விஜியும் ப்ரவீனும் கவனிப்பதாக தெரியவில்லை. விஜியை சமாதானப்படுத்துவதில் தான் பிரவீன் குறியாக இருந்தான்.

திடீரென ஸ்டேஜில் இருந்த ரம்யா "இப்போது உங்கள் அனைவருக்கும் பரிச்சயமான பிரவீன் அண்ட் என்னோட சிஸ்டர் விஜி ரெண்டு பேரும் ஒரு சாங் பாடுவாங்க, பிரவீன் அண்ட் விஜி அக்கா, ப்ளீஸ் கம் ஆன் தி ஸ்டேஜ்" என்றாள்.

"ஏய் ரம்மி...என்ன டி..." என்று சைகையாலேயே காட்டினாள் விஜி.

வேறு வழி இல்லாமல் தோழிகளின் கைத்தட்டல்களுக்கு நடுவே இருவரும் மேடைக்கு சென்று ஒரு பத்து வினாடிகள் என்ன பாடல் பாடுவதென்று பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

முதலில் பிரவீன் ஒரு தனிப்பாடலை பாடவேண்டும் என்று அனைவரும் வற்புறுத்த, மன்மதன் திரைப்பட பாடல் "காதல் வளர்த்தேன்" பாடலை பாடி அசத்தினான்.

பின்பு விஜி தனியாக பாடவேண்டும் என கேட்டுக்கொண்டதால் பேரில் அதே படத்தின் "மன்மதனே நீ கலைஞன் தான்" பாடலை பாடி ஏட்டிக்கு போட்டியாக அசத்தினாள்.

பின்பு இருவரும் சேர்ந்து பாட வேண்டும்......விஜி ஆரம்பித்தாள்,"நெஞ்சோடு கலந்திரு உறவாலே, காயங்கள் மறந்திரு அன்பே.....நிலவோடு தென்றலும் வரும் வேளை..காலங்கள் மறந்திரு அன்பே....." என்று பாட......ரம்யா உள்ளிட்ட தோழிகள் கைத்தட்டலின் உச்சத்திற்கே சென்றனர். இரண்டாம் பத்தியை பிரவீன் தொடங்குகையில் கைதட்டல் அரங்கம் அதிர்ந்தது..."காலங்கள் ஓடும் இது கதையாகி போகும் என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்....தாயாக நீ தான் தலை கோத வந்தால் உன் மடிமீது மீண்டும் ஜனனம் மீளும், என் வாழ்க்கை நீ இங்கு தந்தது அடி உன்னால் தான் நான் இங்கு வாழ்வது......காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை........ஒரு பார்வை பார்த்து நீ நின்றாய்...சிறு பூவாக நான் மலர்வேனே.....ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே.............."என்ன ஒரு உயிரோட்டம் அவர்கள் பாடும்போது.

அப்படியே விஜியை கட்டி தழுவி முத்தமிடவேண்டும் என்று பிரவீனின் மனம் வருடியது.

பாடி முடித்ததும் ப்ரவீனுக்கு இன்னொரு பாடல் பாட அனைவரும் கேட்டுக்கொண்டனர், பிரவீன் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் விஜிக்கு மிகவும் பிடித்த பாடலான "கற்பூர பொம்மை ஒன்று" என்ற பாடலை பெண் குரலில் பாட அனைவரும் வாயடைத்து நின்றனர்.

மகிழ்ச்சியாக நிறைவேறியது அந்த நிகழ்ச்சி. சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்கு கிளம்பி வளவனூர் நோக்கி பயணித்தனர் மூவரும்.

காரில் ரம்யா விஜி மற்றும் பிரவீனின் பெர்பார்மன்ஸை புகழ்ந்து தள்ளியபடியே வந்தாள். ஆனால் விஜிக்கு மனதில் ஒரு சின்ன உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.

இனி ரம்யா வீட்டில் இருப்பாள், வேலைக்கும் தன்னோடு வருவாள், காயத்ரி முன் பிரவீனிடம் காட்டும் நெருக்கம் ரம்யாவின் முன் காட்ட முடியுமா, எப்போது பிரவீனை சந்திக்க போனாலும் ரம்யாவுக்கு தெரியும், அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டால், வீட்டில் சொல்லிவிட்டால்.....குழப்பத்தில் வந்தாள் விஜி.

"என்ன அக்கா, சைலெண்டா வர, என்ன ஆச்சு' என்றாள் ரம்யா.

விஷயம் புரியாமல் பிரவீன் "அவளுக்கு என்மேல கோவம்" என்றான்.

"பிரவீன் கொஞ்சம் சும்மா இரு, அதெல்லாம் இல்ல" என்றாள் விஜி.

ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தான் பிரவீன். என்ன என்பதை விஜியிடம் கேட்க வேண்டும், அவளது பதற்றத்தை குறைக்க வேண்டும். சற்றே யோசித்த பிரவீன், காரை ஒரு பெட்ரோல் பங்கில் விட்டான்.

"ரம்யா வாஷ்ரூம் போகணும்னா போயிட்டு வந்துரு" என்றான் பிரவீன்.

"ம்ம்ம் சரி, அக்கா உனக்கு?" என்றாள் ரம்யா.

"இல்ல டி,நீ போயிட்டு வா" என்றாள் விஜி.

ரம்யா போனதும், "என்ன விஜி, என்ன ஆச்சு?" என்றான் பிரவீன்.

"இல்ல டா, இனிமே அடிக்கடி உன்னை மீட் பண்ண முடியுமா, போன் பேச முடியுமான்னு தெரில, ஏன்னா ரம்யா கூடவே இருப்பா, அவளுக்கு முன்னாடி......ஒண்ணும் புரிய டா, ஆனா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேனோன்னு தோணுது" என்றாள் விஜி.

"விஜி, மனச போட்டு கொழப்பிக்காத, கொஞ்சம் ப்ரீயா விடு" என்றான் பிரவீன்.

ரம்யா வந்தாள்.

கார் வளவனூரை நோக்கி பறந்தது.

வளவனூரில் அவர்களை இறக்கி விட்டதும் காயத்ரி அங்கே வந்தாள்.

"ஹாய் ரம்யா எப்படி இருக்க" என்றாள் காயத்ரி.

"சூப்பர் அக்கா, நீங்க?" என்றாள் ரம்யா.

"ம்ம் சூப்பர் டி, பிரவீன், வாங்க கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்" என்றாள் காயத்ரி.

"ஆமாம் பிரவீன், வா, ஏதாவது லைட் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போலாம்" என்றாள் விஜி.

சற்று நேரம் இளைப்பாறிவிட்டு பிரவீன் கிளம்பினான்.

மூன்று நாட்கள் ப்ரவீனோடு முழுமையாக வாழ்ந்த சந்தோசம் விஜிக்கு. இது ஒரு மறக்க முடியாத விடுமுறை ஆனது அவளுக்கு.

"பிரவீன், மேட்ச் நாமினேஷன் கு ஆல் தி பெஸ்ட்" என்றாள் விஜி.

காயத்ரியும் ரம்யாவும் சேர்ந்து வாழ்த்துக்கள் கூற, ஏற்றுக்கொண்டு பிரவீன் விஜியின் நினைவுகளை மனதில் சுமந்து கடலூர் நோக்கி பயணப்பட்டான்.

பிரவீன் சென்றதும் ரம்யா "நான் கொஞ்சம் ப்ரெஷப் ஆயிட்டு வரேன்" என்று சொல்லி உள்ளே செல்ல, காயத்ரி விஜியிடம், "விஜி அந்த புது கிளையண்ட் ஏதோ ட்ரெயினிங் நான் அட்டென்ட் பண்ணனும், நான் தான் ப்ராஜெக்ட் ஹெட் னு சொல்லி முப்பது நாள் பெங்களுர் ல போட்ருக்காங்க டி, நான் அங்க ரிலேட்டிவ் வீட்ல தங்கி ட்ரெயினிங் அட்டென்ட் பண்ணப்போறேன். நீ பத்து நாள் பாத்துக்கோ, ரம்யாக்கு ஜாப் என்னன்னு நம்ம எச்.ஆர். கிட்ட கேட்டு அப்டேட் பண்ணு, மேட்ச் பாக்க போனா அப்டேட் பண்ணு, நான் ட்ரெயினிங் போறேன் னு ஆல்ரெடி முபாரக் அண்ணா கிட்ட சொல்லிட்டேன், ஐ திங்க் நான் வர்றதுக்குள்ள டோர்னமெண்ட் முடிஞ்சிடும், பாக்கலாம் டி, பாத்துக்கோ, பட் டெய்லி கால் பண்ணு எனக்கு" என்றாள்.

"என்ன டி சொல்ற, ஏற்கனவே பிரவீனை அடிக்கடி இனிமே பாக்க முடியாதுன்னு ரொம்ப கஷ்டத்துல இருக்கேன்,, இப்போ நீயும் ஒரு மாசம் இல்லையா" என்றாள் விஜி.

"ஏன்?ஏன் பிரவீனை அடிக்கடி பாக்க முடியாது?" என்றாள் காயத்ரி.

"ரம்யா இருப்பா டி, எனக்கு அனீஸியா இருக்கும், உனக்கு முன்னாடி இருக்கற ஒரு ப்ரீடம் என் தங்கைக்கு முன்னாடி இருக்குமான்னு தெரில டி" என்றாள் விஜி.

"விஜி சும்மா நீ என்ன இவ்ளோ சென்டிமெண்டா ஆயிட்டே, ப்ரவீணோட கேரக்டர் அப்டியே உனக்கும் வருது டி, பாத்து நடந்துக்கோ, நான் கிளம்பறேன்" என்றாள் காயத்ரி.

என்ன செய்வதென்று குழம்பியவாறே சோபாவில் சாய்ந்தாள் விஜி.

"விஜி அக்கா, என் சார்ஜர் எங்கயோ மிஸ் பண்ணிட்டேன், வெறும் எக்ஸ்டென்சன் தான் இருக்கு, இந்த மல்டி கனெக்டிவ் பின்ன உன்னோட சார்ஜர் ல போட்டு என் போனுக்கு கொஞ்சம் சார்ஜ் போட்டுக்கறேன்" என்றாள் ரம்யா.

"ம்ம்ம் சரி டி" என்றாள் விஜி.

சோபாவில் சாய்ந்த விஜி பலத்த யோசனையில் சோபாவிலேயே தூங்கிவிட்டாள்.

மறுநாள் வேலை ஓடவில்லை விஜிக்கு. அவள் மனம் முழுதும் பிரவீனின் நினைவுகளால் சூழப்பட்டிருந்தது.

பகுதி 61 முடிந்தது.

--------------------------தொடரும்-----------------------------

எழுதியவர் : ஜெயராமன் (23-Sep-17, 3:18 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 269

மேலே