எங்க ஊரு மணிமுத்து ஆறு !
எங்கள் வாழ்வியலோடு
பின்னி பிணைந்து கிடக்கிறது
எங்கள் ஆறு
தமிழர் திருநாளின்
கடைசிநாலாம் கரிநாள் -அதுதான்
எங்கள் ஆற்றுத்திருநாள் !
ஆண்கள் ஆடும்
சடுகுடு ஆட்டத்தை
சலிக்காமல் பார்த்திருக்கும்
பெண்களும்
பெண்கள் ஆடும்
கும்மியடி விளையாட்டை
குறு குருன்னு பார்த்திருக்கும்
ஆண்களுக்கு மத்தியில்
தேர் திருவிழா
எங்கேஎன்று கேட்கும்
வெளியூர் காரனுக்கு
அது மாசிமாசம் வரும்
இது தேவதைகள் திருவிழவென்று
சொல்லிவைப்போம்..................!
வெள்ளம்
கரைபுரண்டுஓடும் காலங்களில்
காலைகடன் கழிப்பதற்கு
கரைவிடாதா ஆருன்னு
கலங்காத கண்களில்லை
திட்டு திட்டாய்
கரைகள் விட்டால்
கழுத்தளவு தண்ணிதாண்டி
கால்பதிக்க இடமின்றி
நண்பர்களோடு கதைபேசி
கண்டமேனி கழிந்துவைத்தோம்
தீராத தொல்லைஎல்லாம்
தீர்த்துவிட்ட நிம்மதியில்
திரும்பிவரும் வேளையிலே
நண்பன் மணிகண்டன்
மடுவில் மாட்டி
செத்துப்போன காட்சிஎல்லாம்
எப்போதும் கண்ணில் நிக்கும்
பஞ்சம் தெளிவில் கொள்ளும்
ஆறு வடிவில் கொள்ளும்
பழமொழியை உண்மையாக்கி
பாவிபய போதஞ்சிபோனான் ..........!