பிம்பம்
நான்
அழுதால் அழுவான்
சிரித்தால் சிரிப்பான்
முறைத்தால் முறைப்பான்
நான் மரித்துபோனால்
அவன் மறைந்துபோவான்
எங்களுக்குள்
இட,வல ,வித்தியாசம் மட்டுமே .....!
நான் இருக்கும்
எல்லாஇடத்திலும்
அவன் இருப்பான்
அவன் இருந்தால் -அங்கே
கண்டிப்பாய் நான் இருப்பேன் ...!
என்னை அவனும்
அவனை நானும்
ரசிக்காத நாட்களே இல்லை
என்முதல் ரசிகன்
அவன்தான்
அவனுக்கான
முதல் ரசிகனும்
நான்தான் ......
உலகத்தில்
எங்குவேண்டுமானாலும்
அவனை அழைத்து போய்விடுவேன்
தனி மனித செலவில்!
ஓர் முகம்பார்க்கும்
கண்ணாடிஇருந்தால் ...........!
தோழன்
து.ப.சரவணன்