மரணித்த மனிதம்

கற்பை களவாடி
புசிக்கின்றீர்..!
காதலரை கைது செய்து
ரசிக்கின்றீர்..!

கனவைத் திருடி
அதில் வசிக்கின்றீர்..!
உரிமைகளை உணவாக்கி
ருசிக்கின்றீர் ..!

ஏழைகளின் இரு(உறு)ப்பிற்கும்
வலை வீசி விலை பேசுகிறீர் ..!
சாதியம் பேசி சமத்துவத்தை
சவக்குழியிலல்லவா நசிக்கின்றீர்..!

மனிதமே மரணித்துவிட்டது
புனிதத்தை இனி எதில் தேடுவீர் ..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (23-Sep-17, 6:35 pm)
Tanglish : maranitha manitham
பார்வை : 109

மேலே