இந்த அறிவிப்பு யாருக்காங்க
நான் நேற்று கோவிலுக்குப் போய் இருந்தேன். அங்கெ ஒரு பெரிய பலகை தொங்கிக் கொண்டு
இருந்தது. அதில் """கோவிலை சுத்தமாக வைத்து இருக்க உதவவும்""" என்று எழுதி இருந்ததுநான்
சந்தோஷம் அடைந்தேன். பரவாயில்லையே நல்ல அறிவிப்பு பலகை இது என்று நினைத்தேன்.
என் சந்தோஷம் அதிக நேரம் நீடிக்க வில்லை. பலகைக்கு பக்கத்திலே இருந்த அலுவலகத்தில்
இருந்து தன வாயில் நிறைந்து இருந்த சிவந்த வெற்றிலைப் பாக்கு ஜலத்தை அந்த அறிவிப்பு
பலகைக்கு பக்கத்திலேயே துப்பி விட்டு போனார்.அந்த கோவில் அலுவலக அதிகாரியே கடை
பிடிக்காத அறிவிப்பை மத்தவங்க தான் கடை பிடிக்க வேண்டுமாங்க ?
பத்தடி கூட நான் போய் இருக்க மாட்டேன் அங்கெ கோவில் பிரசாதங்கள் விற்கும் கடை இருந்தது.
அந்த கடையில் பிரசாதங்கள் வாங்கி சாப்பிட்டவர்கள் பிளாஸ்டிக் பைகளையும்,புளியோதரையை
சாப்பிட்டு விட்டு வாழை இலையை அங்கும் இங்கும் போட்டு விட்டு போது கொண்டு இருந்தார்கள்
அந்த கோவில் எப்படி சுத்தமா இருக்குங்க ??
சரி என்று என் மனதை கல்லாக்கிக் கொண்டு கோவில் உள்ளே போனேன்.அங்கெ இருந்த குருக்கள்
கடவுளுக்கு போட்ட பழைய மாலைகள், தேங்காயை உரித்த நாறுகளையும், தேங்காய் ஜலத்தையும்,
வெளியே கொண்டு வந்து கொட்டி விட்டு போகும் காட்சியை பார்த்தேன் அந்த அசுத்தங்கள் மூக்கை
துளைக்கும் நாற்றத்தை தாங்கி கூட்டு இருந்தது.சுவாமி தரிசனம் பார்த்து விட்டு வெளியே வரும்
பக்தர்கள் முருக்கைப் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மெல்ல அவர்கள் காலை வைத்து
அந்த அசுத்தத்தை தாண்டி போய் கொண்டு இருந்தார்கள்.
பக்தர்கள் குருக்கள் கொடுத்த தேங்காயை உடைத்து சாப்பிட்டு விட்டு வாழை பழத் தோலையும்
அங்கேயே போட்டு விட்டு போய்க் கொண்டு இருப்பதையும் பார்த்து நமன் வருந்தினேன்.
அடுத்த அறிவிப்பு பலகையில் "" கோவில் உள்ளே செல் போனை உபயோகப் படுத்தாதீர்கள் "" என்று
எழுதி இருந்தது.ஆனால் தரிசனத்திற்கு காத்து இருக்கும் பகதர்கள் பலர் செல் போனில் " நான் இப்போ
கோவிலே இருக்கேன்அப்புறமா பேசறேன்" என்று உரக்க அவே சிம்மக் குரலில் கத்துவதை பார்க்க
நேர்ந்தது.அது தான் போகட்டுக்எ என்றால் உள்ளே அபிஷேகம் செய்து கொண்டு இருந்த ஒரு குருக்கள்
அபிஷேகத்தை மற்றவரிடம் விட்டு விட்டு ""சிக்னல்"" கிடைக்காததால் வெளியே வந்து அவர்
நண்பரிடம் பத்து நிமிஷம் பேசி விட்டு போனார்..ஒரு பக்தர் கோவத்தில் அடுத்த பக்கத்தில் இருந்த
போன் செய்த்த நபரிடம் இது கோவில் என்று கூட பார்க்காமல் கேட்ட வார்த்தைகளில் திட்டிக்
கொண்டு இருந்தார். எதிர் பக்கத்தில் இருந்த பெண்கள் தங்கள் காதுகளை பொத்தி கொண்டார்கள்
கோவில்அறிவிப்பை அந்த கோவிலில் பூஜை செய்து வரும் குருக்களும் பக்தர்களும் கடைப் பிடிக்காது
இருக்கும் பொது என்றைக்கோ கோவிலுக்குப் போகும் என்னை போல இருப்பவர்கள் கடை
பிடிக்கவாங்க ??
அடுத்த அறிவிப்பு " நெய்தீ பங்களை கண்ட இடங்களில் ஏற்றாதீர்கள்.தீபம் ஏற்றும் இடத்தில்
மட்டும் ஏற்றுங்கள். சுவற்றில் கரை செய்யாதீர்கள்"
ஆனால் இந்த அறிவிப்பை யாருங்க கடை பிடிக்கிறாங்க. நெய் தீபங்களை அவர்களுக்கு பிடித்த
தெய்வங்களுக்கு முன்னாள் ஏற்றி வைக்கிறார்கள் கையில் இருக்கும் கரையை சுவற்றில் தடவி
விட்டு இன்றும் தெரியாதவர்கள் போல தானே போகிறார்கள்.
"சுவாமியை வீடியோ எடுக்கக் கூடாது " என்கிற அறிவிப்பு இருந்தும் எத்தனை பேர் திருட்டுத் தனமாக சுவாமியை வீடியோவில் பதிசு செய்கிறார்கள்
சுவாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தேன் கொஞ்ச நேரம் காலாற உட்கார்ந்து
கொண்டேன். இதற்கு முன் பல வருடங்கள் முன்பு நடந்த ஒரு சம்பவம் என் ஞாபகத்துக்கு வந்தது.
ஒரு கதா காலஷேபம் செய்து கொண்டு இருந்தவர் உரக்க " உஙகளிடம் இருக்கும் பணத்தை
ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள். அந்த ஏழை சிரித்தால் ஆண்டவன் சிரிப்பார்" என்று சொல்லிக்
கொண்டு இருந்தார். பாகவதரின் சிஷ்யர்கள் பெரிய தட்டு ஓன்றை எடுத்துக் கொண்டு காலஷேபம்
கேட்க வந்த பக்தர்களிடம் பணம் திரட்டிக் கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கடைசி பக்தர்கள்
உட்கார்ந்து கொண்டு இருந்த இடம் வரும் பொது அவர் குரூ சொல்வது அவர்கள் காதில்
விழுந்தது.உடனே எல்லா சிஷ்யர்களும் அவர்கள் எடுத்து வந்த தட்டில் இருந்த பணம் மொத்தத்தையும்
கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டு இருந்த பிசைக்காரர்களுக்கு போட்டு விட்டு வெறும் தட்டோடு
""நம்ப குரூ சொன்னதை செய்து விட்டோம்"" என்கிற சந்தோஷத்தில் குரூ இடம் வந்தார்கள்.
காலஷேபம் முடிந்து எல்லோரும் எழுத்து போனார்கள்
எல்லோரும் போன பிறகு குரூ தன சித்தியர்களைப் பார்த்து " இன்னைக்கு பக்தர்கள் நிறைய
வந்து இருந்தார்களே தட்டிலே எவ்வளவு பணம் சேர்ந்தது" என்று சந்தோஷத்தில் கேட்டார்.உடனே
எல்லா சிஷ்யர்களும் ஒரே சமயத்தில் " நிறைய பணம் சேர்ந்ததது. ஆனா நீங்க சொன்னது எங்க காதிலே
விழுந்தது.உடனே நாங்க எல்லா பணத்தையும் வாசலில் இருந்த பிசைக்காரர்களுக்கு போட்டு
விட்டோம் . இப்போ பணம் ஒன்னும் இல்லே" சொன்னார்கள்
கோவம் வந்த குரூ " அட மடையர்களா நான் சொன்னது காலஷேபம் கேக்க வந்தவர்களுக்கு.
உனக்கும் எனக்கும் இல்லே " என்று கத்தினார்.
இதே போல பல இடங்களில் சுவற்றில் "இங்கே சிறுநீர் கழிக்காதே" என்று எழுதி இருந்தும் அதை
யாரும் கண்டு கொள்ளாமல் பக்கத்திலேயே சிறு நீர் கழித்து விட்டு அசுத்தம் செய்வதை நாம் தினமும்
பார்த்து வருகிறோம்
""நடை பாதை நடப்பவர்களுக்கு மட்டும் தான்"" என்கிற பலகை இருந்தும் பல இரண்டு சக்கர
வாகன ஓட்டிகள் நடை பாதை மேலே தினமும் ஒட்டி செல்வதை நாம் தினமும் பார்த்து வருத்தப்
படுகிறோம் இல்லையாங்க
அதே போல ."THIS IS ONE WAY" என்கிற அறிவிப்பு இருந்தும் அந்த தவறான வழியிலே எத்தனை
வாகனங்கள் போய் கொண்டு இருக்கிறது.
அடுத்த அறிவிப்பு "" லஞ்சம் கொடுக்காதே லஞ்சம் வாங்காதே" என்று போட்டு இருந்தும் லஞ்சம்
கொடுக்காமல் எந்த அரசாங்க அலுவலகத்தில் நமக்கு வேண்டிய வேலையை அவர்கள்
செய்கிறார்கள்.இல்லையே லஞ்சம் கொடுத்தால் தானே நம்ம வேலை முடிகிறது?
WAL MART என்கிற அமெரிக்க நிறுவனம் டில்லியில் ஒரு பெரிய சூப்பர் மார்க்கத்தை திறந்தார்கள்.
ஆனால் அந்த நிறுவனம் ஆறு மாசத்துக்குள் அவர்கள் கடையை மூடி விட்டார்கள். அந்த
நிறுவனத்தின் அதுவரை இரு நிருபர் சந்தித்து " நீங்க எங்க உங்க சூப்பர் மார்க்கெட்டை ஆறு
மாசத்திற்குள்ளார மூவடி வீட்டிங்க" என்று கேட்டதற்கு அவர் சிரித்துக் கொண்டே " உங்க நாட்டிலே
நான் டில்லி வீணாமா நிலையத்துக்கு வந்ததில் இருந்து இப்போ என் நிறுவனத்தை மூடி விட்டு
போகும் வரை ஒருவர் தவறாமல் எனக்கு ""பக்ஷிஷ் குடு, ""பக்ஷிஷ் குடு"" என்று கேட்டு என்னை
துளைத்தார்கள்.அவர்களை என்னால் பக்ஷிஷ் குடுத்து சமாளிக்கவே முடியலே. அதனால் தான் நான்
என் நிறுவனத்தை மூடுவது என்று நினைத்து இப்போ மூடி விட்டேன்" என்று சொல்லி விட்டு அவர்
போக வேண்டிய விமானம் . புறப்பட இருந்த லாபிக்கு போனாராம்
""இலவச கழிப்பிடம் இலவச சிறு நீர் கழிப்பிடம்"" என்கிற அறிவிப்பு பல இடங்களில்
பார்க்கிறோம். ஆனால் அங்கெ ஒருத்தரோ ஒருத்தியே உட்கார்ந்து கொண்டு பணம் கொடுத்தால் தான்
உள்ளே போக முடியும் என்று மிரட்டி பணம் பிடுங்குகிறார்கள். இது என்னங்க இலவச கழிப்பிடம் .
நாம ஊர் மெச்சி கொள்ளும் .அறிவிப்பு பலகைகளை எல்லா இடத்திலும் போட்டு விட்டு அவைகளை
மீறி வரும் மனிதர்களை தினமும் பார்க்கிறோம்
ஆங்கில படம் ஆரம்பிக்கும் முன் " SMOKING KILLS . ALCOHOL IS INJURIOUS TO HEALTH" என்கிற
விளம்பரம் போடுகிறார்கள்.ஆனால் படம் முழுவதும் கதாநாயகனோ கதாநாயகியோ குடிக்காமல்
இருப்பது இல்லை, சிகரெட் பிடிக்காமல் இருப்பது இல்லை.
தோலை காட்சி முன் உட்கார்ந்து கொண்டு அவர்கள் காட்டும் படத்தை பார்க்க உட்கார்ந்தால்
""மது உடலுக்கு நல்லது இல்லை சிகரெட் பிடிப்பது உடலுக்கு கெடுதல்"" என்கிட்ட அறிவிப்பை
போடுகிறார்கள் . ஆனால் அந்த படத்திலே கதாநாயகன் சோக மிகுதியாலோ காதாக தோல்வியாலோ
பல வித மது பாட்டில்களை வைத்து கொண்டு மது அருந்துவதும்,பாக்கெட் பாக்கெட் ஆக சிகரட்
பிடிப்பதை பார்க்கிறோம்
வேண்டாமே இந்த வீண் ஜம்பம்/
நாம் யாரை ஏமாத்துகிறோம் யாரை சந்தோஷப படுத்துகிறோம்
சொல்லுங்க?????