அடிமனசில் இனிக்கிறீயே
காதல்விதை தூவி விட்டேன்
கண்ணுமணி முளைக்கலையே!
சாதலையே தேடிப் போனால்
சமுத்திரமும் ஓதுங்குதடி!
வில்வடிவ புருவ வழியே
வேலாக பாய்ச்சு பூட்டே
சொல்லமுது சிந்தி விட்டு
கல்லைத் தான் போடலாமா?
துடியிடை மின்னல் தாக்கி
தூக்கத்தையே தொலைத்தேனே
அடிக்கரும்பு ருசியாகத் தான்
அடிமனசில் இனிக்கிறீயே!
பேச்சிலதான் வெல்லம் சேர்த்து
போங்க ”மாமா”ன்னு சொன்னே!
காய்ச்சலால கிடக்குறேறேனே!
கைவிரல் பட்டால் தணியுமேடி!
கவிஞர் கே. அசோகன்