முத்தங்கள் அன்பின் முழூ வரி

முத்தங்களின்
முதல் வரி
படித்த மேதை யார்...?
இதல்களின் படிமங்கள்
வெறும் இயற்பியல் இல்லை..
குழந்தையின் முத்தம்
குதூகலத்தின் எல்லை...!
பெற்றவர்களின் முத்தம்
பிறப்பின் அர்த்தம்...!
உடன் பிறந்தோர் முத்தம்
ஒப்பில்லா உலகம்...!
மூத்தோர்களின் முத்தம்
ஆதரவின் நிதர்சனம்...!
காதலியின் முத்தம்
வான்வெளி ஆயில்யம்...!
மனைவியின் முத்தம்
ஆயில்யத்தின் பேரின்பம்...!
கைகளின் வரியை விட
இதல்களின் வரியே
வாழ்வின் ஆத்மார்தம்!

எழுதியவர் : சுரேஷ் குமார் (23-Sep-17, 11:18 pm)
பார்வை : 94

மேலே