கண்கள் தேடிடும்
ஆழ் கடலில் கடலோடியின் கண்கள் தேடிடும் கரையை...
ஒற்றை காலில் நின்றாலும் கொக்கின் கண்கள் தேடிடும் மீனை..
முப்போகமும் பொழியாதா என உழவனின் கண்கள் தேடிடும் மழையை..
தன் உயிரை பணயம் வைத்த போர்வீரனின் கண்கள் தேடிடும் எதிரியை..
ஊழல் செய்யும் அரசியல்வாதியின் கண்கள் தேடிடும் மறதி நோய் கொண்ட மக்களை..
பசியில் வாடும் ஏழையின் கண்கள் தேடிடும் மனிதரில் கடவுளை..
ஏனோ என் கண்கள் மட்டும் தேடுதடி என் வாழ்வில் நிஜமாக இருந்து கனவாக மாறி போன உன்னை.. என்
உயிரில் உறைந்து போன உன்னை..