ஒரு வினோத பறவை
(மிகப்பிடித்த ஆசிரியைக்கு சமர்ப்பணமாக எழுதப்பட்டது)
ஒரு வினோத பறவைை
அந்தி மாலைப்பொழுது
ஆற்றோரமாய் ஓர் பொடிநட
அருகில் யாரும் இல்லை
அன்றோர் நாளில்...
காலை நனைத்தவாறே
இயற்கையை இரசிக்கலாம்
என நினைக்கையில்
ஆற்று நீரின் விம்பத்தில்
அழகான பெண் ஒருத்தி
தன் கூந்தலை விரித்தவாறு
இருப்பதாய் எண்ணி
நிமிர்ந்து பார்த்தேன்..
நீண்டு வளர்ந்த கிளைகள்
பரப்பிய மரமொன்று
கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது..
மரமாய் நான் அதனை நிமிர்ந்து
பார்க்கையில் பறவைகள் பல
தங்கள் வீடுகளிருந்து
என்னை எட்டிப்பார்ப்பதாய்
கர்வ பார்வைகளுடன்
என்னை நோக்கின..
பல கிளைகள் அதில் பல பறவைகள்
கூட்டு கூட்டாய் சேர்ந்து அவைகளின்
மொழியில் சிரித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன..
ஆனால் தனிக் கிளையொன்றில்
தனிப்பறவையொன்று
எதையோ சிந்தித்தவாறு
வானத்தை பார்த்து கொண்டிருந்தது...
பசுமை நிறைந்த மரத்தில்
ஏனோ அப்பறவை இருந்த
கிளையில் மாத்திரம் இலைகள்
இருக்கவில்லை..
அப்பறவையின் மெளனத்தில் நான் புரிந்த கொண்ட மொழிகள்..
தன் சிறகால்கடந்து போக
இவ்வானத்தின் எல்லை
சிறியதாய் இருக்கிறதே..
அதையும் தாண்டி எல்லைகள்
இருந்து விடக்கூடாதா என்று..
அக்கிளை மாத்திரம் இலை இழக்க
காரணம்அவ் ஆற்றோரமாய்
வழி மறந்து வலியுடன்
திரிபவர்களுக்கு திசை காட்டும் சின்னமாய் அவ்விலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை அப்பறவையின் அலகில் இருந்த மீதி
இலை உணர்த்தியது எனக்கு...!
சூரியன் உறங்கும் வேளை
சந்திரன் தன் வேலையை
செய்ய வந்த நேரம்
வானம் எனும் பெண்ணின்
நெற்றிப்பொட்டாய்
வந்த போது
மற்ற பறவைகள் எல்லாம்
விம்பத்தில் தெரியும் நிலாவின்
உருவத்திற்கு கலவரம் செய்து கொண்டிருந்தன...
கழுத்து வலித்த போதும்
அந்நிலாவின் சுயரூபத்தை
நிமிர்ந்துபார்த்து கொண்டிருந்தது
அப்பறவை..!
நிலவிற்கும் கவலைகள் நிறைந்தால்
அமவாசை எனும் பெயரில் அத்தினம் இருளாகி விடும்.. அத்தருணங்களில் உண்டவுடன் மற்ற பறவைகள் எல்லாம்
உறங்கி விடுகின்றன..
தன் கனவுகளை நனவாக்க
மின்மினிப்பூச்சியின் மேனி
வெளிச்சத்தில் தன் வேலைகளை
செய்து கொண்டிருக்கிறது
அப்பறவை...!
சூரியன் கண்விழித்தவுடன்
மற்ற பறவைகளெல்லாம்
கண்களை இன்னும் இருக்கமாய் மூடி
கண்யகர்கையில்..
தன் சிறகுகளை புற்களுக்கு
குடையாய் பிடித்திருத்தது அப்பறவை..
புல் மீதுள்ள பனித்துளி
சூரியக்கதிர் பட்டு உடைந்து விடக்கூடாதல்லவா..என்பதனை தான்
அதன் இறுதி இதழ் மெளன மொழியாய்
என் காதினுள் ஒலித்தவை...!!
என் விழிகளுக்கு அப்பறவை
வினோதபறவையாய் விளங்குகிறது..
உங்கள் விழிகளுக்கு எப்படி தோன்றுகிது
எனக்கு தெரியவில்லை...!