thangai

ராமனுக்கும் ருக்மணிக்கும்
நான்கவதாய் அவதரித்தாய்
சந்திரனையும் சூரியனையும்
சகோதரராய் பெற்றாய்
கிருஷ்ணனின் தமக்கை ஆனாய்
கீதைக்கு உபதேசம் செய்யும்
நல்ல தங்கை ஆனாய்

பதினாறு வயதினிலே
பூத்திட்ட பொழுதினிலே
வாலிப பருவத்திலே
வலம்வந்த நாளினிலே
தைரியத்தை கைகொண்டாய்
கண்ணியமாய் நடந்திட்டாய்
பெற்றோர்க்கு பெருமைதனை சேர்த்திட்டாய்


கல்லூரி பருவத்திலே
காலம் தாழ்த்தாமல்
கண்ணிமைக்கும் சுந்தரியாய்
கைப்பிடித்தாய் சுந்தரனை
கனிவோடு வாழ்ந்திட்டு
கனிகள் இரண்டை
கண்டிட்டாய் நலமோடு

சூர் என்ற ஸ்ருதிக்கும்
கர் என்ற கீர்த்திக்கும்
மாலே மாலே என்ற சுந்தரனுக்கும்
சன்சுன் என்று சுற்றும்
சுகமான சுந்தரியே
பெற்றிட்டாய் பவழும்தனை
விளையாட்டு அரங்கத்திலும் , கல்வி சாலையிலும்

வாழ்த்துக்கள் பரிமாற
வாய்ப்பை தேடிடுவாய்
பிறந்திட்ட நாளினையும்
மனந்திட்ட நாளினையும்
மறக்காமல் நினைந்து
வாழ்த்திடுவாய் மனமார
சுற்றங்களை இன்முகத்தோடு
இவ்வையாகும் உன்னை போற்றிட
அன்போடும் அறனோடும்
அணைத்திடுவாய் குடும்பத்தினை
என்று என்றும் மலர்ந்த முகத்தோட
வாழ வாழ்த்துகிறேன் உம்மை
வெள்ளிவிழா நாளினிலே
வாழ்க வளமுடன்
வையகம் போற்றிட
வாழ்க வளமுடன்

கீதா பாலசுப்ரமணியன்
அவ்வண்ணமே கோரும்
பாலசுப்ரமணியன்
பிரிஜேஷ்
சுஷ்மா

எழுதியவர் : (27-Sep-17, 11:06 am)
பார்வை : 114

மேலே