ஒரு போராளிக் குடும்பத்தின் போராட்டம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில், வலிகாமம் வடக்கில், பாக்கு நீரணையைத் தழுவி உள்ள கடலோரக் கிராமம் மயிலிட்டி. அக் கிராமம் தமிழ் நாட்டில் உள்ள கோடியக்கரையில் இருந்து’ தேற்கே 22 மைல் தூரத்தில், பாக்கு நீரணையின் இலங்கை கரை ஓரத்தில் அமைந்த கிராமம் என்பதால் அடிக்கடி அவ்வூர் மக்கள் தமிழ் நாட்டுக்குச் சென்று வருவதுண்டு. ஒருகாலத்தில் இலங்கையின் பிரசித்தமான மீன்பிடி துறைமுகங்களில், இரண்டாம் துறைமுகமாய் திகழ்ந்த இடம் மயிலிட்டித் துறைமுகம். பாலாலி இராணுவ முகாமுக்கு அருகே இருந்ததால் 27 வருடங்கள் இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்துக்குள் மயிலிட்டி வந்தது. அமைதியாக வாழ்ந்த அவவூர் மக்கள் தமது காணி, வீடுளை விட்டு வேறு இடங்களுக்குப் புலம் பெயர வேண்டி இருந்தது. கடலோரக் கிராமம் என்பதால் மயிலிட்டி சுறா மீனுக்கு தனி மதிப்பு. அவ்வூர் மக்களின் பிரதான தொழில் மீன் பிடித்தல். அதற்கும் பலத்த கட்டுப்பாடுகள்.
மாவீரர்கள் பலர் பிறந்த ஊர் என்பது அதன் தனிச் சிறப்பு. மயிலிட்டிக்கும் தமிழ் நாட்டுத் தலை நகர் சென்னையில் உள்ள மயலாபூருக்கும் ஒருகாலத்தில் தொடர்பிருந்ததாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து மயிலிட்டி கிராமப் பகுதிக்கு வந்த; நரசிங்கத்தேவன் என்ற சோழ அரச அதிகாரிக்கு பாதுகாப்பாக இருந்த ஈட்டிப் படையின் இலட்சணை மயில்.. ஆகவே அதில் இருந்து மயிலும் ஈட்டியும் இணைந்து மயிலிட்டி என்ற பெயர் கிராமத்துக்கு மருவி இருக்கலாம். வீரமாணிக்கதேவன். பெரியநாட்டுத் தேவன் பெயர் கொண்ட சோழ அரசின் தளபதிகள் இதன் அருகே சில பகுதிகளை ஆட்சி செய்ததாக வரலாறு சொல்கிறது. இதில் இருந்து இவ்வூர் மக்களின் இரத்தத்தில் வீரம் செறிந்துள்ளது என்பது தெரிகிறது அந்த வீரம் கலந்த மண்ணில் பிறந்தவன் மாணிக்கத்தேவன் (தேவன்). அவனின் பாட்டனார் மகாதேவனும். தந்தையான சுந்தரதேவனும் மீன் பிடி தொழிலை பல வருடங்களாச் செய்து வந்தவர்கள். சுந்தரம் ஒரு’ மோட்டார் படகுக்கு உரிமையாளன். அவனுக்கு உதவியாக இருவர். வங்களா விரிகுடாவில் அடிக்ப்கடி தோன்றும் புயலால் பாக்கு நீரணை பாதிக்கபடும். அதனால் மீன் பிடி தோழிலில் ஆபத்து நிறைந்தது என்பதை அறிந்த சுந்தரம் தன் ஒரே மகன் தேவனை தன் தொழிலில் ஈடுபட வைக்காமல், படிப்பித்து ஊடகத் துறையில் பட்டதாரியாக்கினார். யாழ்பாணத்தில் இருந்து வெளி வரும் பிரபல தினப் பத்திரிகையின் அரசியல் செய்திப் பகுதிக்கு உதவி ஆசிரியராக தேவன் வேலை செய்தான்.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்து தமிழ் இலக்கியத் துறையில் பட்டம் பெற்ற கமலாதேவியின் (தேவி) கவிதையிலும் இசையிலும் மயங்கிய தேவன், தேவியைக் காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்தான். தேவி பிறந்த’ஊர் மயிலிட்டிக்கு கிழக்கே 10 மைல் தூரத்தில் உள்ள தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கம் தோன்றிய கடலோரக் கிராமம் வல்வெட்டித்துறை.
தேவன் - தேவியின் மணவாழ்க்கையின் சின்னமாக ஒரு மகனும் மகளும் பிறந்தார்கள். வல்வெட்டித்துறைக்கு கிழக்கே 2 மைல் தூரத்தில் உள்ள பருதித்துறை. மகளிர் கல்லூரியில் ஆசிரியையாக தேவி வேலை செய்தாள். மண்வாசனையோ என்னவோ தேவியின் ரத்தத்தில் தமிழ் உணர்வு பொங்கியது. அவளது பாடல்களும் இசையும் மக்களின் தமிழ் உணர்ச்சியை தூண்டிவிடக்கூடியவை. அவளைப் போல் தேவனும் புனைப்பெயரில் தமிழ் ஈழம் பற்றி பல அரசியல் கட்டுரைகள் எழுதினான். ஜாடிக்கு எற்ற மூடி போல் தேவன் தம்பதிகள் தமது அறிவுத் திறமையை தமிழ் ஈழ விடுதலைக்குப் பயன் படுத்தினர்.
இரு தடவை வல்வெட்டிதுறை கிராமம் இரானுவத்தின் படுகொலக்கு உற்பட்டது. 1985 இல் இலங்கை இராணுவம் 70 மக்களை நூலகத்துக்குள் வைத்து படுகொலை செய்தது. அதை தொடர்ந்து 1989 இல் இந்திய அமைதிப்படை 64 வல்வெட்டித்துறை மக்களை பலி வாங்கும் நோக்கத்தோடு படு கொலை செய்தது. இந்த இரு சம்’பவங்களும் தேவனையும் தேவியையும் முழு மூச்சாக தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தோடு இணைய காரணமாக இருந்தன. இரு பிள்ளைகளையும் பெற்றோர் பொறுப்பில் விட்டு விட்டு தேவனும் தேவியும் போராளியானார்கள். பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் தங்கள் முடிவை மாற்றவில்லை
******
விடுதலை புலிகள் இயக்கத்தில் அவர்கள் இருவரின்
திறமைக்கு ஏற்றவாறு வேலைகள் கொடுக்கப்பட்டது. தேவன் ஊடகத் துறைக்கும், தேவி செய்தி அறிவிப்பாளராகவும்; வேலை செய்தார்கள். இயக்கத்தின் எழுச்சிப் பாடல்களை தேவி தன் இனிய குரலில் பாடினாள். அவளது குரலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இருவருக்கும் கெரில்லா பயிற்சி கொடுக்கப் பட்டது. தேவை படும்போது போரில் அவர்களின் சேவை பாவிக்கப் பட்டது.
ஒரு முறை ஆனையிறவு போரில் தேவன் ஈடுபட வேண்டி இருந்தது. அதுவே அவனின் முதல் போர் அனுபவம். மனித உயர்களை மதிக்கும் சுபாவம் உள்ள தேவனுக்கு துவக்கு ஏந்தி, தனக்கு’ அறிமுகம் இல்லாத மூவரை சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் ஒருவன் ஒரு குழுவின் கோப்பரேல். அவர்கள் திருப்பிச் சுட்டதில் தேவனின் இடது கால் சிதைந்தது. இது போல் பலரின் குருதி மண்ணோடு கலந்தது. அதுவே அவனின் வீரச் செயலுக்கு அவனுக்குக்; கிடைத்த பரிசு. தேவனின் ஆயுள் கெட்டி என்பதால் அவன் உயர் தப்பினான். நொண்டியான தேவனை அதன் பின் நடந்த போரில் ஈடுபட இயக்கம் விடவில்லை. அவன் இயக்கத்தின் ஊடகச் செய்திகளை எழுதுவதில் முழு நேரத்தையும் செலவு செய்தான். இயக்கத்தில் அவனைப் போல் ஒரு கையை இழந்தவன் வவுனியாவைச் சேர்ந்த முரளி. அடுத்தவன் ஒரு காலை இழந்த மன்னாரைப் பிறப்பிடமாகக்’ கொண்ட அந்தோனி. இருவரும் தேவனின் நண்பர்களானார்கள். இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தும் அரசின் தரப் படுத்தல் என்ற கல்விச்’ சட்டத்தால் படிப்பைத்; தொடரமுடியவில்லை.. இருவரினதும் குடும்பங்கள் இராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு உற்பட்டதால் முரளியும் அந்தோனியும் இயக்கத்தில் சேர்ந்ததாக தேவனுக்கு சொன்னார்கள். இருவரும் குறி பார்த்து சுடுவதில் திறமைசாலிகள். ஆணையிறவு போரில் இருவரும் குறைந்தது பத்து எதிரிகளை கொன்றிருப்பார்கள். அதனால் இயக்கத் தலைவரின் பாராட்டைப் பெற்றார்கள். அவர்கள் சுட்டு இறந்தவர்களில் இராணுவக் கேப்டனும்’. ஒருவன். இராணுவம் இதை நன்கு அறிந்திருந்தது. அவர்கள் இருவரையும் பலி வாங்கக் காத்திருந்தது
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திலும் தேவன் பங்கு கொள்ளவில்லை. அந்த போரில், பல பிற நாடுகளின் உதவியோடு இலங்கை அரசுக்கு வெற்றி கிட்டியதால் பல மக்களும் போராளிகளும் போர்க்கைதியானார்கள். அக் கைதிகளில் தேவனும், தேவியும் அடங்குவர்
வவுனியாவுக்கு மேற்கே பத்து . மைல் தூரத்தில் செட்டிக்குளம் கிராமத்தில் மணிக் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டது. சுமார் 60,௦௦0 அகதிகளை கொண்ட முகாம் அது. போராளிகளுக்கு பிரத்தியேக கண்காணிப்பு அதோடு குறுக்கு விசரணையும் சித்திர வதைகளும். தேவனுக்கும் தேவிக்கும் வாழ்க்கை போதும் போதும் மேன்றாகிவிட்டது
அன்று முகாமில் உள்ள நீரோடையில் இரு பிரேதங்கள் காயங்களோடு கிடப்பதைக் கண்டு ஓலம் இட்டனர். முகாமில் உள்ள அகதிகள். தேவன் போய் உடல்களை பார்த்த பொது அப் பிரேதங்கள்; முரளியினதும் அந்தோனியினதும் என்று கண்டு அதிர்ச்சி அடைந்தான். இதே நிலை ஒரு நாள் உங்களுக்கும் ஏற்படலம் என்று தேவி தேவனை எச்சரித்தாள். தேவனையும் தேவியையும் அடிக்கடி விசாரணைக்கு அழைத்து இராணுவம் மிரட்டியது அவர்கள் செய்த குற்றம், போராளிகளாக இயக்கத்தில் இருந்தது மட்டுமே
வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக முகாம் மூடப்பட்டு பல அகதிகள் தம் ஊருக்குத் திருப்பி அனுப்பப் பட்டார்கள்.. ஆனால் தேவனும் தேவியும் போராளிகளாக இருந்ததால் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பப் பட்டனர். அங்கு மீண்டும் இரு வருடங்கள் சிறை வாசம் கழித்தபோது தங்களின் பூர்வீக மயிலிட்டி காணியை வீட்டையும் இராணுவம் ஆக்கிரமித்ததைப் பற்றி தேவன் அறிந்தான். புனர்வாழ்வு மையத்தில் இருந்து தங்களுக்கு விடுதலை கிடைத்தால் போய் வாழ இடம் இல்லை என்பது தேவன் தம்பதிகளுக்கு தெரிந்தது. .தங்கள் பிள்ளைகள் இருவரும் தேவியின் சகோதரியோடு மட்டக்களப்பில் வாழ்வதை அறிந்து அவர்கள் மனதுக்கு நிம்மதி ஏற்பட்டது
******
தேவன் தம்பதிகள்; விடுதலையாகி இரு பிள்ளைகளோடு புது வாழ்வை கிளிநொச்சியில் ஆரம்பித்த பின் அவ்விரு போராளிகளின் மறு வாழக்கை போராட்டம் ஆரம்பமாகியது. அவர்கள் வாழ்ந்த பகுதி வாசிகள் போரில் ஈடுபட்ட இவர்கள் இருவரையும் பயங்கரவதிகளாக பார்த்தது அவர்களோடு பேசுவதை குறைத்தனர் தேவன் குடும்பத்தை ஏதோ பிற நாட்டவர்கள் போல் ஊர் வாசிகள் நடத்தினார்கள் அவர்களின் இரு பிள்ளைகளோடு தம் பிள்ளைகள் பழகுவதை அவர்கள் விரும்பவில்லை. ஏதோ பெரும் குற்றம் செய்து விட்டு சிறை சென்று வந்தவர்களாக அவர்களை சமூகம் பார்த்தது, அதுவுமன்றி தேவன் குடும்பத்தை பற்றி தேவை இல்லாத வதந்திகளை பரப்பினர், அரசு கொடுத்த உபகார பணத்தோடு அவர்கள் வாழ்க்கை, போராட்டம் நிறைந்த வாழ்வாக இருந்தது. சிறு கோழிப் பண்ணை வைத்து இரு பசுகளையும் வாங்கி, முட்டையும் பாலும் விற்று குடும்பம் நடத்தினார்கள். .
ஒரு நாள் தேவி கிளிநொச்சியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று மனம் உருகி கண்களில் நீர்வழிய பாடினாள். அவளின் குரல் கேட்டு பலர் மைய்மறந்து நின்றனர. இப்படியும் ஒரு குரலா என்று பலர் பெசிக்கொண்டனர் . கோவில் ஐயர் தினமும் வந்து அவளைப் பாடும் படியும். அதற்கு பக்தர்கள் தரும் பணத்தில் ஒரு பகுதியை தருவதாகவும் சொன்னார். தேவி அதற்கு “ ஐயா உம்கள் யோசனைக்கு நன்றி எனக்கு கடவுள் தந்த குரல் இறைவனுகே” என்று பணம் வாங்க மறுத்து விட்டாள்.
ஒரு கால் இல்லாத தேவனுக்கு ஓடி ஆடி வேலை செய்வது கடினமாக இருந்தது. தன் நேரத்தின் பெரும் பகுதியை, இயக்கத்திலும். அகதிகள் முகாமிலும் புனர்வாழ்வு மையத்திலும் தன் அனுபவத்தை கருவாக வைத்து நாவல் ஒன்றை எழுதத் தொடங்கினான். அதன் முதல் அத்தியாயத்தை தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் “ மக்கள் விடுதலை” என்ற வாரப் பத்திரிகை ஒரு போராளியின் போராட்டம் “ என்ற தலைப்பில் முதல் அத்தியாயத்தை அனுப்பினான். அப் பத்திரிகையின் ஆசிரியர் அதை வாசித்து விட்டு தேவனை தொடர்ந்து எழுதும் படி சொன்னார். அதற்காக வெகுமானம் தருவதாக பதில் எழுதினார். தேவனின் நாவலால் பத்திரிகை விநியோகத்தின் எண்ணிக்கை அதிகரித்தது.
தனது ஊடகத் துறை அனுபவத்தைப் பற்றி ஆசிரியருக்கு தேவன் எழுதியபோது அவர் ஆச்சரியப் பட்டார். தயக்கமின்றி மாதச் சம்பளத்தில் இலங்கையின் அரசியல் செய்தி நிருபராக தேவனை நியமித்தார். இதை அறிந்த கானடா இணையத்தளப் பத்திரிகை ஒன்றும் தேவனின் எழுத்துக்கு மதிப்பு அளித்து அவனை தங்கள் இணையத்தளப்; பத்திரிகைக்கு எழுதும் படியும் அதற்கு தகுந்த சன்மானம் தருவதாக அறிவித்தனர் இரு ஊடகங்களில் இருந்து வந்த பணம், ஏழ்மையில் இருந்த தேவன் குடுமபத்துக்கு பெருதும் உதவியது
தேவி ஊர் பிள்ளைகளுக்கு இசை கற்றுக் கொடுத்துப்’ பிழைத்தாள். ஒரு போராளி குடும்பதத்தின் போராட்டம் நிறைந்த வாழ்;வை அறிந்த வட மாகாண அரசு அவர்கள் வாழ கிளிநோச்சியிள்; ; இரு அறைகள் கொண்ட வீடு ஒன்தறி கொடுப்பதுக்கு தேனோடு தொடர்பு கொண்டது. வாடா வட மாகாண முதல்வர் சார்பில் தன்னை சந்திக்க வந்திருந்த அதிகாரியிடம் தம் மனம. விட்டுப்’ பேசி தங்கள் கோரிக்;கையை தேவனும் தேவியும் சொன்னார்கள்
“ ஐயா எமக்கு மயிலிடியில் உள்ள எமது பூர்வீக காணி நிலமும் வீடும்
வேண்டும். அதை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து எமக்குப் பெற்று தாருங்கள் அது போதும். எமது திறமையை வைத்து நாம் பிழைத்துக் கொள்வோம்: என்றார்கள் .
அதிகாரி வாயடைத்துப்; போனார். அதே நேரம் அரசியல் சூல்நிலை மாறியதால் 27 வருடங்களுக்கு பின் மயிலிட்;டியை விட்டு இராணுவம் வெளியேறியது. .போராளி தம்பதிகளின் போராட்டம் வெற்றி நடை போட்டது . தனது வீட்டில் இருந்தே தேவன் ஊடக செய்தியாளனாக வேலை செய்தான் . தேவி இசைக் கல்லூரி நடத்தினாள்.
அன்று தேவனுக்கு எதிர்பாராதவாறு தொலை பேசி அழைப்பு ஓன்று வந்தது. பேசியது தமிழ் நாட்டுப் பத்திரிகை மக்கள் விடுலைப்’ பததிரிகையின் ஆசிரியர
“என்ன தேவன் எப்படி போகுது உமது போராட்டம் நிறைந்த வாழ்க்கை”
ஆசிரியர் கேட்டார்
“ எதோ எங்கள் இருவரினதும் கல்வியும், திறமையும் எமக்கு கை கொடுக்கிறது எனது மயிலிட்டி கிராமத்தில் உள்ள என்பூர்விக வீடும் காணியும் திரும்பி கிடைத்து விட்டது ஐயா” தேவன் சொன்னான்;
“ அப்படியா? மகிழ்ச்சியான செய்தி. இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உமக்குச் சொல்லப் போகிறேன் தேவன்” ஆசிரியர் சொன்னார்
“என்ன செய்தி ஐயா”?
“ நீர் எமது பத்திரிகைக்கு எழுதிய ஒரு போராளியின் போராட்டம் என்ற தொடர் நாவலை தொகுத்து எமது பிரசுரம் எமது சொந்த செலவில் வெளியிட்டது. அதற்குத் தமிழ் நாட்டு அரசின் இலக்கியத்துக்கு முதல் பரிசாக ஒரு இலடசம் இந்திய ரூபாய் உமக்கு கிடைத்துள்ளது. இதனால் எமது பத்திரிகைக்கும் உமக்கும் பெரும் பெருமை” என்றார் ஆசிரியர்.
“ என்ன ஐயா சொல்லுகிரீர்கள் உண்மையகவா” தேவன் கேட்டான்
“ஆமாம் உண்மை தான் சொல்லுகிறேன் தேவா . இது ஒரு ஈழத்து எழுதாளருக்கு தமிழ் நாட்டு அரசின் இலக்கியத்துக்கு கொடுத்த முதல் பரிசு. நீர் குடும்பத்தோடு இங்கு வந்து பாராட்டையும் பரிசையும் பெறுவதற்கு எமது பத்திரிகை ஆவன செய்யும். நீர் செலவைப் பற்றி கவலைப் படத் தேவை இல்லை.” என்றார் பத்திரிகை ஆசிரியர்
தேவனும் தேவியும் திகைத்து நின்றனர்.
{யாவும் கற்பனை)
********