தொடர் வண்டி

பனி நிறைந்த அதிகாலை வேளை .அலாரம் அலற ஒலி எழுப்பியது கடிகாரம். சிவாவும் சட் என எழும்பி இன்றைக்காவது அந்த வண்டியை பிடித்து விட வேண்டுமென
நினைத்தவாறு வேகமாக புறப்பட்டு சென்றான். பேருந்து தரிப்பிடத்தை நோக்கி சென்றவன் எதிர்பார்த்தபடி பேருந்து வரவும் ,"எப்படியாவது முயற்சி செய்து இன்று அவளிடம் பேசி விட வேணும்" என
மனதில் நினைத்தவாறு, ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். கண்கள் அவளை தேடி நாலாபக்கமும் அலைந்தது. என்ன இது என்னும் அவளை காணேல்லை.மனம் மெல்ல அங்கலாய்க்கத்
தொடங்கியது. ஏமாற்றமாக இருந்தாலும்,அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் கண்ணை வெட்டாமல்
வாசலை பார்த்தபடி
பயணித்தவாறு சிந்திக்க
ஆரம்பித்தான் .இவள் தான் எனக்காக பிறந்தவள்,ஏன் இவள் மீது
மட்டும் இத்தனை
கரிசனை. ஒவ்வொரு மணித்துளியும் இனிமையாகி ,அவளைப் பற்றி எண்ணுகையில்
என் மனமெங்கும் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கிறதே. என எண்ணியபடி காலைத்தென்றலின் தென்றலும் மெல்ல உரசிச் செல்ல, அவன் எதிர்பார்த்த அந்த அழகு தேவதையும் அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் .அமர்ந்து கொண்டவள் வேறு யாரும் இல்லை ,இருவருமே ஒரே கிராமத்தை சேந்தவர்கள் தான்.அவள் பெயர் கயல்விழி . இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க
கயல் சிவாவை பார்த்து "ஹாய்" என்றபடி புன்னகைத்தாள்.அவனும் "ஹாய் கயல் "என்றபடி உரையாடத் தொடங்கினர் .
அப்போது சிவா கயலைப்
பார்த்து
"கிராமத்தில் நாம் சிறியவர்களாக இருந்த காலத்தில், என்னோடு சண்டை போட்டு, கோபப்பட்டு சென்றவள் தானே ,பின் காலமாற்றத்தில் வெளிநாட்டுக்கு சென்றவள் தானே " என கேட்டு ,"அது சரி
நீ இன்னும் திருமணம் செய்யவில்லையா "என வினவ ,தான் திருமணம் செய்து கணவரைப் பிரிந்து வாழ்வதை
வெளிக்காட்டாமல் ,"ஒம் சிவா ,நான் திருமணம் முடித்து விட்டேன்" என கூறி விட்டு ,சிவாவை பார்த்து, "அது சரி சிவா நீ என்ன மாதிரி, கல்யாணம் செய்து வாழ்வில் செட்டிலாகி விட்டாய் தானே" என்று கேட்கவும்
சிவா வயதை கடந்தும் திருமணம் இன்னும் செய்யவில்லை என சொன்னால் என்னைப் பற்றி கயல் என்ன நினைப்பாள் என எண்ணியபடி ,

என்னுடைய வாழ்வு யுத்தத்தால் இப்படியானதே என்ற எண்ணம் ஒரு கணம் மனதை வாட்டி வதைத்து செல்ல அதை சமாளித்தபடி, "ஒம் கயல் நானும் திருமணம் முடித்து விட்டேன் "
என கூற மதியும் "ஓ, அப்படியா ,சந்தோசம் சிவா, நானும் இறங்கிற இடம் வந்திட்டுது, இந்தா ,இதில் என்னுடைய அலைபேசி இலக்கம் இருக்குது."என தன் இலக்கத்தை எழுதி கொடுத்து விட்டு அவனை நோக்கி கையசைத்தபடி கீழே இறங்கினாள்

அப்போ அவள் போவதை வருத்தத்தோடு பார்த்துவிட்டு அலைபேசி இலக்கத்தை பார்த்தான். லண்டன்

எழுதியவர் : காலையடி அகிலன் (28-Sep-17, 10:18 am)
Tanglish : thodar vandi
பார்வை : 270

மேலே