சென்ரியு முயற்சி

நெடுநாள் கழித்து
குளிக்கிறது நொய்யலாறு
சோப்பு நுரை பொங்க...!

தமிழக விவசாயிகளே
காவி கோமணமணியுங்கள்
இந்தியா வண்ண குருடாகிவிட்டது...

பொதுவாக இருப்பதில்லை
இருந்தாலும் வேலை செய்வதில்லை
கண்காணிப்பு கேமராக்கள்...!

கதை எழுத ஓராண்டாயிற்று
நாடகத்தின் பெயர்
விசாரணை கமிஷன்...!

வைகையின்பால் சூரியனின் காதலை
தடுக்கமுடியுமா
தெர்மேகோல் சுவர்களால்...?

சிரிக்கிறது செல்போன்
அழைக்கிறாள்
காதலி...!

அதிர்கிறது அலைபேசி
அழைப்புத் திரையில்
மனைவியின் பெயர்....!

மனைவி சாமி கும்பிடுகிறாள்
என் கண்கள் காண்கிறது
ஒரு சாமியை மட்டும்...!

நீ அடிக்கடி பார்ப்பதால்தானோ
எனனையும் அழகாய் காட்டுகிறது
நம் வீட்டு கண்ணாடி...!

தள்ளாடும் தாத்தாவிற்கு
பாலூட்டும் பேரன்
கருணைக்கொலை...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (28-Sep-17, 4:21 pm)
Tanglish : senriyu muyarchi
பார்வை : 212

மேலே