என் உலக அழகி

பெண்ணே உந்தன் கருவிழியில்
தவறி நானும் விழுந்துவிட்டேன்....
இதமாய் இங்கே இருக்கிறதே...
துணைக்கு நீயும் வர வேண்டும்...
பேசி சிரிக்கும் சிலை நீயே
உன் இதழில் வடியும் தேன் மொழியே...
செவிகள் திறந்தே காத்திருக்கு
காதல் மொழிகள் நீ பேச...
வங்க கடலே வரி அலையே
அவளிடம் பேச வலிமை கொடு...
தங்க தமிழே தனி அழகே
அவளிடம் பேச வார்த்தை கொடு....
மரமே மழை தரும் துளியால்
வானில் வண்ண கோலமிடு...
மனமே கண் தரும் அழகை
வண்ண நிலவாய் மாற்றிவிடு....
உன்னை படைக்கும் வேளையிலே
சித்த பிரம்மை பிரமனுக்கு....
அளந்து வைக்கும் அழகதுவே...
அள்ளி வைத்து அனுப்பிவிட்டான்...
ஊருக்கு உலக்குக்கு தெரியாது
உலக அழகி நீ என்று...
உனக்கு அங்கே மணிமுடிக்க..
எனக்குள் நானே மேடை வைப்பேன்...
பா.முருகன்