என் உயிர் தங்கை சம்ஹா

*என் உயிராய் உடன் பிறவா தங்கை...???????*🤔🤔🤔🤔

எங்கோ பிறந்தோம்...
எங்கோ வளர்ந்தோம்...
சிறு சிறு ஓடை போல்...
படிப்பு என்னும் படகு தான்
கடலெனும் கல்லூரியில் சேர்த்ததோ...
அன்பெனும் முத்தெடுக்க!!!...

பிரபலமான பெயர் பெற்ற
கல்லூரி நமது...
அதன் பெயர்
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்...
உந்தன் பெயர் மட்டுமே
மனக்கண்ணில் துள்ளி ஓடும்!!!...

எங்கே பார்த்தோம்???...
எப்படிப் பேசினோம்???...
என நானறியேன்...
ஆனால்...
நம் நண்பர்கள் நம்மைப் பற்றி பேசினர்
இவர்கள் உடன் பிறவா
அண்ணன் தங்கை என!!!...
நம் உறவிற்கு பெருமை சேர்க்க
வேறெதுவும் உண்டோ?!!!...

உன்னைக் காணும் வேளையிலே
என் மனதின் ஓரம்
இனம்புரியா சந்தோஷம்...
எதையோ சாதித்து விட்டதைப் போல்
மனம் இறக்கை கட்டிப் பறக்கும் விண்ணிலே!!!...

உன் தங்கை போகிறாள் என
நண்பர்கள் காதருகே கிசுகிசுக்க...
ஒரு நிமிடம் கண்கள் அலைபாய்ந்து ஓயும்!!!...

உன்னைக் கண்டு விட்டாலோ
என் இதழ்கள்
புன்னகைப் பூவை உதிர்த்து மலரும்!!!...

உன்னை காணாத தருணங்களில்
மலர்ந்த என் முகமும்
வாடிய மலராய் சோகத்தை உதிர்க்கும்!!!...

சில சமயம் என் மனது
உன்னைக் காண துடிக்கும்...
மனதின் ஓசை அடங்கும் முன்பே
கண்ணிற்கு முன்னே
உன் பிம்பம் நிழலாடும்
ஒரு புன்னகைப் பூவினை உதிர்த்து!!!...

உன்னிடம் பேச நினைக்கும் வேளை
உன் தொலைபேசி மணியோசை...
என் மனதின் ஓசையை
யார் வந்து சொன்னதோ
இத்தனை விரைவில்??!!!...

சின்ன சின்ன சண்டை
செல்லமாய் ஒரு கோபம்...
மனதிலோ இனம்புரியா இன்பம்.....

என் உடன்பிறப்பு உடனிருக்க
உடன் பிறவா உன்னையும்
உடனிருந்து அழைத்துச் செல்வேன்!!!...

நாம் சென்ற பேருந்து
நம் அன்பினை தாங்கிச் செல்லும்...
பேருந்து நிறுத்தம்
நம் கதையை பல வருடம் சொல்லும்!!!...

நிரந்தரமற்ற கல்லூரி நாட்கள்
நிரந்தரமாய் முடிந்தாலும்.....
பிரிவின் வலியோ
துளி கூட இருக்காது !!!...

முற்று பெறும் அன்பிற்கு தான்
பிரிவின் வலியே தவிர...
தொடரும் நம் அன்பிற்கு இல்லை!!!...

நம் நட்பின் பயணங்கள் முடிவதில்லை...
நம் அன்பைப் போல் தொடர் கதையாய்!!!...

பல்லாண்டு நீ வாழ்க...
என் உடன் பிறவா உடன் பிறப்பே!!!...

என்றும் உன்னுடன் உடன் பிறப்பாய்.....
*மபாஸ்*

எழுதியவர் : மபாஸ் (29-Sep-17, 7:14 pm)
Tanglish : thangai
பார்வை : 87

மேலே