அம்மனா சும்மா இல்லடா என் வாழ்க்கை
ஐஞ்சு பத்துனு கொஞ்சம் கொஞ்சமா சேத்து வைப்பா.
குடிகார அப்பங்கிட்ட இருந்து காச பத்திரமா காத்து வைப்பா.
அவ நெஞ்சுல ஆச புள்ள நான் இருக்க காசு பணம்மெல்லாம் பெருசு இல்லனு
பள்ளிகூடம் போகையில ஐஞ்சு ரூபாய பிஞ்சு விரலுல வைச்சு மடிச்சுடுவா.
எத்தன போரு இருந்தலும் உலகத்துலையே அவளுக்கு உசத்தி
நான்தானு ஏன் நெஞ்சுல அவ இடம் புடிச்சுடுவா.
அவள் இருந்தா சோரு போட்டு ஊட்டி விடுவா .
துவைச்சு துணிய போட்டுவிடுவா.
ஐம்பது வயசு வரைக்கும் கொடுக்க வேண்டிய அன்ப நான்
ஒன்பதாவது படிக்குர வயசுலையே கொடுத்துட்டா.
போதும்னு நினைச்சானோ என்னமோ ஆண்டவன்
எங்க அம்மா வயித்துல கேன்சர வைச்சான் -
இந்த வையத்துல இருந்தே கேன்சலும் பன்னிட்டான்..
இறக்கமற்ற ஆண்டவனின் நெஞ்சமது
உறக்கமற்ற இறவுகளே எனக்கும் இங்கு மிஞ்சியது.
இரவில் என்னோடு சேந்து உறக்கம் துறந்த என் கணினியின் கண்ணீர் இது!