என்னலாம் நடக்குமோ
கயவனையே
காத்துநிக்குது
காக்கிசட்டை!
கணித்து பேசுனா
குண்டர் சட்டம் பாயுது
அவன் மேல!,
நூல்மேனியன்
நுன்கருத்து - எதிர்
கேட்டால் தேசவிரோதி !
சிலை மேனியின்
சிறு கீறல்
வன்முறையின் உச்சம்!
சிசுவையும் தீயிலுடு
தீர்ப்பே அவனாக்கம்,
பசுவை பந்தாடு
பாசறை யுனை தாக்கும்!
பள்ளியறை மையங்கொண்டா,
பாசாங்கு போலாகும்,
மிச்சமும், சொச்சமும்
வீதியில் சருகாகும்!
மேனிமூடி வீதிவந்தா
மேலங் கன்வாடி மூடிக்கொல்லும்,
வேண்டாவா, வேண்டவா
நிலைப்பாட்டின் வேதநிலை!
தன்மானம் பேசிவிட்டா
தற்காப்பு மேலாகும்,
தடைகள், தடைகள், தடைகள் ...
இதன் பொருளாகும்