முதற் கவிதை Ever

முதற் கவிதை (Ever)
==================
For My Wife

என்னிடம் ஏதும் இல்லாத நிமிஷங்களே இல்லை
கூட நீயிருக்கும்வரை

அடைத்த கதவின் ஒருபுறம் நீயும்
மறுபுறம் நானும்
எண்ணங்கள் கூடாதே
இதுவரை
இடுக்குகள் பரிமாறின

அயல்நாடுகளின்
ஸ்நூக்கர் போர்ட் சப்தத்திலிருந்து
பூக்கள் பூக்கின்ற மீயொலிகள்வரை
அடகுபோன
மூளை பேனாவிற்கு,
நீ தலைக்கோதிய உறக்கத்தின் பின்னால்
என்னிடம் சொல்லிய எல்லாமே
முதற் கவிதைதான் "கனவு சேமிக்கிறேன்"

இனி தினமும் காலையில்
அப்போ போல
உன்னை சுமந்துக்கிட்டே
சமயலறைக்குப் போறேன்
கண்களை மூடிக்கோ
முன்னால்
நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
உன் செவிகளை பொத்திக்கொள்
நிசப்தம்
உனக்குப்பின்னால் தான்
உன்னை சுமந்துகொண்டிருக்கும் நிசப்தம்
நான்தான்
ஆதலால்
உன் செவிகளை
என் கழுத்தோடு சேர்த்து நன்றாகப் பொத்திக்கொள்

எப்போதும்
என்கூட நீ வெளிய வாறப்போ
எல்லோரும்
நம்மைப் பார்க்கவேண்டுமென்றே நினைப்பேன்
இப்போது,
நம்மைச்சுற்றி யாருமில்லாத இந்த நேரம்,
நான் மட்டுமே
உன்னைப் பார்க்கவேண்டும் ம்ம்
மழை தூறுது
வெளிய போலாமா ம்ம்
உனக்குப்பிடித்த ஆடை உடுத்திக்கொள்
இன்னொருமுறை
சிட்டி டவரின்
கடைசித் தளத்திற்கு அழைத்துப்போகிறேன்
இந்த தடவை
நம்மோடு
அன்று வந்த யாரும் வேண்டாம்
நாம் மட்டும் போதும்
அன்று உன் வெட்கத்தை சரியாகப் பார்க்கவில்லை
சேலை வாசமுமாய்
காற்றுமோதும் நிலவு உனக்கு
உன் காலடிக்குக்கீழே
சாலை நகரும்
நட்சத்திரங்கள் காண்பிக்கிறேன்
எங்கே, இப்போ கொஞ்சம் வெட்கப்படு
பார்த்து ரசிக்கிறேன் ம்ம்

மின்குமிழியின் மங்கல் வெளிச்சத்தில்
செல்ஃபிக்கள் க்ளிக்கலாம்
பிடித்த உணவை
ஆர்டர் செய்து பரிமாறிக்கொள்ளலாம்
பிடிக்குமென்றால்
முத்த விலக்கு தடை செய்கிறேன்

இந்த வருடத்தின்
என் முதல் டைரியின் பக்கங்கள்
தீர்ந்துகொண்டிருக்கின்றன
சீக்கிரம் சொல்
உனக்குப்பிடித்த இன்னோவாவில்
எங்கே போகலாம் ம்ம்
நீ அருகில் அமர்ந்துகொள்
நான் ட்ரைவ் செயகிறேன்
ஒன்றும் தெரியாதவன்போல்
உன்னை என்மீது மயக்கிக் கிடத்தும் இசை போதிக்கிறேன்
இதற்கெல்லாம் முதல் பட்சமாக
நம் உள்ளங்கைகள் ஸ்பரிசித்துக் கொள்ளட்டும்

பூக்காரன் கவிதைகள்

எழுதியவர் : அனுசரன் (1-Oct-17, 2:33 am)
பார்வை : 224

மேலே