எதை பிழை சொல்ல நான்

நான் இருண்டு
கிடக்கும் போது
நிலவாய் வந்தாய்

நான் வறண்டு
கிடக்கும் போது
மழையாய் வந்தாய்

நான் புரண்டு
கிடக்கும் போது
கனவுகலாய் வந்தாய்

நான் விழித்து
கிடக்கும் போது
நினைவுகளாய் வந்தாய்


நான் தவித்து
கிடக்கும் போது
நீராய் வந்தாய்

நான் பசித்து
கிடக்கும் போது
அன்னமாய் வந்தாய்

நான் புசித்து
முடிக்கும் போது
ஏப்பமாய் வந்தாய்

நான் விசித்து
அழும் போது
கண்ணீராய் வந்தாய்

நான் ரசித்து
பார்க்கும் போது
காட்சிகளாய் வந்தாய்

நான் யோசித்து
கிடக்கும் போது
தர மறந்தாய்
எனக்கான பதில்லை

நான் யாசித்து
கிடக்கும் போது
வர மறுத்தாய்
என் அருகில்

நான் சுவாசித்து
கிடக்கும் போது
மூச்சை நிறுத்துகிறாய்
மறக்க சொல்லி

நான் நேசித்து
கேட்ட போது
தர மறுத்தாய்
உன் இதயத்தை

என் கனவுகளையா
உன் நினைவுகளையா
என் காதலையா
உன் பார்வைகளையா
உன் புத்திசாலித்தனத்தையா
என் பைத்தியக்காரத்தனத்தையா
எதை பிழை சொல்ல
என தெரியாமல்
நானும் என் நேசமும்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (30-Sep-17, 10:52 pm)
பார்வை : 159

மேலே