ஜென்மங்களின் ரகசியம் --- முஹம்மத் ஸர்பான்

அதிகாலை மேகங்களுள்
கனவுகளை சேமிக்கிறேன்
இதயத்தின் செல்களை
சஹாராவில் தேடுகிறேன்
மூங்கில்களின் தீக்குளிப்பில்
அகதியாகிறது புன்னகை
சந்திரனின் குடிசையில்
இரவுகளின் சமாதிகள்
கண்ணீரின் சிலுவைகள்
நினைவுகளின் ஜாமீன்கள்
தனிமையின் கூட்டுக்குள்
பரிதாபமானது ஜோசியம்
என்னவளின் கால்தடங்கள்
நண்டுகளின் கவியரங்கம்
பூக்களினுள் மறைகின்ற
வெட்கத்தை தேடுகிறேன்
கண்களை தொலைத்து
குருடனாய் அலைகிறேன்
முத்தங்களின் ஆசிட்டில்
காமங்கள் சாம்பலானது
என்னவளின் கன்னங்கள்
கவிஞர்களின் தாஜ்மஹால்
முகமூடியின் முகவரியில்
முகப்பருக்களும் அதிசயம்
உனக்காக சுவாசிப்பது
ஆண்மையின் புண்ணியம்
அரபு தேச வரலாற்றில்
நீயும் நானும் ஆயிரம்
வருடங்களுக்கு முன்னர்
காதலர்களாக இருந்தோம்
உக்கிய என்புக் கூடுகளில்
உன்னையும் என்னையும்
தொல் பொருள் ஆய்வுகள்
ஆராயத் தேடி அலைகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-Oct-17, 5:47 pm)
பார்வை : 188

மேலே