தப்பாது
எய்தன எய்தன அம்புகள்
எல்லாப் பக்கமும் வம்புகள்
பெய்தன பெய்தன வசைமாரி
பேச்சுப் போனது திசைமாறி.
சேர்ந்த கொள்ளையர் சிதறிவிட்டார்
சிறந்த கொள்ளையர் பதவிபெற்றார்
தேர்ந்த கொள்ளையர் உதவிபெற்றார்
தெளிந்த கொள்ளையர் விலகிவிட்டார்.
பொய்யர்கள், புரட்டர்கள் ஒருகூடி
பொழைப்பு நடத்தினர் சதிமூடி
ஐயங்கள் வந்தது எப்போது?
அழிவு வருவது தப்பாது!