என் இதயத்துக்குள் இருந்துகொள்

பூட்டி வைத்த
ரகசியங்கள் யாவையும்
உன்னிடம்
கொட்டிக் கவிழ்க்கிறேன்

எனக்குள்
ஏதுமில்லையென
உனக்குச் சொல்லிவிடுவதில்
நிம்மதி எனக்கு

இரண்டு நாள் சாப்பிடாமல்
நான்தான் வெண்டுமென்று
உன் தந்தையிடம்
சண்டையிட்ட போதே
வென்றுவிட்டாய் என்னை

காணாமல் போய்விட்ட
உன்னைத் தேடித்தான்
காடுமேடெல்லாம் அலைந்தேன்

இதோ கிடைத்து விட்டாய் நீ
என்னை
நெஞ்சில் சுமந்துகொண்டு

உன்னை
மறுபடியும் தொலைக்கும்
எண்ணமில்லை
என் இதயத்துக்குள்
இருந்துகொள்
நிரந்தரமாக !

(இது கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடைப்பட்ட கதை )
@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (1-Oct-17, 10:01 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 368

மேலே