அகதி

என்ன பாவம் செய்தேன் !
ஏனிந்த சோதனை ?
எல்லை ஒன்றை வகுத்துக்கொண்டு ;
எதிரியாய் பார்க்கிறாய் !
அகதி பட்டம் தந்ததில் ;
அனாதையாய் நிற்கின்றேன் !
அடுத்து செய்வது என்னவென்று ;
அறியாத கணம் !
பால் முகம் மாறாத ;
பச்சிளம்குழந்தை கூட ;
பயங்கர வாதிகளா ?
பெண்ணின் அழுகையில் !
கண்கள் கசிகிறது எனக்கு !