நல்லிணக்கம்
இந்துக்கள் பெரும்பான்மை உள்ள நாட்டில்,
செயல்படும், கிருஸ்துவப்பள்ளியில் படித்த,
ஒரு ஏழ்மையான இசுலாமிய சிறுவனுக்கு தெரியும்.
மத நல்லிணக்கம் என்றால் என்ன என்று.
அவன் காலையில் பஜர் தொழுகைக்கு பள்ளி வாசல் சென்று இருப்பான்.
மதிய உணவிற்கு முன்பு பரம பிதாவே என பள்ளியில் பிராத்தனை செய்து இருப்பான்.
மாலையில் தனது இந்து நண்பர்களுடன் கோயிலில் கிடைக்கும் பிரசாத்திற்காக வரிசையில் காத்திருப்பான்.
இச்செயலுக்காக இவனை எந்த கடவுளும் தண்டிக்காதது தான் ஆச்சரியம்!
-அகரன்.