இயற்கை

இயற்கை
திசுக்களின் திசுக்களுக்கும்
உற்சாகம் தரும் ஓவியம்.

அவை பார்வைகளின் பரவசம்
சுவை நரம்புகளின் பரமசுகம்.

ரசனை தேவையில்லை
இமைகளைத் திறந்து வைத்தாலே
இதயத்தை நிறைக்கும்.

ரசிக்கத் துவங்கினால்
இயற்கை
முதலிரவு மாதிரி சுகமானது.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (2-Oct-17, 3:19 pm)
Tanglish : iyarkai
பார்வை : 900

மேலே