நீயே கவிதைதானே எனக்கு
உனக்கு வாழ்த்து சொல்ல
புதிதாய் பிறந்தது
நீயா இல்லை நானா?
உன்னை வாழ்த்த
புதிதாய் யோசித்து, யோசித்து
நானே புதியதாய் மாறிப்போனேன்.
யோசித்து, யோசித்தும்
பிறக்கவில்லை கவிதை??...
புதியதாய் இன்று
பிறந்த நீயே
கவிதைதானே எனக்கு.