அது வெறும் கருவி

பொத்தான்கள் அற்ற
இச்சிறு அலை பேசியின்
ப கி ரி வழியே தான்
முதன் முதலாய்
என் கண்கள் அழகாய் இருப்பதாக
எனக்கொரு குறுஞ் செய்தி அனுப்பினாய்..!

வானம் பூத் தூவலாய்
மழை விசிறிய
மஞ்சள் ஒளி மாலை நேர
தேவ கனமொன்றில் தான்
என்னை நேசிப்பதாக
மிகவும் விரும்புவதாக
செய்தி அனுப்பினாய்..!

இதன் அகன்ற மின் திரை வழியே தான்
தினமொரு தற்படம் அனுப்பி
நெஞ்சில் உன்னை பதியமிட்டாய்...!

பத்துக்கு பத்து படுக்கைறையில்
நெருங்கிப் புழங்குவதை போலத்தான்
தொடுதிரையில் தினம் தொட்டு தொட்டு
காதலையும் காமத்தையும் பெருக்கி வளர்த்தோம்
பருகித் திளைத்தோம்..!

இதன்வழி நேசம்
இதன்வழி காதல்
இதன்வழி முத்தம்
இதன்வழி தின வாழ்வென
இச்சிறு கருவியே நீயென ஆகிப் போனாய்..!

வரவேற்பறை
குளியலறை
உணவு மேசை என
எங்கும் உன்னை கைப்பிடித்து
அழைத்து செல்வதைப் போல
இந்த அலை பேசியை எடுத்து செல்வேன்..!

இன்றோ எல்லாம் போதும்
அத்தனையும் அழித்து விடலாம் என்கிறது
அதிர்ந்த ஓசையோடு வந்த செய்தியோடு
அக்கருவி

அது வெறுமனே ஒரு கருவி
அஃது
என்ன செய்ய முடியும் அது தவிர்த்து ..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (3-Oct-17, 3:24 pm)
Tanglish : athu verum karuvi
பார்வை : 600

மேலே