என் ஆசைகள்

.....என் ஆசைகள்....
மழலையின் மடியில் நான்
மழலையாக வேண்டும்...
வான் சிந்தும் மழைத்துளிகளைத்
தாங்கிடும் குடையாகிட வேண்டும்..
மலர்களின் இடையில் நானும்
புன்னகைக்கும் பூவாக
மலர்ந்திட வேண்டும்...
பூந்தோட்டம் நடுவில்
ஊஞ்சல் கட்டி
உல்லாசப் பறவையாய்
நானும் கூவிட வேண்டும்...
எண்ணங்களை
வண்ணங்களாய் நிறம்
மாற்றிட வேண்டும்...
வானத்தின் எல்லை காணும்
வரை காகிதக் கிறுக்கலை
நான் தொடர்ந்திட வேண்டும்...
குழந்தையின் சிரிப்பில்
எனை மறந்திட வேண்டும்..
மரங்களின் அணைப்பில்
ஓர் நாள் வாழ்ந்திட வேண்டும்..
உன்னத நட்பின் தோள்
சாய்ந்திட வேண்டும்..
அன்னை மடியினில்
முழு நாள் அழுதிட வேண்டும்..
தனிமையின் வரம் நீங்கிட
வேண்டும்...
உறவுகளை இணைத்து
புதுக்கவிகள் வரைந்திட
வேண்டும்...
இயற்கை விரிப்பில்
தூக்கத்தை தொலைத்திட
வேண்டும்...
இறுதியில் கல்லறைக்குள்
கண்ணீர் இல்லா
உறக்கத்தை தழுவிட வேண்டும்...