உயரம் ஒன்று -ஆழம் வேறு
விளக்கங்களால் மட்டும்
இதயத்துக்குள்
இறங்க முடியாது
ஆன்மாவின் செவி உணரும்
உண்மையின் பாடல்களை
உயரத்தில் சமமாயிருக்கும்
மரங்களின் வேர்கள்
பூமிக்குள் சமமென்று
யார் சொன்னது ?
நட்பும் காதலும்
ஒரே சட்டை போடலாம்
உள்ளுக்குள் இரண்டும்
ஒன்றல்ல !
நட்பு செய்வதையெல்லாம்
காதல் செய்யக்கூடும் .
காதல் செய்வதையெல்லாம்
நட்பும் செய்தல் அபத்தம் .
நட்பை உயரத்தில் வைத்து
பூஜிக்கலாம் .
அதற்காக
காதலை காலில் போட்டு
மிதித்துவிடக் கூடாது .
காதலை மதிக்காத நட்பு
கவலைக்குரியது !
காதலுக்காக
விலகிக் கொள்ளூம் சூழல் வந்தால்
ஒப்புக்கொள்ளும் நட்பே உயர்ந்தது !
நட்பு காதலாகலாம்
காதலான பின்பு
மீண்டும்
நட்பாக முடியாது
சிலர் பாலையும் தயிரையும்
ஒன்றாய் பார்ப்பது
தவிர்க்க இயலாத அவதி !
@இளவெண்மணியன்