மாறாதவை மண்ணிலே

கடந்து போகிறது
நிகழ்வுகளும் நாட்களும் ...
கரைந்து போகிறது
நிமிடங்களும்
நொடிகளும் ...
கூடுகிறது
வயதும்
அனுபவமும்...
பெருகுகிறது
கவலையும்
நோயும் ...
மாறுகிறது
சூழ்நிலையும்
தலைமுறையும் ...
தேய்கிறது
தேகமும்
ஆயுளும்...
வாழ்க்கையின்
மாற்றங்கள்
மறுப்பில்லை ...
இயற்கையின்
கூற்றுக்கள்
மாற்றமில்லை...
ஏற்றமும்
இறக்கமும்
சமுதாயத்தில்...
பிரிவுகளும்
பிணக்குகளும்
சமூகத்தில்...
சாதிகளும்
சச்சரவுகளும்
மனிதருக்குள் ...
ஆசைகளும்
கோபங்களும்
மனங்களுக்குள் ...
பிரிவுகளும்
சர்ச்சைகளும்
உறவுகளுக்குள்...
போட்டியும்
பொறாமையும்
உள்ளங்களுக்குள்...
மாறாதவை
அனைத்தும்
மண்ணிலே...
தீராதவை
என்றும்
பூமியிலே ...
பழனி குமார்
5.10.2017