முக நூல் தோழி
முக நூலில் முடி போட்ட நண்பர்கள் நாம்!.
முடிந்த முடுச்சுகள் அவிழும் எனில் என்
உயிர் முடிந்த பின்புதான் அது சாத்தியம் ஆகும் சாகி!!.
நாகரீகமான உன் நட்பு நடைமுறையில் இந்த ஆறடி கடலில் நங்கூரமாய் படிந்தவளே
உன் முகத்தை இன்னும் பார்த்ததில்லை உன் பால் முகத்தை பார்த்திருந்தால்
அன்னப்பறவை என பின் தொடர்ந்திருப்பேன்!.
மான் விழியை கண்டிருந்தால் இந்த வேடனும் வீழ்ந்திருப்பேன்!
இவள் அழகில் எதனை ஆண்கள் மழை என சரிந்து வீழ்ந்து
எழமுடியாமல் தவிப்பார்களோ?????
வரம் கேட்க துடிக்கிறது மனம் உன் கருவறையை!
மழலையாய் உன்னுள் மகிழ!! .
என் முகம் சிவக்கும் உன் அன்பு வார்த்தைகள் மருதாணி இடுகையில்.
கடிகாரமும் உன்னிடடம் பேச நேரம் ஒதுக்கும் தோழியே அளவாய் பேசும் உந்தன் குணம் அறிந்து
பெரிதாய் பேசியதில்லை என்னுடன் நீ அதை தான் பெரிதாய் பேசிக்கொண்டிருக்கிறது
என் மனம் மௌனமாய் நீண்ட நேரம் எனக்குள் .
இதயம் தொடும் ரத்தமும் உன் நினைவுகள் இல்லாமல் தொட்டால் உறைந்துவிடும் சகியே!!!
உன் அன்பு நட்புக்குள் மூழ்கிடவே இன்னும் உயிர் வாழ்கிறேன் நானடி!!
உன் அன்பை வளைத்து வானவில் கட்டி அம்பை எய்துகிறாய் என் கோபங்களை துளையிட!!
தொடர் மழையாய் தொடர்கிறது உன் அன்பு
அடைமழையை வேண்டி ஏங்குகிறேன் இன்னும் மழலையாய் உன் அன்பில் நினைந்து மகிழ
நீ உறங்க செல்லும் முன் தென்றலிடம் சொல்லி அனுப்புகிறேன்
தென்றலே சத்தமின்றி மெல்லமாய் தவழ்ந்து செல் இனிமேல் அவள்மேல் தொட விரும்பினால் .
ஏனென்றால் என் ஆருயிர் தோழி உறங்க செல்கிறாள் என்று
எதுவரை தொடரும் உந்தன் நட்பின் கணம்
அதையும் தாண்டி உன் நட்பின் நினைவுகளை சுமக்கும் என் மனம்!!
பித்தனின் பிழைகளை சிந்தையிலிருந்து மறந்துவிடு சத்தமின்றி இருந்துவிடாதே
என் ரத்தநாளமும் துளையிட்டு மொத்தமாய் செத்துவீழும்.
என் தாய் கருவறைக்கு கிடைக்காத வரம் நீயடி
இந்த நண்பன் அன்பு கருவறையில் பிரசவம் ஆகாத குழந்தையும் ஆனாயடி!!!!!!
நூறு வருடம் தாண்டியும் நீடூழிவாழ்வாயாக மகிழ்ச்சியாய் உன் தாய் தந்தையருடன்!!!!!