அனுபவித்த பின்பு
வெள்ளை நிறம்
எனக்கான கேளிக்கைகளை குறைத்திருக்கும்
எனக்கு பல நண்பர்களும்
பெண் தோழிகளும் கிடைத்திருப்பார்கள்
வாதிப் பிரதிவாதங்கள் எற்பட்டிருக்காது
பணம் என்னிடம் எப்போதும் ஒட்டிக்கொள்ளாத பசை
என் உரையாடலுக்கு செவிமடுத்தவர்கள் என் உருவத்தை ஒப்பனை செய்யாமல் சென்றதில்லை - ஆனால்
தனிமையில் இவற்றை ஜீரணித்து விடுவேன்
கண்களுக்கு கண்மை வேண்டுமேன்றால்
அதற்கு அழகில்லா கண்கள் வேண்டும்
எனக்கு இது தேவையில்லை
உருவத்தில் அழகை தேடவேண்டுமென்றால்
என் அறிவை அறிவால் தீட்டவேண்டும்
கத்தி கூராக இருந்தால்தான்
கத்தி என்று கூறுவதில் அர்த்தம் உள்ளது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
