பள்ளி கல்லூரியில் ஆண் பெண் காதல்
இரட்டை ஜடை பின்னலோடு..!
ஒற்றை கையில் புத்தகத்தோடு...!!
ஜூன் மாத காற்றை போல்..!
ஜொலித்தது வந்தாயேயடி பெண்ணே...!!
கணினி அறிவியல் பிரிவு கண்ணை கட்டும் என்றார்கள்..!
என்னை காட்டில் கட்டி விட்டாயாடி உன் வருகையால்...!!
என் காதலை மிருக்கத்திடம் பகிர்ந்தால் மனுசனாக மாறுமேயடி...!
நீ மட்டும் ஏனடி மிருகமாக மாறினாய்....!!
பள்ளி பருவம் முடிந்தது...!!
பகிர்ந்த என் காதலும்..!
பகிராத உன் காதலும் வகுப்றையிலே நின்றதடி....!!
ஆறு மாதங்கள் கழிந்தது...!
கனவு போல் தோன்றியதடி..!
ஒரே
கல்லூரியில் இருவரும் சேர்ந்தது...!!
உன்
இரட்டை ஜடை ஒற்றையானதடி..!
ஒற்றை கையில் இருந்த புத்தகம் வெற்றுவானதடி...!!
உன்னுள் பல மாற்றங்களை கண்டேனடி...!
என்னை ஏமாற்ற மாட்டேன் என்று நினைத்தேனடி....!!
ஆம்
நினைவுகள் எல்லாம் நிஜமானது..!
ஒருதலை காதல்
இருதலை காதலாக மாறியது...!!
காதலால் மனங்கள் இணைந்தது..!
காமத்தால் உடலும் இணைந்தது...!!
கருவும் உருவானது...!
கல்லூரியும் முடிவுக்கு வந்தது..!!
பிரிந்து சென்றோம்..!
காதலையும்,
கருவையும்
மறந்து சென்றோம்..!!
(பள்ளி கல்லூரி காதல் தவறே)