ஓட்டை
ஓட்டுரிமையுள்ள
ஒவ்வொருவனும்
அரசியல்வாதியே...!
ஆட்சியை
நிர்ணயிக்கும்
அதிகாரமுள்ள
அரசிய்லவாதி..!
நீ
ஓட்டு போட்டால்
வாக்காளன்...!
உன்
ஓட்டை விற்றால்
வியாபாரி...!
நீ
ஓட்டையும்
விற்றாய்
உன்
நாட்டையும்
விற்றாய்...!
உன்
அடிப்படை உரிமைகளை
அடிமைகளிடம்
விற்றுவிட்டு ..
அதிசயங்கள்
நடக்க
ஆசைப்படுகிறாய். .!
முதலில்
உன்
ஓட்டிலுள்ள
ஓட்டைகளை
அடை!
நாட்டிலுள்ள
ஓட்டைகள்
தானாக
அடையும்...!
- பா. மாறன்